மயக்க மருந்து (அனஸ்தீஸியா) என்றால் என்ன?
அனஸ்தீஸியா எனும் மருத்துவ முறை ஒரு தனிப்பட்ட மனிதனுக்கு அறுவைச் சிகிச்சையின் போது ஏற்படும் வலியை உணராமல் தடுக்க பயன்படுத்தப்படுகிற மயக்க மருந்தாகும். அனஸ்தெடிக் டிரக்ஸ் என்று அழைக்கப்படும் பரந்தளவிலான மயக்க மருந்துகளின் மூலம் அனஸ்தீஸியா கொடுக்கப்படுகிறது. பரந்தளவில், மயக்க மருந்துகள் மூன்று வகைப்படும்: அவை ஓரிடம், பகுதி மற்றும் பொதுப்படையான மயக்க மருந்துகள்.
ஓரிடம் மற்றும் பகுதி மயக்க மருந்துகள் உடலில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மறத்து போக செய்து, ஒருவர் விழித்திருக்கும் சமயத்திலேயே சிகிச்சை செயல்முறைகளை செய்ய உதவுகிறது. அதே சமயத்தில், பொது அனஸ்தெடிக்ஸ் மருந்து, நோயாளிகள் தூங்கும் நிலையில் சிகிச்சையளிக்க வித்திடுகிறது.
இது எவ்வாறு வேலை செய்கிறது?
ஒரு நபருக்கு, பொது மயக்க மருந்து வழங்கப்பட்டால், மூளையிலும் உடலிலும் உள்ள நரம்பின் சைகைகள் பாதிக்கப்படும். இந்த விஷயத்தில், ஒரு நபருக்கு என்ன நடக்கிறது என்று முழுமையாக தெரியாது. இதன் காரணத்தினால் மூளை வழியை செயல்படுத்த அனுமதிக்காது, மேலும் அனஸ்தீஸியா செலுத்தப்பட்ட (உறுப்போ) உடலின் ஒரு பகுதியோ தொடர்ந்து மறத்துப்போன நிலையிலேயே இருக்கும்.
இதய துடிப்பு, இரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்த ஹார்மோன் வெளியீடு போன்ற நிலையான உடலியல் செயல்முறைகளை பராமரிக்கவும் அனஸ்தீஸியா உதவுகிறது.
இது யாருக்கு தேவை?
அனஸ்தீஸியா கடுமையான வலியில் இருக்கும் மக்களுக்கு நிவாரணமளிக்க வழங்கப்படுகிறது. வலிகளின் வகைகளை பொறுத்தோ அல்லது கொடுக்கப்படும் சிகிச்சையின் வகையைப் பொறுத்தோ, அனஸ்தீஸியா வகைகளும் மாறுபடும்.
தோலை கிழித்து அதன் மூலமாக சிகிச்சைமுறை கொடுக்கப்பட வேண்டியிருந்தாலோ, சிகிச்சைக்கு நீண்ட நேரம் எடுத்தாலோ, அது சுவாசத்தை பாதித்தாலோ அல்லது முக்கியமான உறுப்புகளான இதயம் அல்லது மூளை போன்ற உறுப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் போதோ, அனஸ்தீஸியா கொடுக்கப்படுகிறது.
இது எவ்வாறு நிறைவேற்றபடுகிறது?
வழக்கமாக, மக்கள் மருத்துவ செயல்முறைக்கு வருவதற்கு முன்பு தங்கள் அனஸ்தடிஸ்டஸ்களை சந்திக்க நேரிடும். சிக்கல்கள் அல்லது மருத்துவ பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கிறது. தனிப்பட்ட ஒருவரின் மருத்துவ வரலாற்றைப் பார்க்கும்போது, மருத்துவர் அடிக்கடி பரிந்துரைப்பது சில மருந்துகளை உட்கொள்தலை தவிர்க்க வேண்டும் என்பதே, ஏனெனில் சில மருந்துகளை அனஸ்தீஸியாவிற்கு முன் உட்கொள்ளுதல் மூலம் ஏதேனும் சிக்கல்கள் வருமென அவர்களால் நம்பப்படுவதே காரணமாகும்.
அனஸ்தீஸியா பொதுவாக வழங்கப்படுவது கீழ்கண்ட மருத்துவ பொருட்களின் உதவியால் மட்டுமே:
- ஊசி.
- உள் மூச்சு.
- டாபிகள் லோஷன் (மேல் பூச்சு) (நேரடியாக தோலில் பூசிக்கொள்வது அல்லது சில உடல் பாகங்களின் லைனிங்கில் பூசுவது).
- ஸ்பிரே செய்தல்.
- கண் சொட்டு மருந்து.
- தோலின் மீது மருந்து கலந்த பட்டையை இணைப்பது.
இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் மூச்சு விகிதம் போன்ற மனித உடலின் முக்கியமான அளவுருக்களை பார்வையிட்டு மற்றும் தொடர்ந்து எலக்ட்ரானிக் சாதனங்களின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.
ஓரிடம் மற்றும் பகுதி உணர்விழப்பு அனஸ்தீஸியா என்பது ஒருவர் விழித்திருக்கும் போது மருத்துவர் அறுவை சிகிச்சை செய்வதற்காக, குறுப்பிட்ட இடத்தில் அனஸ்தீஸியாவை உபயோகிப்பதே ஆகும், அதாவது வாயில் உள்ள பற்களின் சிகிச்சையின் போதும், இடுப்பில் செய்யப்படும் சிறிய அறுவை சிகிச்சையின் போது கீழ் முதுகில் கொடுக்கப்படும், மேலும் இன்னும் பல சிகிச்சைகளில் இவ்வாறு அனஸ்தீஸியாக்கள் பயன்படுத்தப்படுகிறது. சில கேஸ்களில், அனஸ்தீஸியா போட பட்டிருக்கும் இடத்தில் மட்டுமே மறப்புத்தன்மை இருக்கும் மற்றும் எந்த வலியுமின்றி அறுவை சிகிச்சை செயல் முறைகளும் நிகழ்த்தப்படுகின்றன.