பல்வேறு வகையான ஒவ்வாமை அறிகுறிகள் பின்வருமாறு:
தூசி ஒவ்வாமை
மூச்சுக்குழாய் அழற்சி
தோல் ஒவ்வாமை
தோல் ஒவ்வாமைக்கான பொதுவான அறிகுறிகள் சிவத்தல் (தோல் சிவந்து காணப்படுதல்), அரிப்பு மற்றும் வீக்கம் ஆகியவை. குறிப்பிட்ட சரும நிலைமைகளை சிறிய வேறுபாடுகள் மூலம் கண்டறியலாம்.
- எக்ஸிமா மற்றும் தொடர்பினால் உண்டாகும் தோல் அழற்சி
எக்ஸிமா தோல் அழற்சி கொண்டவர்களின் தோல் உலர்ந்தும் அரிப்புடனும் அக்கு அக்காகவும் காணப்படும். சிலருக்கு அந்த அக்கினை அரிக்கும் போது அதிலிருந்து திரவம் போல 'கசியலாம்'. இது தொற்றுநோயைக் குறிக்கும். குழந்தைகளுக்கு எக்ஸிமா, முகம், மூட்டுகளின் வளைவு மற்றும் காதுகளுக்கு பின்னால் இருக்கும். பெரியவர்களுக்கு இதே இடங்களிலும் மேலும் கை மற்றும் கால்களிலும் காணப்படுகின்றன. தொடர்பினால் உண்டாகும் தோல் அழற்சியில், இதே போன்ற அறிகுறிகள் ஒவ்வாமை ஏற்படுத்தக் கூடிய பொருட்களுடன் தொடர்பு கொள்ளும்போது (தொடும்போதோ அல்லது அருகில் செல்லும்போதோ) ஏற்படுகிறது.
உர்டிகேரியா - எனப்படும் நிலையில், சிவந்த தோல், வீக்கமடைந்த சிவப்பு நிறமுள்ள கொப்பளங்கள் ஏற்படும். அவை வெவ்வேறு அளவுகளில் காணப்படலாம். மற்றும் அது உடலின் எந்த பகுதியிலும் தோன்றலாம். ஆஞ்சியோடெமா என்றழைக்கப்படும் ஒரு நிலையில், சருமத்தின் ஆழமான அடுக்குகள் பாதிக்கப்பட்டு தென்படலாம். இது கண்கள், உதடுகள் அல்லது கன்னங்களைச் சுற்றி காணப்படலாம். சில நேரங்களில், இது பிறப்புறுப்புகளிலோ அல்லது தொண்டை அல்லது குடல்களிலும் இருக்கலாம்.
பூச்சி மற்றும் செல்ல பிராணிகளால் அலர்ஜி
செல்ல பிராணி ஒவ்வாமையின் அறிகுறிகள் தூசி ஒவ்வாமை போன்றவை, மேலும் அது விலங்குகளை தொடுவதாலும் அதன் அருகாமையாலும் ஏற்படுகிறது. பூச்சி ஒவ்வாமையின் அறிகுறிகள் பின்வருமாறு:
உணவு ஒவ்வாமை
உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் உண்ட உடனேயும் அல்லது பல மணிநேரங்களுக்கு பின்னரும் ஏற்படலாம். அவற்றுள் சிவந்த அரிக்கும் தோல், அடைத்த மூக்கு, குமட்டல், வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகியவை அடங்கும். சிலருக்கு உணவு ஒவ்வாமை அனபிலாக்ஸிஸ் போன்ற தீவிரமான நிலையையும் ஏற்படுத்தலாம். அதன் அறிகுறிகள்:
- மார்பில் இறுக்கம்
- நாக்கு, தொண்டை மற்றும் உதடுகளில் வீக்கம்.
- கைகள் மற்றும் கால்களில் கூச்சம்.