வயிற்றில் நீர்க் கோர்ப்பு (பெருவயிறு எனப்படும் மகோதரம்) - Ascites in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

November 27, 2018

July 31, 2020

வயிற்றில் நீர்க் கோர்ப்பு
வயிற்றில் நீர்க் கோர்ப்பு

வயிற்றில் நீர்க் கோர்ப்பு (பெருவயிறு எனப்படும் மகோதரம்) என்றால் என்ன?

வயிற்று புறணிக்கும் வயிற்றின் உறுப்புகளுக்கும் இடையே உள்ள இடத்தில் ஏற்படும் திரவ குவிப்பே வயிற்றில் நீர்கோர்ப்பு என குறிப்பிடப்படுகிறது. இது முக்கியமாக கல்லீரலின் வைரல் நோய்த்தொற்றுகள் அல்லது உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயை உண்டாக்கும்  கொழுப்பு மிக்க கல்லீரல் -ஆல்  ஏற்படும் கல்லீரலின் இழைநார் வளர்ச்சியுடன் (கல்லீரல் வடு) தொடர்புடையது. கல்லீரல் இழைநார் வளர்ச்சியால் பாதிக்கப்பட்ட 80% நோயாளிகளுக்கு வயிற்றில் நீர்கோர்ப்பு உண்டாகிறது. இந்தியாவில் போதிய விழிப்புணர்வும் விசாரணையும் இல்லாதது மற்றும் நிபுணத்துவத்தின் குறைவு காரணமாக கல்லீரல் நோய்களின் தாக்கம் குறித்த தெளிவு இல்லையென்றாலும் வயிற்று நீர்கோர்ப்பின் தாக்கம் 10-30% வரை உள்ளதாக அறியப்பட்டுள்ளது.

வயிற்று நீர்கோர்ப்பின் அறிகுறிகள் மற்றும் நோய்க்குறிகள் என்னென்ன?

வயிற்று நீர்கோர்ப்பின் அறிகுறிகள், காரணத்தை பொறுத்து மெதுவாகவோ அல்லது திடீரென்றோ ஏற்படக்கூடும். திரவ அளவு குறைவாக இருந்தால் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் எதுவும் இருக்காது. எனினும் திரவ அளவு அதிகமாக இருந்தால் அது மூச்சு திணறல் ஐ ஏற்படுத்தும்.

மற்ற அறிகுறிகள் கீழ்கண்டவாறு:

வயிற்று நீர்கோர்ப்புக்கு சிகிச்சையளிக்காமல் விட்டுவிட்டால் அதனால் மேலும் ஏற்படக்கூடிய சிக்கல்கள் பின்வருமாறு:

 • பாக்டீரியல் பெரிடோனிட்டிஸ்.
 • நீர்த்தல் ஹைப்போநெட்ரீமியா.
 • ஹெப்படோரீனல் சிண்ட்ரோம்.
 • தொப்புள் குடலிறக்கம்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

வயிற்றில் நீர்கோர்ப்பு என்பது பல்வேறு நிகழ்வுகளின் ஒரு விளைவாகும். இழைநார் வளர்ச்சி இதில் மிக பொதுவானதாகும், இதன் காரணமாக ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு கல்லீரலின் முக்கிய ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கிறது.சிறுநீரகங்கள் அதிகப்படியான உப்பை சிறுநீர் வழியாக வெளியேற்றுவதற்கான போதிய திறன் இல்லாமல் இருப்பதால் அது திரவ குவிப்பிற்கு வழிவகுக்கிறது.  இது வயிற்றில் நீர்கோர்ப்பை ஏற்படுகிறது மற்றும் அதன் விளைவாக ஆல்புமினின் (ஒரு ரத்த புரதம்) அளவு குறைகிறது. கல்லீரலை சேதப்படுத்தும் நோய்களால் வயிற்றில் நீர்கோர்ப்பு ஏற்படும்.

உதாரணங்கள்:

 • நீண்ட கால ஹெபடைடிஸ் பி அல்லது சி நோய்த்தொற்று
 • மது அருந்துதல்
 • சில புற்றுநோய்கள்: குடல்வால்,பெருங்குடல்,கருப்பைகள், கர்ப்பப்பை,கணையம் மற்றும் கல்லீரல்.

மற்றவை:

 • கல்லீரலின் ரத்த நாளங்களில் கட்டிகள்.
 • நெருக்கல் இதயச்செயலிழப்பு.
 • கணைய அழற்சி.
 • இதயத்தை சூழ்ந்துள்ள பை போன்ற படலம் கடினப்படுவது அல்லது வடு ஏற்படுவது.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

வயிற்றில் உள்ள வீக்கத்தின் அளவை அறிவதற்காக ஆரம்பத்தில் ஒரு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது.

 • திரவ மாதிரியை சோதித்தல்.
 • அதிலுள்ள நோய்தொற்றையோ அல்லது புற்றுநோயையோ கண்டறிவதற்காக திரவம் உறியப்பட்டு சோதிக்க படலாம்.
 • சோதனைக்காக திரவத்தை அகற்றுவதற்கு பரசென்டேசிஸ் எனும் செயல்முறை பயன்படுத்தப்படுகிறது.

தோற்றமாக்கல் சோதனைகள்:

 • வயிற்றின் எம்ஆர்ஐ, சிடி அல்லது அல்ட்ராசவுண்ட்.

கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தின் செயல்பாடுகளை மதிப்பிடும் சோதனைகள்:

 • 24 மணிநேரத்துக்கு சிறுநீரை சேகரித்தல்.
 • மின்னழுத்த நிலை.
 • சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள்.
 • கல்லீரல் செயல்பாட்டு சோதனைகள்.
 • உறைதல் நிலை.

இதற்கான சிகிச்சை உடலிலிருந்து  அதிகப்படியான திரவத்ததை வெளியேற்றுவதையும் ஏதேனும் நோய்த்தொற்று இருந்தால் ஆண்டிபையோடிக்ஸ் வழங்குவதையும் அடிப்படையாக கொண்டுள்ளது.

மருத்துவரால் பரிந்துரைக்கப்படும் அறுவை சிகிச்சைகள் இவையாகும்:

 • அதிகப்படியான திரவத்தை அகற்றுதல்.
 • கல்லீரலின் உள்ளே ஒரு பிரத்யேகமான டிராஜெக்யூலர் இன்ராஹெபாட்டிக் போர்டோசிஸ்டெமிக் ஷென்ட்டை நிலைநிறுத்துவதன் மூலம் அதனுள்ளே செல்லும் ரத்தத்தை சரி செய்தல்.

பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை மாற்றங்கள்

 • உங்கள் கல்லீரலை  மேலும் சேதப்படுத்தி நிலைமையை மோசமாக்கும் என்பதால் மதுவை தவிர்த்து விடுங்கள் (மேலும் படிக்கவும்: மது பழக்கத்தை நிறுத்துவது எப்படி).
 • உணவுமுறையில் உப்பின் அளவை குறைக்கவும். (நாளொன்றுக்கு 1500 மில்லிகிராம்க்குமேல் சோடியம் எடுத்துக்கொள்ள கூடாது). பொட்டாசியம் இல்லாத உப்பின் மாற்று பொருட்கள் உதவியாக இருக்கக்கூடும்.
 • அருந்தும் திரவத்தின் அளவை குறைக்கவும்.

வயிற்றில் நீர்கோர்ப்பு என்பது ஒரு நோயல்ல, அது உடலுக்கு மிகுந்த சேதத்தை உண்டாகும் தவறான வாழ்க்கை முறை தேர்வுகளால் உண்டாகும் ஒரு நிலையே ஆகும். மருந்துகளும், வாழ்க்கை முறை மாற்றங்களும் முறையாக பின்பற்றப்பட்டால் இந்த நிலையை பெருமளவிற்கு குறைக்க முடியும்.மேற்கோள்கள்

 1. Aniket Mule et al. Prevalence of Chronic Liver Disease Among the Patients of Celiac Disease and Effect of Gluten-Free Diet on Outcome of Liver Disease: A Prospective Study. Journal of The Association of Physicians of India. Vol. 66. March 2018
 2. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Ascites
 3. Cleveland Clinic. Ascites: Management and Treatment. Euclid Avenue, Cleveland; [internet]
 4. American College of Gastroenterology. Ascites: A Common Problem in People with Cirrhosis. Bethesda; [internet]
 5. University of Rochester Medical Center [Internet]. Rochester (NY): University of Rochester Medical Center; Ascites
 6. Kavita Paul. To Study the Incidence, Predictive Factors and Clinical Outcome of Spontaneous Bacterial Peritonitis in Patients of Cirrhosis with Ascites. J Clin Diagn Res. 2015 Jul; 9(7): OC09–OC12. PMID: 26393155

வயிற்றில் நீர்க் கோர்ப்பு (பெருவயிறு எனப்படும் மகோதரம்) டாக்டர்கள்

Dr. Arun Mathur Dr. Arun Mathur General Physician
15 Years of Experience
Dr. Siddhartha Vatsa Dr. Siddhartha Vatsa General Physician
3 Years of Experience
Dr. Harshvardhan Deshpande Dr. Harshvardhan Deshpande General Physician
13 Years of Experience
Dr. Supriya Shirish Dr. Supriya Shirish General Physician
20 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

வயிற்றில் நீர்க் கோர்ப்பு (பெருவயிறு எனப்படும் மகோதரம்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for வயிற்றில் நீர்க் கோர்ப்பு (பெருவயிறு எனப்படும் மகோதரம்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.