நினைவுத் திறன் இழப்பு (அம்னீஷியா) - Amnesia in Tamil

Dr. Nabi Darya Vali (AIIMS)MBBS

November 21, 2018

March 06, 2020

நினைவுத் திறன் இழப்பு
நினைவுத் திறன் இழப்பு

அம்னீஷியா என்றால் என்ன?

சில நேரங்களில் நம் அனைவருக்குமே மறதியோ, குழப்பமோ அல்லது சில விஷயங்கள் தவறாக நினைவிலிருப்பதோ ஏற்படுகின்றது. இவ்வாறு நடப்பதற்கு காரணம் தகவல் சுமையோ, மனஅழுத்தமோ, கவனச்சிதறலோ அல்லது மற்ற பல காரணங்களாகக் கூட இருக்கலாம். ஆனால் மருத்துவ நிலையின் காரணமாக இவ்வாறு ஏற்பட்டால் நினைவுகளின் இழப்பு, அதாவது உண்மைகள், அனுபவங்கள் மற்றும் தகவல்கள் போன்றவைகளை இழப்பதையே அம்னீஷியா என குறிப்பிடப்படுகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களையும் அவர்களது சுற்று சூழலையும் நாகு அறிவார்கள், ஆனால் புதிய தகவல்களை சந்திக்க நேரிடும்போது அதை ஏற்றுக்கொள்ள சிரமப்படுவார்கள். அம்னீஷியாவின் முக்கியமான வகைகள் அதனுடைய அறிகுறிகளின் நிலைகளை சூழ்ந்தே அமைகிறது:

  • ஆன்டெரோகிரேடு அம்னீஷியா
    இந்த வகை அம்னீஷியாவானது புதிய தகவல்களை செயல்படுத்துகையில் மற்றும் அதை மீண்டும் நினைவுகொள்ள முயற்சிக்கையில் சிரமத்தை ஏற்படுத்துகிறது.
  • ரெட்ரோக்ரேட் அம்னீஷியா
    இந்த அம்னீஷியாவானது கடந்தகால நினைவுகள் மற்றும் தகவல்களை நினைவுபடுத்துவதினால் வரும் சிரமங்களை கொண்டு வகையறுக்கப்பட்டுள்ளது.

மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:

  • தன்னிலையை முற்றிலும் இழந்துவிடுவது.
  • போலியான நினைவுகள், அதாவது கற்பனை செய்பட்ட நினைவுகள் ஆனால் அதுவே உண்மையென்று நம்பப்படுகிறது.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

Memory நினைவுகள் என்பது மூளையின் செயல்பாடாகும். மூளையின் எந்த பகுதியாவது, குறிப்பாக தாலமஸ், ஹிப்போகாம்பஸ் அல்லது நினைவுகள் மற்றும் உணர்ச்சிகளுக்கு பொறுப்பானவற்றை சார்ந்த மற்ற அமைப்புகள் பாதிக்கப்படுவதால் ஏற்படும் விளைவு அம்னீஷியா ஆகும். அவ்வாறு ஏற்படும் சில காரணங்கள் பின்வருமாறு:

அம்னீஷியா எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

Aஅம்னீஷியா இருப்பதை கண்டறியவும், மற்றும் அதை பிற கோளாறுகளான அல்சைமர் மற்றும் டிமென்ஷியாவிடமிருந்து வேறுபடுத்தி அறிவதற்காக ஒரு விரிவான மதிப்பாய்வு நடத்தப்படுகிறது. அவற்றுள் அடங்குபவை பின்வருமாறு:

  • நினைவக இழப்பின் இயல்பு, அதன் முன்னேற்றம், தூண்டுதல்கள், குடும்ப வரலாறு, போதை மருந்து பழக்கம், விபத்துகள் மற்றும் மருத்துவ பிரச்சனைகளான வலிப்பு, புற்றுநோய் அல்லது மனஅழுத்தம் ஆகிய அனைத்தையும் சரிபார்த்ததற்கான விரிவான மருத்துவ வரலாறு தேவை. அந்த குறிப்பிட்ட நபரின் நினைவுகள் சீராக இல்லாததால் நெருங்கிய குடும்ப உறுப்பினரோ அல்லது நெருங்கிய நண்பரோ ஆலோசனையின் போது உடனிருக்கலாம்.
  • எதிர்வினை செயல்கள், சமநிலை, புலன்கள் சார்ந்த செயல்பாடுகள் மற்றும் நரம்புமண்டலம்  மற்றும் மூளையின் பிற செயல்பாடுகள் போன்றவைகளை சரிபார்த்தற்கான உடல் பரிசோதனை.
  • நீண்ட-கால மற்றும் குறைந்த-கால நினைவக இழப்பு, முடிவுகள், யோசனைகள் மற்றும் பொது தகவல்களை செயல்படுத்துதல். போன்றவற்றிற்கான சோதனைகள்.
  • தொற்றுநோய், வலிப்பின் வினை மற்றும் மூளை பாதிப்பிற்கான சோதனைகள். 

கிட்டத்தட்ட எல்லா கேஸ்களிலும் அம்னீஷியா குணப்படுத்த முடியாதது அல்லது ஓரளவு மட்டுமே குணப்படுத்தக்கூடியது. முழுமையான சிகிச்சை சாத்தியமில்லையென்பதால் அந்த நிலையை மேலும் சமாளிக்கக்கூடியதை கவனத்தில் கொள்ளவேண்டியதாகும். பெரும்பான்மையாக பயன்படுத்தப்படும் சிகிச்சை யுக்திகள் பின்வருமாறு:

  • தொழில் தொடர்பு சிகிச்சையானது பாதிக்கப்பட்ட நபருக்கு, புதிய தகவல்களை கையாளவும் ஏற்கனவே இருக்கும் தகவல்கள் மற்றும் நினைவுகளை பயன்படுத்தி அனுபவங்களை உருவாக்கும் யுக்திகளில் கவனம் செலுத்துகிறது.
  • அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த கற்றுத்தருவதன் மூலம் அவர்களுடைய தினசரி நடவடிக்கைகளை மேம்படுத்த உதவி செய்கிறது. இதில் போன்கள், கேஜெட்டுகள் மற்றும் ஆர்கனைசர்களும் அடங்கும்.
  • ஊட்டச்சத்து தேவைகளுக்கான மருந்துகள் மற்றும் வெளியில் தெரியாத பிற பிரச்னைகளுக்கான சிகிச்சைகள், இந்த நிலை மேலும் சீர்குலைவதை தடுக்க உதவுகிறது.



மேற்கோள்கள்

  1. American Occupational Therapy Association. Dementia and the Role of Occupational Therapy. [internet]
  2. D Owen et al. Postgrad Med J. 2007 Apr; 83(978): 236–239. PMID: 17403949
  3. Department of Health & Human Services, Amnesia. State Government of Victoria, Australia. [internet]
  4. Richard J. Allen. Classic and recent advances in understanding amnesia. Version 1. F1000Res. 2018; 7: 331. PMID: 29623196
  5. Health On The Ne. Amnesia. [internet]

நினைவுத் திறன் இழப்பு (அம்னீஷியா) டாக்டர்கள்

Dr. Hemant Kumar Dr. Hemant Kumar Neurology
11 Years of Experience
Dr. Vinayak Jatale Dr. Vinayak Jatale Neurology
3 Years of Experience
Dr. Sameer Arora Dr. Sameer Arora Neurology
10 Years of Experience
Dr. Khursheed Kazmi Dr. Khursheed Kazmi Neurology
10 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

நினைவுத் திறன் இழப்பு (அம்னீஷியா) க்கான மருந்துகள்

Medicines listed below are available for நினைவுத் திறன் இழப்பு (அம்னீஷியா). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹219.0

₹449.0

Showing 1 to 0 of 2 entries