அடிசன் நோய் என்றால் என்ன?
அடிசன் நோய் என்பது எண்டோகிரைன் அல்லது ஹார்மோன்-உற்பத்தி செய்யும் அமைப்புமுறையில் ஏற்படும் சீர்குலைவினால் வரும் ஒருவகை அரிய நோயாகும். இது அட்ரீனல் சுரப்பிகளில் இருந்து வெளிப்படும் கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டிரோன் போன்ற ஹார்மோன்களின் சுரப்பு குறைபாடு என்பதால், அடிசன் நோய் பொதுவாக அட்ரீனல் பற்றாக்குறை என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோய் பலதரப்பட்ட வயது பிரிவை சேர்ந்த மக்களை தாக்குவதோடு, ஆண் மற்றும் பெண் என இருபாலினரத்தையும் சமமாக பாதிக்கிறது. இது பலதரப்பட்ட வயதினரை தாக்குவதோடு, ஆண் மற்றும் பெண் ஆகிய இரண்டு பாலினங்களையும் சமமாக பாதிக்கின்றது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொதுவாக அடிசன் நோய்க்கான அறிகுறிகள் மெதுவாகவே வெளிப்படுகிறது. அவை பின்வருமாறு:
- உச்சகட்ட சோர்வு.
- எடை இழப்பு.
- பசியின்மை.
- உப்பு மிகுந்த உணவிற்கான விருப்பம்.
- குறைந்த இரத்த அழுத்தம்.
- குறைந்த இரத்த சர்க்கரை.
- குமட்டல் அல்லது வாந்தி.
- மிகை நிறமியாக்கம்.
- மன அழுத்தம்.
- வயிற்று வலி.
- தசைகள் அல்லது மூட்டுகளில் வலி.
- ஒரு சில சந்தர்ப்பங்களில், மயக்கம்.
- பெண்கள் இடத்தில் பாலியல் குறைபாடுகள்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
அடிசன் நோய் பொதுவாக கார்டிசோல் மற்றும் ஆல்டோஸ்டிரோன் ஆகிய ஹார்மோன்களின் சுரப்பு குறைபாடு காரணமாக ஏற்படுகிறது. இது பொதுவாக அட்ரீனல் சுரப்பியின் கார்டெக்ஸ் பகுதி (சிறுநீரகத்தின் மேலே அமைந்துள்ள சுரப்பிகள்) சேதமடைவதால் ஏற்படுகிறது, எனவே, இது முதன்மை அட்ரீனல் குறைபாடு என்றும் குறிப்பிடப்படுகிறது.
அட்ரீனல் சுரப்பி செயலிழப்பிற்கான பொதுவான காரணங்கள்:
- அட்ரீனல் சுரப்பிகளில் ஏற்படும் இரத்தப்போக்கு.
- அட்ரீனல் சுரப்பிகளில் புற்றுநோய் பரவுதல்.
- காசநோய்.
- சில வகை பூஞ்சைகள், வைரஸ், ஒட்டுன்னி மற்றும் பாக்டீரியா போன்றவற்றினால் அட்ரீனல் சுரப்பிகளில் ஏற்படும் தொற்றுகள்.
இதை எவ்வாறு கண்டறிவது மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
அடிசன் நோய் தாக்கப்பட்ட ஆரம்பகாலங்களில் இதனை கண்டறிவது மிகவும் கடினமானது. எனினும் உங்களுக்கு உடலில் ஏற்படும் அறிகுறிகள் மற்றும் மருத்துவம் சார்ந்த வரலாறு விவரங்களை ஆராய்ந்து, உங்கள் மருத்துவர் முதலில் உங்களை உடல் ரீதியாக சோதனை செய்து பார்ப்பார்.
இதனைத் தொடர்ந்து, பல்வேறு ஹார்மோன்களின் அளவினை கண்டறிய சில உயிர்-வேதியியல் ஆய்வக சோதனைகளை பரிந்துரைப்பார். மேலும் வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் கால்சியம் படிந்துள்ள அளவினை சோதனை செய்ய நீங்கள் எக்ஸ்ரே எடுக்க நேரிடலாம். மேலும் கால்சியம் சேர்மானத்தை கண்டறிய வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் எக்ஸ்ரே எடுக்க பரிந்துரை செய்யலாம். இவற்றை தவிர அட்ரீனோகார்டிக்கோட்ராபிக் ஹார்மோன் (ஏ.சி.டி.ஹெச்) தூண்டுதல் சோதனைக்கு நீங்கள் பரிந்துரைக்கப்படலாம், இந்த சோதனையின் போது, அட்ரீனோகார்டிக்கோட்ராபிக் ஹார்மோன் (ஏ.சி.டி.ஹெச்) ஊசி உங்கள் உடலில் செலுத்தப்படுகிறது, இதன் மூலம் கார்ட்டிசோல் ஹார்மோன் உற்பத்தி மற்றும் அட்ரீனல் சுரப்பியின் செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது.
கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன:
- ஓரல் ஹார்மோனல் தெரபி-இதில் அட்ரீனல் சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்களுக்கு மாற்றாக வாய் வழி மருந்துகள் வழங்கப்படுகின்றன. இம்முறையில் உங்களுக்கு வாய்வழி மருந்தான ஹைட்ரோகார்டிசோன் மாத்திரைகள் அல்லது கனிம மூலக்கூறு கொண்ட மருந்துகள் (மினரலோகார்ட்டிகாய்டுகள்) பரித்துரைக்கபடலாம்.
- மேலும் ஹைட்ரோகார்டிசோனின் நரம்பு ஊசிகள் (ஹைட்ரோகார்டிசோனின் மருந்து நரம்புகள் மூலம் உடலில் செலுத்துவது) உங்களுக்கு பரிந்துரைக்கப்படலாம், ஹைட்ரோகார்டிசோன் உள்ள நரம்பு வழி ஊசிகள் (நரம்புகளுக்குள் செலுத்தப்படுகிறது) எடுத்துக்கொள்ளவும் பரிந்துரைக்கப்படலாம். இது விரைவான முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.