மிதமிஞ்சிய மதுப்பழக்கம் என்றால் என்ன?
ஒரு நபர் மதுபானத்திற்கு அடிமையாக இருப்பது அல்லது மதுவை சார்ந்திருப்பது, மது சார்ந்த சீர்குலைவு அல்லது மிதமிஞ்சிய குடிப்பழக்கம் என்று கூறப்படுகிறது. அத்தகைய நபர்கள் தங்கள் மகிழ்ச்சிக்காக கொஞ்சம் குடித்தாலும், மதுவின் தேவைக்காகவும் அதனை சார்ந்து இருப்பதினாலும் அதிகமாக குடிக்கின்றனர். குடிப்பழக்கத்தால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர் அதன் எதிர்மறை விளைவுகளை உணர்ந்தாலும், அவர்களால் குடிப்பதை நிறுத்தமுடிவதில்லை. குடிப்பழக்கமானது உடல்நலம், வேலை, நிதி ஸ்திரத்தன்மை மற்றும் உறவுகளை பாதிக்கின்றது.
அதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பல்வேறு வகையான உடலியல் மற்றும் நடத்தை அறிகுறிகள் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களிடம் காணப்படுகின்றன, அவற்றில் பின்வருவன அடங்கும்:
- மது அருந்தாமல் இருக்கும்பொழுது அதற்காக ஏங்குதல்.
- மதுவால் உடலின் அதிகரித்த சகிப்புத்தன்மை (அதிக அளவு மது பயன்பாட்டை ஏற்றுக்கொள்ளும் வகையில் உடல்நிலை மாறிவிடுவது).
- குமட்டல், உடல்வலி மற்றும் தன்னிலையிழத்தல் போன்ற பின்விளைவு அறிகுறிகள்.
- மது அருந்தாமல் இருக்கும்பொழுது நடுக்கம்.
- படிப்படியாக ஏற்படும் ஞாபகமறதி.
- சமூக நெறிமுறை மற்றும் நடவடிக்கைகளுக்கு புறம்பாக நடப்பது.
- மோசமான உணவு பழக்கம் மற்றும் தனிப்பட்ட சுகாதாரம்.
- பள்ளி அல்லது வேலைக்கு போகாதிருத்தல் மற்றும் வேலையில் கவனக்குறைவு.
- பிரச்சினையைப் பற்றி பேசுவதற்கு தயக்கம், மற்றவர்களை எதிர்க்கொள்ளும்பொழுது வன்முறை போக்கு.
- வேலை, உறவு, நிதி ஆகியவற்றில் பிரச்சினைகள் ஏற்பட்ட பின்னரும் மதுபழக்கத்தை தொடர்வது.
- நீர்ச்சத்துக் குறைபாடு மற்றும் கல்லீரல் இழைநார் வளர்ச்சி.
மிதமிஞ்சிய மதுப்பழக்கத்திற்கான காரணங்கள் என்ன?
மதுபழக்கத்தை தூண்டுவதற்கான சில சூழ்நிலைகள் இருக்கலாம் என்றாலும், அதற்கான சரியான காரணத்தை வரையறுப்பது கடினம். ஒரு வாரத்திற்கு 12 முறைக்கு மேல் குடிக்கும் பழக்கம் உள்ள பெண்கள்,ஒரு வாரத்திற்கு 15 முறைக்கு மேல் குடிக்கும் பழக்கம் உள்ள ஆண்கள் அல்லது ஒரு நாளுக்கு 5 முறை, ஒரு வாரத்திற்கு ஒருமுறை குடிப்பழக்கம் உடையவர்களை குடிக்கு ஆட்பட்டவர்கள் என்று கூறலாம். மதுப்பழக்கத்திற்கான சாத்தியமான காரணங்கள்:
- குடிப்பழக்கம் கொண்ட பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்.
- நண்பர்களின் கட்டாயம்.
- மனஅழுத்தம் மற்றும் புற அழுத்தம்.
- மனச்சோர்வு, கவலை, மனச்சிதைவு நோய்.
- குறைந்த சுய மரியாதை.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோய் கண்டறிதல், முக்கியமாக உடல் பரிசோதனை மற்றும் ஒரு விரிவான வரலாற்றை சார்ந்திருக்கிறது. ஒருவர் எத்தனை முறை, எவ்வளவு மது அருந்துகிறார் என்பதையும் குடிப்பதைத் தடுப்பதற்கு அவரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அவரின் வன்முறை நடவடிக்கை, விபத்துகள், இருட்டடிப்பு, வேலை தொடர்பான பிரச்சினைகள், குடித்தபின் வாகனம் ஓட்டுதல் போன்ற கேள்விகளை பொதுவாக மருத்துவர்கள் கேட்கிறார்கள். சில பதில்களை மதிப்பீடு செய்வதற்கு ஒரு எளிய கேள்வித்தாளை வழங்குகின்றார்கள். நீண்டகாலமாக தவறான முறையில் பயன்படுத்தப்பட்டிருத்தல் அல்லது உடல் நிலையில் சிக்கல் ஏற்பட்டு இருப்பதை மருத்துவர் சந்தேகித்தால் கல்லீரல் செயல்பாட்டை பரிசோதிப்பதற்காக இரத்த மாதிரிகள் சேகரிக்கப்படலாம்.
மது சார்பு மற்றும் மது அருந்துதலை நிறுத்துவதற்காக சிகிச்சையின் அனைத்து வழிமுறைகளிலும் கவனம் செலுத்தப்படுகின்றன. மதுப்பழக்கத்திலிருந்து விடுபட, மருத்துவர்களின் பரிந்துரைகள்:
- பிரச்சனையுடன் தொடர்புடைய சுகாதார வியாதிகளுக்கு மருத்துவ சிகிச்சை.
- அடிமையாதல் பழக்கத்தை நிறுத்த மருத்துவம்.
- ஆதரவு குழுக்கள் - AA அல்லது ஆல்கஹாலிக் அனானிமஸ் என்பது மிகவும் பொதுவாக அறியப்படும் ஆதரவு குழு, குடிப்பழக்கத்திலிருந்து மீள்பவர்களை ஆதரித்து, கட்டுப்பாட்டைப் பெறவும், ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் உதவுகிறது.
- உடலில் இருந்து நச்சுத்தன்மையை அகற்றுதல் (டிடாக்ஸிபிகேஷன்).
- உணர்ச்சி குறைபாடுகளுக்கான ஆலோசனை.
- நேர்மறை மேற்பார்வை மற்றும் திறன்களைப் பெற நேர்மறை வலுவூட்டல் மற்றும் மறுவாழ்வு பயிற்சி.
(மேலும் படிக்க: குடிப்பழக்கத்தை எப்படி நிறுத்துவது)