ஆட்டிசம் - Autism in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

February 07, 2019

March 06, 2020

ஆட்டிசம்
ஆட்டிசம்

சுருக்கம்

ஆடிசம் மூளையின் ஆரம்பகால வளர்ச்சியின் போது வரும் பிரச்சினைக்கு தொடர்புடையது. இந்த நிலை பொதுவாக நடத்தை மாற்றங்களை ஏற்படுத்தி குறிப்பாக சமூக தொடர்புகளில் சிரமம் உண்டாகும். இதன் அறிகுறிகள் சுமாரான சமூக திறன்கள், மீண்டும் செய்யும் நடத்தை, உணர்ச்சிகளை வெளிப்படுத்த மற்றும் புரிந்து கொள்வதில் திணறல், மோசமான தொடர்பு திறன் ஆகியவை ஆகும். ஆட்டிஸம் அலைமாலை என்ற வார்த்தை இப்போது அதன் வேறுபட்ட நிலைகள் மற்றும் மாறுபட்ட அறிகுறிகள் உள்ளடக்குகிறது. குழந்தை பருவத்தின் ஆரம்ப கட்டங்களில் தொடங்கி, ஆடிசம் சமுதாயத்துடன் தொடர்பு/ஈடுபடும் திறனை பாதிக்கிறது. ஆடிசதிற்கு ஒரு சிகிச்சை இல்லாத நிலையில்; ஆரம்ப கண்டறிதல் மற்றும் பரிசீலனைகள் அதன் தீவிரத்தை குறைக்க உதவும். தவிர குழந்தைகள் தங்களை நன்றாக பராமரிக்கவும் சிறந்த முறையில் சமாளிப்பு வழிமுறைகள் கற்று கொள்ளவும் உதவுகிறது.

ஆட்டிசம் சிகிச்சை - Treatment of Autism in Tamil

ஆடிசத்தை சரி செய்து இயல்பாகக எந்த சிகிச்சையும் இல்லை. அனைத்து சிகிச்சை முறைகளின் நோக்கமும், சிரமத்தைகுறைத்து தனிநபர்களின் சுதந்திரம் மற்றும் திறனை அதிகரிபதாகும். வழக்கமாக ஆடிசத்துடன் வலிப்பு மற்றும் அதிகஇயக்கம் கொன்டவர்களுக்கேற்ப சிகிச்சைகள் தனிப்பயனாக்கப்படுகின்றன.

மற்றும் ஆடிசம் அலைமாலையில் ஒவொருவரும் ஒவ்வொரு தேவயை கொன்டிருப்பதனால் அவர்களுக்கு வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் தனிப்பயனாக்கப்பட்டு, குறிப்பிட்ட அமைப்பில் இருக்க வேண்டும். ஆட்டிஸ்ட்டிக் அலைமாலையில் உள்ள பெரும்பாலான நபர்கள் கவனம் பற்றாக்குறை ஹைபராக்டிவிட்டி கோளாறு (ADHD) போன்ற மற்ற கோளாறுகளின் அறிகுறிகளைக் காட்டுவதால் இந்த தனிப்பயனாக்கம் இன்னும் கடினமாகிறது

முன்னதாகவே தலையீடுகள் தொடங்கினால், முடிவுகள் விரைவில் காணப்படுகின்றன. இதனால் தனிநபருடைய  தற்போதைய நிலைகள் மற்றும் எதிர்பார்க்கும் நிலையின் உள்ள இடைவெளி குறைகிறது. தனிப்பட்ட தேவைகளைப் பொறுத்து பின்வரும் சிகிச்சைகளின் கலவையாக கொடுக்கலாம்

  • நடத்தை மேலாண்மை சிகிச்சை
    இதன் நோக்கம் விரும்பத்தக்க நடத்தையை வலு படுத்தி தேவையற்ற/ ஏற்றுக்கொள்ளபடாத நடத்தையை குறைப்பதாகும். பல நடத்தை கருவிகள் பயன்படுத்தி நடத்தையை வலுவடைய செய்கின்றனர், உதாரணத்திற்கு பயிற்சி மற்றும் நேர்மறை நடத்தையை ஏற்றுக்கொள்ள வைக்கின்றனர்.
  • புலனுணர்வு நடத்தை சிகிச்சை
    சிகிச்சையின் இந்த வடிவம்- நடத்தை, எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் மனதில் வைத்து, ஒருவருக்கு பிரச்சினைகள் உண்டாக்கும் சூழ்நிலைகள் மற்றும் உணர்வுகளுக்கு அடையாளம் காண உதவும். அது உணர்ச்சிகளை அடையாளம் கண்டு, பதட்டமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள உதவுகிறது.
  • கூட்டு கவனம் சிகிச்சை
    தனிப்பட்ட தொடர்புகளிலும், இணைப்புகளிலும் கவனம் செலுத்துவது இந்த சிகிச்சையின் ஒரு முக்கிய அம்சமாகும். சிகிச்சையின் இந்த வடிவம் மிகவும் பயனுள்ளதான மற்றும் நீடித்த விளைவைக் தர கூடியதாக இருக்கும். தொடர்பு, மொழி மற்றும் பகிர்ந்த கவனம் இதன் முக்கிய அம்சங்கள் ஆகும். உதாரனத்திற்க்கு சுட்டி காட்டி, பொருட்கள் மற்றும் மனிதர்கள் மீது மாறி மாறி பார்வை மாற்றுவது
  • தொழில் சிகிச்சை                                            
    இந்த சிகிச்சை, குழந்தையின் வழக்கமான பணிகள் மற்றும் தினசரி நடைமுறைகளை நிறைவேற்றுவதற்கு கவனம் செலுத்துகிறது மற்றும் அதன் முன்னேற்றத்திற்கு உதவுகிறது . குழந்தைகள் சுதந்திரமாக உண்டு, ஆடை அணிந்து, சுய கவனம் செலுத்தி, தகவல் தொடர்பு கொண்டு பிற உடல் செயல்களில் ஈடுபட சிகிச்சையாளர்கள் உதவுகிறார்கள்
  • உடல் சிகிச்சை
    இயக்கம் என்பது ஆடிசம் அலைமாலையில் உள்ளவர்களுக்கு பொதுவான பிரச்சனை என்பதால், பெரும்பாலான நபர்கள் உடல் சிகிச்சை பெறுகின்றனர். இது  பலத்தை கூட்டி, தோரணையை சரிவர மேம்படுத்தி, அசைவு திறன்களை முன்னேரசெய்வதில் உதவுகிறது. ஆயினும், இந்த சிகிச்சையானது இயக்கத்திற்கு குறிப்பிடத்தக்க வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதை நிரூபிக்க எந்த உறுதியான ஆதாராமும் இதுவரை இல்லை
  • சமூக திறமை பயிற்சி
    சமூக திறமை பயிற்சி குழந்தைகளின் நடத்தையியல் முன்னேற்றத்தை வலியுறுத்துவதோடு பரஸ்பர தொடர்புகளையும் அனுபவிக்கவும் உதவுகிறது. இது விரும்பத்தக்க வடிவங்களை வலியுறுத்தி அவற்றை வலு ஊட்டுகிறது. அவற்றில் சில திறமைகள்: உரையாடல்களைத் தொடங்குவது, கேலி கையாள்வது மற்றும் விளையாட்டு நல்லுணர்வு காட்டுதல் ஆகியவை.
  • பேச்சு மொழி சிகிச்சை
    சாதாரண இடைவினைகளை, வாய்மொழி மற்றும் சொற்களில்லா தொடர்பு ஆகிய இரண்டின் மூலம் வெளிபடுத்த இந்த சிகிச்சையானது உதவுகிறது. இந்த சிகிச்சை, தனி ஒருவன் தன் உணர்ச்சிகளை வார்த்தைகள், பொருள்களின் பெயர்கள், அர்த்தமுள்ள வாக்கியங்களை உருவாக்கி, ஏற்ற தாழ்வுகளுடன்  பேச உதவும். மேலும் கண் தொடர்பு மற்றும் சைகைகள் மூலம் செய்திகளை பரிமாற சைகை மொழியும் இதன் அங்கமாகும்.
  • ஊட்டச்சத்து சிகிச்சை
    ஆடிசம் உள்ளவர்களுக்கு பல்வேறு வடிவங்களில் ஊட்டச்சத்து ஆலோசனை வழங்கபடுகிறது. அவற்றில்  சிலது அறிவியல் ஆதாரங்களினால் ஒத்துகொள்ள பட்டுள்ளது. ஆடிசம் உள்ளவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் சீரான உணவு கொடுத்து போதுமான ஊட்டச்சத்தை அளிக்க வேண்டும். ஆடிசம் உள்ளவர்கள் சில வகையான உணவுகளிலிருந்து (உதாரணத்திற்கு,மென்மையான மற்றும் கொழகொழபான உணவுகள்) விலகியிருக்கலாம். பெரும்பாலும், ஆடிசம் உள்ளவர்கள் உணவுகளுடன் உளவியல் ரீதியான தொடர்புகளை ஏற்படுத்துகின்றனர் – அவற்றை  குமட்டல் அல்லது வலியுடன் தொடர்புபடுத்துகின்றனர். சில ஆய்வுகள், ஆடிசம் உள்ளவர்களுக்கு மெல்லிய மற்றும் பலமற்ற எலும்புகள் இருப்பதைக் குறிக்கின்றன. ஊட்டச்சத்து பற்றாக்குறை அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத அளவிற்கு பிரச்சினைகளை சமாளிக்க வேண்டும்
  • ஆடிசத்திற்கு மருந்துகள்
    ஆடிசம் உள்ளவர்களுக்கு பரிந்துரைக்கப்பதுவதற்கு குறிப்பிட்ட மருந்து ஏதும் இல்லை. சில சந்தர்ப்பங்களில், ஆட்டிஸ்டிக் நபர்களின் அறிகுறியாகும் சில  சூழ்நிலைக்கேற்ப மருந்துகளை நிபுணர் பரிந்துரைக்கலாம், ஆன்டிடிப்ரஸண்ட்ஸ், ஆன்டிகோன்வால்ஸன்ட்ஸ், ஆன்டி-அன்க்சைடி மற்றும் அதிகபடியான இயக்கத்திற்கு  ஸ்டிமுலன்ஸ் பரிந்துரைக்கப்படலாம். 
  • அந்தந்த சமயத்தில் தேவைகேற்ற பல்வேறு சிகிச்சைகள், மாற்றியமைக்கப்படுகின்றன. பாடத்திட்டப் பற்றாக்குறைக்கு பாடத்திட்ட அடிப்படையிலான சிகிச்சை, பெற்றோர்-நடுநிலை சிகிச்சை மற்றும் கூட்டு கவனத்தை சிகிச்சை அவற்றில் சிலதாகும். இருப்பினும், முதன்மை திறனாய்வு அமைப்பும், நடத்தை சம்பந்தப்பட்ட சிக்கல்களில் பெரிதாக மற்றம் இருபதில்லை.

ஆட்டிஸத்திற்கான வாழ்க்கை முறை மேலாண்மை

ஆரம்ப ஆண்டுகளில் ஆடிசத்த்தை சமாளிக்க தனிபட்ட அந்த நபருக்கும்  மற்றும் குடும்பம் இருவருக்கும், ஒரு கடினமான பணியாக இருக்கும். அதன் புதுமையான நிலைமை மற்றும் அதன் விளைவுகள், அனுபவத்தின் தன்மை மற்றும் அதன் தேவைகள், அதற்க்கு தேவைப்படும் உதவி ஆகியவற்றினால், அது உடல் ரீதியிலும் மற்றும் மன ரீதியாகவும் ஒருவரில் சக்தியை உறிஞ்சி எடுத்து விடும். இருப்பினும், சரியான முறையில், சரியான அளவில் ஆரம்ப கட்டங்களிலேயே உடன்பட்டு வறுவது இதனை சமாளிக்க பெரிதும் உதவும்.

ஆடிசத்த்தை நிர்வகிப்பதில், பின்வரும் 2 முக்கிய மேலாண்மை முறைகள்  உள்ளது:

  • கல்வி மேலாண்மை  
    ஆடிசத்தின் அலைமாலையின் எல்லை கோட்டிலோ அல்லது அதற்க்கும் கீழே உள்ள குழைந்தைகளுக்கு  சாதாரண பள்ளி செல்வது ஒரு நல்ல தேர்வாக இருக்கலாம். இதனால் குழந்தைகளுக்கு சமூகப் பழக்க வழக்கம், ஒருவரை போல் செய்தல் போன்ற கற்றல் கருவிகள் பெற ஒரு பெரிய வாய்ப்பு கிடைக்கும். தீவிர ஆடிசம் உள்ளவர்களுக்கு இதற்கான சிறப்பு பள்ளிகள் உள்ளன, அவற்றில் இந்த குழந்தைகள் தனிச்சையாக வாழ மற்றும் அவர்களின் திறமையின் உச்சத்திற்கு எட்ட பயிற்சி குடுக்கப் படுகின்றன. தனிச்சையாக செயல்படும் பொது, அவர்களுக்கு கருத்துக்கள் புரிவது மட்டும் இல்லாமல் அவர்களின் திறமையை வளர்பதற்கும், வருங்காலத்திர்க்கு ஒரு வழி அமைப்பதற்கும் வாய்ப்பு அழிக்கிறது   
  • நடத்தை மேலாண்மை
    ஆட்டிஸ்ட்டிக் பிள்ளைகளை கணிக்க முடியாது. அவர்களு-க்காக ஒரு நிர்ணயிக்கப்பட்ட கற்பிக்கும் முறை உள்ளது.   டிஈஎசிஎச் முறை தனிப்பட்ட திறமை மற்றும் அதன் சுற்றுச் சூழலை ஒரே நேரத்தில் உருவாக்க உதவுகிறது. இந்த முறை தனிபட்ட நபர்களுக்கு திட்டமிட்டு, ஒழுங்கமைத்து, அவர்களின் நடவடிக்கைகளை சிறப்பாக சரிவர படுத்த  உதவும். மாற்றதிற்கு தயார் படுத்துதல், திட்டமிட்ட கால அட்டவணைகள் செய்தல், தனி நபர்களின் மேலாண்மைக்கு புதிய உத்திகளை உருவாக்குதல் ஆகியவை; நடத்தை மேலாண்மைக்கான சில முக்கிய அம்சங்கள் ஆகும்.

ஆடிசம் கொண்ட ஒரு நபரின் வாழ்க்கை முறையை நிர்வகிப்பது ஒரு வாழ்நாள் முழுக்க நிகழும் செயல் ஆகும். முன்னதாகவே  தலையீடு செய்து இருந்தால், வளர்ந்த பிறகு ஒருவர் தனிச்சையாக தகுதியுடையவர்களாக வரலாம். நேர்மறை மற்றும் ஊக்கம் குடுக்கும் சூழலை வழங்கினால், மேலும் திருப்திகரமான வாழ்க்கை வாழ முடியும்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹495  ₹799  38% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; Autism Spectrum Disorder. National Institutes of Health; Bethesda, Maryland, United States
  2. Catherine E. Rice; Am Fam Physician. 2011 Mar 1;83(5):515-520. [Internet] American Academy of Family Physicians; The Changing Prevalence of the Autism Spectrum Disorders.
  3. National Autism Association [Internet]. Portsmouth, RI. Signs of Autism.
  4. van Os J1, Kapur S. Schizophrenia.. Lancet. 2009 Aug 22;374(9690):635-45. doi: 10.1016/S0140-6736(09)60995-8. PMID: 19700006
  5. Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human; National Health Service [Internet]. UK; What causes autism?
  6. Eunice Kennedy Shriver National Institute of Child Health and Human; Monday, July 21, 2014; Common gene variants account for most genetic risk for autism. National Health Service [Internet]. UK.
  7. Hallmayer, J., Cleveland, S., Torres, A., Phillips, J., Cohen, B., Torigoe, T., et al. (2011); [link. Archives of General Psychiatry, 68(11), 1095–1102. PMID: 21727249.
  8. Landrigan PJ1. What causes autism? Exploring the environmental contribution.. Curr Opin Pediatr. 2010 Apr;22(2):219-25. PMID: 20087185.
  9. Paul S. Carbone, Megan Farley, Toby Davis. Primary Care for Children with Autism. Am Fam Physician. 2010 Feb 15;81(4):453-460.[Internet] American Academy of Family Physicians.
  10. National Institute of Mental Health [Internet] Bethesda, MD; Autism Spectrum Disorder. National Institutes of Health; Bethesda, Maryland, United States
  11. Kotte, A., Joshi, G., Fried, R., Uchida, M., Spencer, A., Woodworth, K. Y., et al. (2013). Autistic Traits in Children With and Without ADHD. Pediatrics, 132(3), e612–e622. PMID: 23979086
  12. Lang, R., Regester, A., Lauderdale, S., Ashbaugh, K., & Haring, A. (2010). Treatment of anxiety in autism spectrum disorders using cognitive behavior therapy: A systematic review. Developmental Neurorehabilitation, 13(1), 53–63. PMID: 20067346.
  13. Kasari, C., Gulsrud, A. C., Wong, C., Kwon, S., & Locke, J. (2010). Randomized controlled caregiver mediated joint attention intervention for toddlers with autism.. Journal of Autism and Developmental Disorders, 40(9), 1045–1056. PMID: 20145986.
  14. Case-Smith, J., & Arbesman, M. (2008). Evidence-based review of interventions for autism used in or of relevance to occupational therapy. American Journal of Occupational Therapy, 62, 412–429. PMID: 18712004.
  15. Downey, R., & Rapport, M. J. (2012). Motor activity in children with autism: A review of current literature. . Pediatric Physical Therapy, 24(1), 2–20. PMID: 22207460.
  16. Hediger, M. L., England, L. J., Molloy, C. A., Yu, K. F., Manning-Courtney, P., & Mills, J. L. (2008). Reduced bone cortical thickness in boys with autism or autism spectrum disorder. Journal of Autism and Developmental Disorders, 38(5), 848–858. PMID: 17879151.
  17. Scott M. Myers [Internet] November 2007, Volume 120 / Issue 5 From; Management of Children With Autism Spectrum Disorders. The American Academy of Pediatrics
  18. Mesibov GB, Shea V, Schopler E; The TEACCH Program in the Era of Evidence-Based Practice. J Autism Dev Disord; published 24 nov 2009.

ஆட்டிசம் க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஆட்டிசம். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.