அமீபியாசிஸ் என்றால் என்ன?
அமீபியாசிஸ் என்பது என்டமோபே என்ற பெயர்கொண்ட ஒட்டுண்ணியின் காரணமாக குடல்களில் ஏற்படும் ஒரு தொற்றுநோயாகும். இந்த பிரச்சனையை அறிந்துகொள்வதற்காக சில கேள்விஞான அறிகுறிகள் உதவுகிறது, ஆனால் பொதுவாக, பல அறிகுறிகளை நீங்கள் எதிர்கொள்ளாமல் போகலாம். சிகிச்சையளிக்காவிட்டால் அமீபியாசிஸ் மிக அபாயகரமானதாவிடும் ஏனென்றால் இந்த ஒட்டுண்ணியின் தொற்று மற்ற உறுப்புகளுக்கும் பரவக்கூடியவை.
அமீபியாசிஸின் முக்கிய அறிகுறிகள் மற்றும் நோய்குறிகள் என்னென்ன?
இந்த ஒட்டுண்ணியோ அல்லது நீர்க்கட்டிகளோ உடலில் நுழைந்ததை தொடர்ந்து ஒன்று முதல் நான்கு வாரங்களில் இதன் அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றது. பல கேஸ்களில், இந்த நிலை உண்மையான அறிகுறிகள் இல்லாமாலோ அல்லது பொதுவான அறிகுறிகளுடனோ காணப்படுகிறது. பொதுவாக உணரப்படும் அறிகுறிகளில் பின்வருபவையும் அடங்கும்:
- அப்டோமினல் அல்லது வயிற்றுப் பிடிப்புகள்.
- வயிற்றுப்போக்கு.
- அசௌகரியம் அல்லது குமட்டல்.
- அதிகரித்த வயிற்று வாயு.
- மலத்தில் ரத்தம்.
எனினும், இந்த ஒட்டுண்ணி ஒருமுறை உறுப்புகளில் தங்கிவிட்டால் மேலும் அவைளால் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்த முடியும், உதாரணத்திற்கு:
- தீவிர தொற்றுநோய்.
- சீழ்படிந்த கட்டி அல்லது சீழ் உருவாகுதல்.
- உடல் நலமின்மை.
- மரணம்.
வழக்கமாக இந்த ஒட்டுண்ணியால் பாதிக்கப்படும் பொதுவான இடங்கள் குடல் மற்றும் கல்லீரல் ஆகும்.
அமீபியாசிஸின் முக்கிய காரணங்கள் என்ன?
அமீபியாசிஸை ஏற்படுத்தும் புரோட்டோசோவா அல்லது ஒட்டுண்ணியே ஈ.ஹிஸ்டோலிடிக் என அறியப்படுகிறது. வழக்கமாக இந்த ஒட்டுண்ணி இதன் நீர்கட்டிகள் மூலமாக நுகரும் நீர் அல்லது உணவின் வழியாக உடலில் நுழைகிறது. நோய்த்தொற்று உடைய ஒரு நபரின் உடல்கழிவுடன் ஏற்படும் தொடர்பும் அமீபியாசிஸை ஏற்படுத்தும்.
ஒருமுறை நீர்க்கட்டிகள் உடலில் நுழைந்துவிட்டால், அதிலிருந்து ஒட்டுண்ணி வெளியாகிறது மற்றும் அது, இதையொட்டி, உடலின் பல்வேறு பகுதிகளுக்கும் பரவுகிறது. அவை குடல் அல்லது பெருங்குடலில் சரணடையக்கூடும். இந்த தொற்றுநோயானது உடல்கழிவு மற்றும் மலத்தில் இருக்கின்ற ஒட்டுண்ணி மற்றும் நீர்க்கட்டிகலின் மூலமாக பரவக்கூடியது.
அமீபியாசிஸிஸ் எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
நோய்கண்டறிதல் என்பது வழக்கமாக சில படிகளை ஒருங்கிணைத்தது, அவற்றில் சில பின்வருமாறு:
- பயண வரலாறு மற்றும் சமீபத்திய ஆரோக்கிய நிலை பற்றிய தகவல்கள்.
- நீர்க்கட்டிகளுக்காக மலத்தை ஆய்வுசெய்தல்.
- கல்லீரல் செயல்பாடு சோதனைகள்.
- புண்கள் அல்லது கல்லீரல் சேதத்தை பற்றி அறிந்துகொள்ள அல்ட்ராசவுண்ட் அல்லது சிடி ஸ்கேன் சோதனைகள்.
- கல்லீரலில் சீழ்படிந்த கட்டி இருக்கும்போது நீடில் ஆஸ்பிரேஷன் சோதனை பரிந்துரைக்கப்படுகிறது.
- பெருங்குடலில் ஒட்டுண்ணியின் இருப்பை சோதிப்பதற்காக கோலன்ஸ்கோபி சோதனை செய்தல்.
இதற்கான சிகிச்சையானது மிகவும் எளிமையானதும் நேரடியானதுமாகும் மேலும் இந்த சிகிச்சை இதன் பரவலைக் கட்டுப்படுத்துவதையும் இந்த ஒட்டுண்ணியைக் கொல்வதையுமே இலக்காக கொண்டுள்ளது. இந்த சிகிச்சை பின்வருபவற்றை உள்ளடக்கியது:
- 10 முதல்14 நாட்கள் வரையில் நீடித்திருக்கும் மருந்தை உட்கொள்ளுவது (மெட்ரோனிடசோல்).
- இந்த ஒட்டுண்ணி ஏதேனும் உறுப்பு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என கண்டறியப்பட்டால் இதற்கான சிகிச்சையானது ஒட்டுண்ணியை முழுவதுமாக உடலிலிருந்து நீக்குவது மட்டுமின்றி பாதிக்கப்பட்ட உறுப்பின் செயல்பாட்டை மீட்டெடுப்பதையும் நோக்கமாகக் கொண்டது. பெருங்குடலில் ஏற்பட்டிருக்கும் துளை அல்லது வயிற்றுத்திசுக்களுக்கான (வயிற்று உறுப்புகளை சுற்றியுள்ள திசு) அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.