செப்டிக் கீல்வாதம் என்றால் என்ன?
செப்டிக் கீல்வாதம் (எஸ்ஏ), அல்லது தொற்று கீல்வாதம் என்பது மூட்டுகளின் திரவம் மற்றும் திசுக்களில் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும். இது முக்கியமாக ரத்த ஓட்டத்தின் வழியாக மூட்டுகளை அடையும் நோய்க்காரணிகளாலோ அல்லது மூட்டுகளின் உள்ளே கிருமிகள் நுழைவதற்கு வழிவகுக்கும் ஏதேனும் காயத்தினாலோ ஏற்படுகிறது. இது அனைத்து வயது வரம்பினரையும் பாதிக்கும் ஒரு கடுமையாக முடக்கு நிலையாகும். குழந்தைகளை பொறுத்தவரை எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளை இது பொதுவாக பாதிக்கிறது. இந்தியாவில் பிறக்கும் குழந்தைகளில் 1500க்கு 1 என்ற விகிதத்தில் இதன் பாதிப்பு உள்ளது.
இதன் முக்கிய அறிகுறிகள் மற்றும் நோய்குறிகள் என்னென்ன?
முழங்கால் மற்றும் இடுப்பில் ஏற்படும் செப்டிக் கீல்வாதம் எஸ்ஏ பொதுவாக வளர்ந்த குழந்தைகளிடமும், பெரியவர்களிடமும் காணப்படுகிறது அதேசமயம் இடுப்பு மற்றும் தோள்களில் ஏற்படும் எஸ்ஏ பொதுவாக பிறந்த குழந்தைகளிடையே காணப்படுகிறது.இதன் மிகப்பொதுவான அறிகுறிகள் வலி, காய்ச்சல், வீக்கம், தொடும்போது வலி,சிவத்தல் மற்றும் நொண்டுவது போன்றவையாகும். வயதை பொறுத்து அறிகுறிகள் மாறுபடும். வழக்கமாக ஒரு மூட்டு மட்டுமே பாதிக்கப்படும் ஆனால் சில அரிதான நிகழ்வுகளில் பல மூட்டுகள் பாதிக்கப்படக்கூடும். கடுமையான மூட்டுவலி பாதிக்கப்பட்ட மூட்டின் நிலையை மோசமானதாக்கும் அல்லது மேலும் செயல்பாடில்லாமல் செய்யும்.உடலின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் தொற்று காரணமாக எதிர்வினை வாதம் கூட ஏற்படக்கூடும்.
கைக்குழந்தைகள் மற்றும் பிறந்த குழந்தைகளிடம் பின்வரும் அறிகுறிகள் காணக்கூடும்:
- பாதிக்கப்பட்ட மூட்டை அசைக்கும்போது அழுவது.
- காய்ச்சல்.
- தொற்றுள்ள மூட்டை அசைக்கமுடியாதிருத்தல்.
- எரிச்சலடைவது.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இது முக்கியமாக பாக்டீரியாவாலும் அரிதாக பூஞ்சை அல்லது நோய்கிருமிகளாலும் ஏற்படுகிறது.
எஸ்ஏ ஏற்பட காரணமான பொதுவான உயிரினங்கள்:
- ஸ்டீஃபிலோகோகி.
- ஹீமோபிலஸ் இன்ஃப்ளுயன்ஸா.
- கிராம்-நெகடிவ் பேசிலை.
- ஸ்ட்ரெப்டோகோகி.
மூட்டு பாகத்திற்குள் பாக்டீரியா இவ்வாறு நுழையக்கூடும்:
- உடலின் மற்ற பாகங்களின் வெளியில் தெரியாத தொற்றுகளிலிருந்து.
- நோய்க்கிருமி பாதித்த காயங்கள்.
- தோலுக்குள் ஊடுருவியிருக்கும் திறந்த எலும்பு முறிவுகள்.
- தோலுக்குள் ஊடுருவியிருக்கும் அந்நியப்பொருட்கள்.
- அதிர்ச்சி.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
மருத்துவர்கள் வழக்கமாக உடல் பரிசோதனை மற்றும் ஆய்வக சோதனைகளை நடத்தி ஒரு முழுமையான மருத்துவ வரலாற்றை எடுப்பதன் மூலம் எஸ்ஏ வை கண்டறிகின்றனர். இந்த பின்வரும் சோதனைகள் பரிந்துரைக்கப்படலாம்:
- மூட்டு திரவத்தின் ஆய்வு: மூட்டு திரவத்தில் உள்ள நோய்க்காரணிகளை கண்டறிவதற்கு.
- ரத்த சோதனைகள்: தொற்றின் தீவிரத்தை அறிவதற்கும் நோய்த்தடுப்பு எதிர்வினை ஏதேனும் உள்ளதா என அறிவதற்கும்.
- நுண்ணுயிரியல் ஆய்வு: எந்த வகையான பாக்டீரியா/பூஞ்சை/நோய்க்கிருமி உடலில் உள்ளது என்பதை தீர்மானிப்பதற்கு.
- தோற்றமாக்கல் சோதனைகள்: பாதிக்கப்பட்ட மூட்டின் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ்ரே), அல்ட்ராசவுண்ட் மற்றும் எம்ஆர்ஐ.
எஸ்ஏ விற்கான சிகிச்சை தொற்றுக்கு காரணமான உயிரினத்தை அடிப்படையாக கொண்டு சரியான நுண்ணுயிர் எதிரியை தேர்வு செய்வதிலும், இந்த மருந்துகளுக்கு நோயாளியின் சகிப்புத்தன்மை எந்த அளவிற்கு உள்ளது என்பதிலும் முக்கியமாக கவனம் செலுத்துகிறது. இந்த சிகிச்சை இரண்டு முதல் ஆறு வாரங்கள் வரை நீடிக்கலாம். நுண்ணுயிர் எதிரிகள் வேலை செய்வதற்கு பெரும்பாலும் ஒரு ஊசி மூலம் மூட்டு வடிகாலமைப்பு அல்லது ஆர்த்ரோஸ்கோபி செய்யப்படுகிறது. மூட்டு வடிகாலமைப்பு தொற்றை அழித்து,வலியிலிருந்து விடுவித்து உடல்நலத்தை துரிதமாக மீட்டெடுப்பதில் உதவி செய்கிறது.
அறிகுறிகளுக்கான மற்ற சிகிச்சைகள் கீழ்கண்டவாறு:
- வலி மற்றும் காய்ச்சல் நிவாரண மருந்துகள்.
- தசைகளின் வலிமை மற்றும் மூட்டின் அசைவு வரம்பை பராமரிக்க உடல்ரீதியான சிகிச்சை.
- மூட்டுவலியிலிருந்து விடுவிப்பதற்காக ஸ்ப்லிண்ட்ஸ் (முறிந்த எலும்பை இணைக்க பயன்படுத்தப்படும் தட்டை) பயன்பாடு.
- மூட்டின் தேவையில்லாத இயக்கத்தை கட்டுப்படுத்துவது.
சுய-பராமரிப்பு குறிப்புக்கள்:
- தாராளமாக ஓய்வு எடுப்பதும் பாதிக்கப்பட்ட மூட்டை வெளிப்புற அழுத்தம் அல்லது சேதத்திலிருந்து பாதுகாப்பதும் மிகவும் முக்கியமானதாகும்.
- இதயத்தின் நிலைக்குமேலே மூட்டை உயர்த்துவது மற்றும் குளிர் அமுக்கிகளை பயன்படுத்துவது வலியிலிருந்து விடுவிக்க உதவக்கூடும்.
- உடல்நிலை சரியான பிறகு தசைகளின் வலிமையையும் இயக்கத்தின் வரம்பையும் மீட்டெடுக்க எளிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல்.
- ஒமேகா-3 அதிகமுள்ள உணவுகள் வீக்கத்தை குறைத்து சிகிச்சையில் உதவி செய்கிறது.அவை:
- சால்மன் மற்றும் மத்தி வகை மீன்கள் மட்டும்.
- ஆளிவிதை.
- வால்நட்ஸ்.