தற்போது மூட்டழற்சிக்கு உறுதியான தனித்த தீர்வு எதுவும் இல்லை. ஆனால், இவ்வாறு கூறுவதால் சிகிச்சை தேவையில்லை என்று அர்த்தமில்லை. மேற்பூச்சு வலி நிவாரணிகள், இன்ன பிறவற்றைக் கொண்டு நிறைய நோயாளிகள் தங்களுக்குத் தாங்களே சுய-வைத்தியம் செய்து கொண்டு, மருத்துவரிடம் போக மறுத்து, நோயை மேலும் பெரிதாக்கி விடுகிறார்கள் என்பதை அறிய உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். வாத நோய் மூட்டழற்சி இருந்தால் ஒருவர், கண்டிப்பாக ஒரு எலும்பியல் நிபுணரையும் ஒரு வாதநோய் நிபுணரையும் ஆலோசிக்க வேண்டும்.
பல்வேறு வகை மூட்டழற்சிகளின், முக்கியமாக கீல்வாதம், வாதநோய் மூட்டழற்சி சிகிச்சைக்கு மருத்துவர்களால் அழற்சிகள் மற்றும் வீக்கங்களை குணமாக்க மருந்துகள் பரிந்துரைக்கப்படுகின்றன. பாதிக்கப்பட்ட பகுதியில் சிவந்து போதல் மற்றும் வேதனையைக் குறைக்க, வெப்பமான மற்றும் குளிர்ந்த அழுத்துதல்கள் பயன்படுகின்றன. இந்த நோய் முற்றிய நிலையில் இருக்கும் சில நோயாளிகள், நடப்பது, சைக்கிள் ஓட்டுவது, ஓடுவது மற்றும் நீண்ட நேரத்திற்கு நிற்பது போன்ற அன்றாட செயல்களைச் செய்வதற்கு மிகவும் சிரமமாக உணர்வார்கள், மருத்துவர்கள், மூட்டுக்களில் குறைந்த சிரமத்தைக் கொடுக்கிற, குறிப்பிட்ட அளவு இயக்கத்தை உறுதி செய்கிற, யோகா, நீச்சல், ஏரோபிக்ஸ் போன்றவற்றில் குறைந்தபட்சம் 1 உடலியல் செயல்பாட்டிலாவது ஈடுபட ஊக்குவிக்கிறார்கள்.
மூட்டழற்சி நோயாளிகளுக்கு, பிசியோதெரபி ஒரு முக்கியமான சிகிச்சை அம்சமாகும். நோய் முற்றிய நிலை, இயக்கம் மற்றும் இடப்பெயர்ச்சியில் சிரமத்தைக் கொடுக்கும், பல்வேறு உருக்குலைவுகளுக்கும் மற்றும் எலும்பில் மிகையான வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். எனவே, பிஸியோதெரபி உடற்பயிற்சிகளின் உதவியால் உங்கள் இயங்கும் நிலையைத் திரும்பக் கொணர்வதோடு மட்டுமல்லாமல் நெகிழ்வுத்தன்மையையம் அடைகிறீர்கள். உங்கள் மருத்துவர், வலி மற்றும் தசைநார் இறுக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, அல்ட்ராசோனிக் அலைகளையும் பரிந்துரைக்கக் கூடும். வாதநோய் மூட்டழற்சி (ஆர்.ஏ) உள்ள நபர்களுக்கு, மூட்டுக்களில் வெப்பத்தைக் காட்டுவதன் மூலம் அவர்களின் தசை இறுக்கத்திலிருந்தும் வலியிலிருந்தும் நிவாரணம் பெறலாம். எனவே,பாதிக்கப்பட்ட மூட்டுப் பகுதிகளை ஆசுவாசப்படுத்த ஆழமான வெப்பம் பயன்படுத்தப்படுகிறது.