தலை வழுக்கை (அலோபேசியா) என்றால் என்ன?
ஒவ்வொருவர்க்கும் - ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரிடத்திலும்- ஒவ்வொரு நாளும் 100 இழைகள் வரை முடி உதிர்தல் இயல்பானதாகும். சில நிலைமைகளில் முடி கொட்டுதல் தீவரமாக இருக்கலாம். அலோபேசியா என்பது சாதாரணமாக இருக்கும் முடி உதிர்வை விட அதிகமாக இருக்கும் நிலையே ஆகும். அலோபேசியாவைக் கீழ்கண்ட வகைகளில் காணலாம்:
- அலோபேசியா ஏரியேட்டா, திட்டு திட்டாக முடி உதிர்வது, ஆங்காங்கே, வட்ட வடிவமாக, முற்றிலும் முடி கொட்டிய நிலை இது.
- அலோபேசியா டோட்டலிஸ், தலையில் இருக்கும் அனைத்து முடியும் உதிர்தல்.
- அலோபேசியா யூனிவர்சலிஸ், உடலின் எந்த ஒரு பகுதியிலும் முடி இல்லாமல் உதிர்ந்து போகுதல்.
விழுந்த முடி திரும்ப வளர்ந்தாலும், அந்த முடி மீண்டும் உதிர்ந்துகொண்டே இருக்கும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
அலோபேசியா, வெவ்வேறு வகைகளில், வெவ்வேறு அறிகுறிகளைக் காட்டுகின்றது. அவை பின்வருமாறு:
- அலோபேசியா ஏரியேட்டா, வட்டம் அல்லது நாணய அளவிலான திட்டுகளை ஏற்படுத்தலாம். தூங்கி விழிக்கும்பொழுது, தலையணையின் மேல் கொத்துக்கொத்தாக முடி உதிர்ந்திருப்பதை காணலாம். திட்டுகளின் அளவு மாறுபட்டாலும், சில பகுதிகளில் முடி அடர்த்தி குறைவதை நீங்கள் உணரலாம். உச்சந்தலையில் முடி கொட்டுவது என்பது மிகவும் பொதுவானது; இருப்பினும், அலோபேசியா கண் இமை, புருவம் அல்லது தாடியிலும் காணப்படுகிறது. மற்றொரு அரிதான அம்சம், பின்தலையில் இருந்து முழுமையாக முடி உதிர்வது.
- அலோபேசியா டோட்டலிஸ் நிலையில், உச்சந்தலையில் இருந்து முழுமையாக முடி உதிர்வதை காணலாம்.
- அலோபேசியா யூனிவர்சலிஸ் நிலையில், உடலின் அனைத்து பகுதிகளில் இருந்தும் முடி உதிர்வதை காணலாம்.
- சில நேரங்களில் அலோபேசியா நகங்களைப் பாதிக்கலாம், மேலும் நகங்கள் மங்கலாக, எளிதில் உடையக்கூடியதாக, கடினமாக அல்லது பிளவுபட்டு காணப்படலாம். நக பிரச்சினைகள் சில நேரங்களில் அலோபேசியாவின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
அலோபேசியா ஒரு மரபணு நோய் என்று கண்டறியப்பட்டு ஒரு தன்னுடல் தாக்குநோய் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் முடியைத் தாக்க தொடங்குகிறது. இதன் விளைவாக, அதிகமான முடி இழப்பு ஏற்படுகிறது.
இதனை கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
அலோபேசியா பொதுவாக ஒரு தோல் மருத்துவரால் கண்டறியப்படுகிறது. இந்த நிலையை சோதிக்க உள்ள பல்வேறு வழிகள் பின்வருமாறு:
- மற்ற தன்னுடல் தாக்குநோய்களைக் கண்டறிவதற்காக இரத்த பரிசோதனைகள் செய்யப்படலாம்.
- சில முடி இழைகள் அகற்றப்பட்டு ஆய்வு செய்யப்படலாம்.
- அலோபேசியா நிலையை உறுதிப்படுத்த சருமத்தின் திசுப் பரிசோதனை செய்யப்படலாம்.
அலோபேசியாவுக்கான வரையறுக்கப்பட்ட சிகிச்சை இன்னும் இல்லை. முடி வளர்ச்சி அதற்கான நேரத்தை எடுத்துக்கொண்டு, இறுதியில் முடி திரும்ப வளர்கிறது. சில நேரங்களில் வளர்ச்சி வேகமாக இருக்கும். தோல் மருத்துவர்கள் விரைவாக முடி வளர பின்வரும் சிகிச்சைகளை பரிந்துரைக்கலாம்:
- கார்டிகோஸ்டீராய்டு மருந்துகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை தடுக்க பயன்படுத்தப்படுகின்றன. இவை கிரீம்கள் அல்லது லோஷன்களாக பயன்படுத்தப்படுகிறது அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் ஊசி மூலம் உட்செலுத்தப்படுகிறது. மாத்திரைகள் கிடைக்கின்றன, ஆனால் அதனுடன் தொடர்புடைய பக்க விளைவுகள் காரணமாக, அவை தவிர்க்கப்படுகின்றன.
- ஆந்த்ராலின், நோய் எதிர்ப்புச் செயல்பாட்டை இலக்கு வைக்கும் மருந்து. இது வலிமை வாய்ந்தது மற்றும் பயன்படுத்தப்பட்டு ஒரு மணிநேரத்திற்கு பின்னர் துடைக்கப்படலாம்.
- மீனோக்ஷிதில், முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது மற்றும் உச்சந்தலை, தாடி மற்றும் புருவத்திலும் பயன்படுத்தப்படலாம். ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கும் இது பாதுகாப்பானது மற்றும் ஒரு நாளைக்கு இரண்டு முறை இதனை பயன்படுத்தலாம்.
- டைபன்சிப்ரோன் என்ற மருந்து, வழுக்கை திட்டுகளை சரிசெய்கிறது. இதை பயன்படுத்துவதன் மூலம், ஒரு எதிர்வினை நடைபெறுகிறது மற்றும் நோய் எதிர்ப்பு அமைப்பு அதை எதிர்த்து வெள்ளை இரத்த அணுக்களை அனுப்புகிறது. இந்த செயல்பாட்டில், மயிர்க்கால்கள் செயல்படுத்தப்படுகிறது, இதனால் முடி இழப்பு தடுக்கப்படுகிறது.