முதுகு வலி - Back Pain in Tamil

Dr. Nadheer K M (AIIMS)MBBS

June 28, 2017

March 06, 2020

முதுகு வலி
முதுகு வலி

சுருக்கம்

முதுகு வலி என்பது, மருத்துவரை அனுகவைக்கும் மிகவும் பொதுவான சுகாதார பிரச்சினையில் ஒன்றாகும். வேலையில் இருந்து விடுப்பு எடுக்கவைக்கும் மிகவும் பொதுவான காரணங்களில் இதுவும் ஒன்று. முதுகு வலியானது குறைந்த காலத்திலோ (சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு நீடிக்கும்) அல்லது நாட்பட்டதாக இருக்கும் (3 மாதங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலம் நீடிக்கலாகும்). வலியின் இடத்தை பொறுத்து, முதுகு வலியானது மந்தமாகவோ அல்லது தீவிரமானதாக, விட்டுவிட்டு, திடிரென்று அல்லது தொடர்ச்சியானதாக இருக்கலாம். கால்களிலோ/ இடுப்பிலோ மரமரப்பு அல்லது கூச்சம் இருந்தாலோ சிறுநீர் மற்றும் குடல் கட்டுப்பாடு இழப்பு இருந்தாலோ, பிற உறுப்புக்களின் அசைவுகள் முடுக்கப்பட்டு இருந்தாலோ உடனடியான மருத்துவ கவனிப்பு அவசியம். இடுப்பு வலியின் பொதுவான காரணங்கள்; தசைப பிடிப்பு, காயம், வீழ்ச்சி அடைதல் அல்லது ஹெர்னியேட்டட் இன்டர்வெர்டிர்பல் டிஸ்க், முதுகெலும்பு முறிவு, முதுகெலும்பு அல்லது நரம்பு வேர் சுருக்கம், வயதின் காரணமாக மூட்டுவலி, ஆஸ்டியோபோரோசிஸ், ஆட்டோஇம்ம்யுன் கோளாறு (அன்கைலோசிங் ஸ்போண்டிலிடிஸ்), முதுகெலும்பு ஸ்டெனோசிஸ், முதுகெலும்பு குறைபாடு மற்றும் புற்றுநோய்; ஆகும். சில சமயங்களில்  மன அழுத்தம் கூட இடுப்பு வலி ஏற்படுத்தும், இது பெரும்பாலும் புறக்கணிக்கப்படுகிறது. சிறுநீரகங்கள் (சிறுநீரக கல், கட்டி)மற்றும் கருப்பை (நார்த்திசுக்கட்டாயம், மாதவிடாய் வலி மற்றும் கர்ப்பம்) போன்ற பல்வேறு உறுப்புகளில் வலியின் விளைவாக கூட இடுப்பு வலி வரலாம். எந்த மருத்துவ பிரச்சனையும் இல்லாத குறும்வலி, ஓய்வு மற்றும் மருந்துகளால் நாளடைவில் சரியாகிவிடும். எலும்பு முறிவு அல்லது முதுகு தண்டு வட்டுக்குப் விலகுதலின் காரணமாக, நடமாட்டத்தில்  சிரமப்பட்டால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, பழைய சிகிச்சை முறையை கையாளவேண்டும். நாள்பட்ட  முதுகு வலிக்கு  நீண்டகால பராமரிப்பு தேவைப்படலாம், இதில் மருந்துகள், பிசியோதெரபி மற்றும் குறிப்பிட்ட பயிற்சிகள் ஆகியவை அடங்கும்.

முதுகு வலி அறிகுறிகள் என்ன - Symptoms of Back Pain in Tamil

பெரும்பாலும் இடுப்பு வலியுடன் பிற அறிகுறிகளும் தோன்றும். இந்த அறிகுறிகள் மருத்துவருக்கு வலியின் காரணத்தை கண்டறிய உதவும். அவை :

 • உட்கார்ந்து, கீழே படுத்து, எடை தூக்கி அல்லது குனிய செய்தால் வலி அதிகரிக்கும்
 • கால் மற்றும் பிட்டத்தில் பரவும் வலி
 • கால்கள் அல்லது இடுப்பில் கூச்சம் அல்லது மரத்தது போன்ற உணர்வு
 • சிறுநீர் மற்றும் குடல் கட்டுப்பாடு இழப்பு
 • நின்று , நகர்ந்து  அல்லது உட்கார்ந்து இருக்கும் போது உடலில் அசௌகரியத்தை ஏற்படுத்தும் கடுமையான விறைப்புத்தன்மை கொண்ட வலி
 • மேல்முதுகில் இருந்து சிறுநீர் பை வரை ஊடுருவக்கூடிய வலி ஏற்படும், இதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்
 • வாந்தி மற்றும் காய்ச்சலுடன் கடுமையாக அடிவயிற்று வலி
 • அடிவயிற்று வீக்கத்தினால் சிலசமயம் முதுகு வலி  உண்டாகிறது.
 • படுத்துக் கொண்டிருக்கும் பொது  கட்டியின் காரணமாக அடிவயிற்றில் அதிகரிக்கும் வலி, இதனால் சோர்வு மற்றும் இடை இழப்பு ஏற்படுகிறது 

முதுகு வலி சிகிச்சை - Treatment of Back Pain in Tamil

இதன் சிகிச்சையை மூன்று பாகமாக பிரிக்கலாம். வலியின் முதுகு வலியுடன் தன்மையின் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் மருத்துவர் சிகிச்சையை தீர்மானிப்பார்

மருந்தில்லா  சிகிச்சை

குறுகிய காலத்திற்கு வரும் குறிப்பிட முடியாத முதுகு வலி என்றால் அது ஓய்வு மற்றும் மருந்துகளால் சரி செய்து விடலாம் சில சுயமாக செய்யகூடிய முதுகு வலி நிவர்த்திகள் இவையாகும்:

 • சூடு ஒத்தடம் மற்றும் உருவுதல்
  இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து தசை இருக்கத்தை தளர்த்தும்
 • பிசியோதெரபி பயிற்சிகள் மற்றும் இழுவை சிகிச்சை
  இது பிசியோதெரபிஸ்ட்களின் மேற்பார்வையின் செய்யப்பட வேண்டும். இந்த நன்றாகவே வலியை குறைக்க உதவும். 
 • மாற்று சிகிச்சைகள்
  மாற்று சிகிச்சையகள் கீழ் வருபவை :
  • யோகா, பல்வேறு நீட்சி பயிற்சிகள் மற்றும் தசைகள் விறைப்பு குறைக்க செயல்கள்
  • அகூபங்க்ச்சர் :உடலில் குறிப்பிட்ட புள்ளிகளில் ஊசி குத்தி  வலியை நிவர்த்தி செய்ய உதவுகிறது.
  • சிரோபிராக்டிக் சிகிச்சையில் என்பது கட்டுபடுத்தப்பட்ட விசையில் முதுகெலும்பு திறம்பட கையாளுதல், அதன் விளைவாக  முதுகெலும்பில் இடையிலான  மூட்டுகளில் இறுக்கத்தை தளர்பிப்பது
  • தியானம், உயிரியல் பின்னூட்டம், மற்றும் நடவடிக்கைகள் மாற்றம் போன்ற மனம் தளர்வு நுட்பங்கள், வலியை நிவாரணம் செய்ய உதவுகின்றன.

மருத்துவ சிகிச்சை
நாள்பட்ட முதுகு வலி சரி செய்வதில் மருந்துகளற்ற சிகிச்சை கை குடுக்காதபொது, மருந்துகள் ஒரு முக்கிய பங்கு வகுக்கிறது. பொதுவாக பரிந்துரைக்கப்படும் மருந்துகள் இவையாகும்:

 • பாராசிட்டமோல் அல்லது அசெட்டமினோபன்
  இந்த மருந்து  பொதுவாக முதுகு வலிக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் மருந்து ஆகும். இதற்கு குறைவான பக்க விளைவுகள் உள்ளது. 
 • ஸ்டீராய்ட்சில்லா-வீக்கம் எதிர்க்கும்  மருந்துகள் (NSAIDS) இப்யூபுரூஃபன் மற்றும் நாப்ராக்ஸன் ஆகியவை வலிநிவாரனிகள். பாராசிட்டமோல் வேலை செய்யாதபோது  இவை பரிந்துரைக்கப்படுகின்றன. மேற்பூச்சு கிரீம்கள், களிம்புகள் மற்றும் ஸ்ப்ரேய்ஸ் ஆகியவையாகும் வலியின் தீவிரத்தை குறைப்பதில் உதவும்
 • தசை தளர்பான்கள்
  NSAID களுடன் சேர்ந்து, சைக்ளோபென்சபிரைன் மற்றும் மெத்தோகார்பாமோல் போன்ற தசை தளர்ப்பான்கள் தசைகளின் இருக்க்கதை குறைப்பதற்காக மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்
 • போதையூட்டும் மருந்துகள்                             
  ட்ராமேடால் மற்றும் மோர்பின் தீவிர வழியை குறைக்க உதவுகின்றன .அவை மிக சிறு காலத்திற்கே பரிந்துரைக்க- படுகின்றன(2-3 வாரங்களுக்கு).நீண்ட நாள் உபயோகிப்பது நல்லதல்ல,பக்கவிளைவாக மயக்கம்,மலச்சிக்கல்,நாவின் வறட்சி ,மெதுவான சுவாசம் மற்றும் தோல்அரிப்பு தோன்றலாம்                       
 • அண்டிடிப்றேசன்ட்ஸ்
  இவை முக்கியமாகப்  நாள்பட்ட  முதுகு வலி மற்றும் நீண்டகால வலியில் காரணமாக மனச்சோர்வு அடைந்தவர்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. இவை அமிரிப்ஃப்டிளைன், டூலாக்ஸ்நைன் மற்றும் இம்ப்ரமைன் ஆகியவை அடங்கும்.இதற்கான பக்க விளைவுகள் அதிகம்(உதாரனகமாக, மங்கலான பார்வை, எடை அதிகரிப்பு மற்றும் மயக்கம்) என்பதால், இந்த மருந்துகள் மருத்துவரின்  மேற்பார்வையில் மற்றுமே எடுத்துக்கொள்ளவேண்டும்  
 • ஸ்ட்டீராய்டுகள்                                       
  ப்ரிட்னிசோலோன் போன்ற கார்டிகோஸ்டீராய்டுகள், கால்களில் படரும் வலியை குறைக்க உதவுகின்றன. இது அடிபட்ட இடத்தில் வீக்கத்தை குறைக்கவும் உதவும்
 • அண்டி கன்வல்சன்ட்ஸ்                                                     
  சமீபத்திய ஆய்வுகள் படி வலி குறைக்கும் மருந்துடன் வலிப்பு நோய் மருந்தை இணைந்து பயன்படுத்துவது நரம்பு வலியை நிவர்த்தி செய்வதில் பயனுள்ளதாக இருக்கிறது, குறிப்பாக இதனால்  நாட்பட்ட முதுகு வலி குறைகிறது . கார்பமாசெபின், கபாபன்டின் மற்றும் வால்ராபிக் அமிலம் ஆகிய மருந்துகள் பொதுவாக வலிப்புத்தாக்கதிற்கு உபயோகிக்கின்றன. குழப்பம், இரைப்பை கோளாறு மற்றும் தலைவலி ஆகியவை அண்டி கன்வல்சன்ட்ஸ் மருந்துகளினால் ஏற்படும் பொதுவான பக்க விளைவுகளாகும்

அறுவை சிகிச்சை

அறுவை சிகிச்சை இல்லாமல் மற்ற சிகிச்சைகளினால் வலி குறையாமல் இருக்கும் பொழுது மருத்துவர்கள் அறுவை சிகிச்சை பரிந்துரை செய்வார்கள்.
பரவும் நரம்பு வலி, அதிகரிக்கும் தசைகளில் தளர்ச்சி , முதுகெலும்புகளில் உள்ள தண்டு வட்டம் முறிவு (முதுகெலும்பு ச்டேநோசிஸ்) இவைகள் மருந்துகளால் அல்லது மருத்துவமில்லாத சிகிச்சையால் குணப்படுத்த இயலாத பொது  அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். எலும்பு முறிவு மற்றும் முதுகு நரம்பு நோய் போன்ற அவசரகால சந்தர்பங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இவற்றினால் முதுகு வலியுடன் சேர்ந்து பக்கவாதமும் ஏற்படலாம்.

 • முதுகெலும்பு இணைவு என்பது முதுகெலும்புகள் ஒன்றோடு ஒன்று ஓட்டவோ அல்லது இணைக்கப்படும், இதனால் அசைவுகள் தடுக்கப்படும்.இந்த வகை சிகிச்சை  மூட்டு வலி உள்ளவர்களுக்கு உதவும், இதனால் அசைவுகளும் கடுபடுத்தி வலியை குறைக்கலாம்
 • லமிநேக்டோமி அறுவை சிகிச்சையில் நரம்பு மீது அழுத்தம் குடுக்கம் முதுகெலும்பு அல்லது தசைநார் பகுதியாக நீக்கபடும். முதுகெலும்பு ஸ்டெனோசிஸ் எனப்படும் நோய் முதுகெலும்பை குறுகலாக்கி வலியின் காரணமாக இருந்தால் இந்த அறுவை சிகிச்சை செய்யப்படும்
 • ஃபாரமிநோடோமி எனப்படும் அறுவை சிகிச்சையில் முதுகெலும்பு நரம்புகள் வெளியேறும் இடத்தில் இடைவெளியை அதிகரித்து முதுகெலும்பு கால்வாயை விரிவுபடுத்துவது ஆகும்
 • டிஸ்கேக்டோமி எனப்படும் அறுவை சிகிச்சையில் வீக்கம் கொண்ட அல்லது நகந்திருக்கும் வட்டத்தை மருத்துவர் அகற்றி விடுவார். இது நகன்று இருக்கும் வட்டத்தினால் நரம்பிற்கு குடுக்கும் அழுத்தத்தை குறைக்கின்றது

எல்லா சிகிச்சைகளிலும் ஆபத்து உள்ளது என்றாலும், இதன் விளைவாக வலியிலிருந்து நிவாரணம், சுதந்திரமான நடமாட்டம், மருந்துகளின் உபயோகத்தை குறைப்பது, மற்றும் வேலை உற்பத்தித்திறன் அதிகரித்தல் ஆகும். அறுவை சிகிச்சை யின் அவசியத்தை அதன் நன்மை தீமைகளை மருத்துவரிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்க வேண்டும் 

.

முதுகு வலிகேற்ப வாழ்க்கைமுறை  மாற்றங்கள்

 • முதுகு வலியின் தூண்டுதல்களைத் தவிர்க்கவும் :
  முதுகு வலி மிகவும் வேதனைக்குரியதாக நிலைமையாக  இருக்கும். முதுகு வலியுடன் வாழ்வது மிகவும் பெரிய சவாலாக இருக்கும். தினம் தோறும் வீட்டினுள் மற்றும் பணியிடத்தில் செய்யும்  வழக்கமான நடவடிக்கைகள் சிலநேரங்களில் முதுகு வலியலைத் தூண்டலாம்,  அதிகரிக்கவும் செய்யலாம். முதுகு வலியை உண்டாக்கும் அல்லது அதிகரிக்கும் முதுகெலும்பிற்கு ஏதேனும் தொடந்துமீளும் செயல்களோ/ நகர்வோ  மற்றும் ஏதேனும் தோரணைகள் வீட்டிலோ அல்லது பணியிடதிலோ இருந்தால், அதை கண்டறிந்து தவிர்க்க வேண்டியது அவசியம்.
 • நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும்:
  மந்தமான வாழ்க்கைமுறை ஒருவருக்கு முதுகு வலியை உண்டாக்கலாம். அசையாமல் இருந்தால் இடை கூடி முதுகு வலி உண்டாகலாம். அதனால் நாள்தோறும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். 45 நிமிடங்கள் நடைபயிற்சி, நீச்சல் அல்லது ஏரோபிக் பயிற்சி போன்ற வழக்கமான மிதமான உடற்பயிற்சி-களையும் தேர்வு செய்யவும்.  இது தசைகள் வலுப்படுத்தவதுடன்  எடை குறைக்கவும்  உதவும்
 • சத்தான ஆரோக்கியமான உணவை பருகுங்கள்   
  வைட்டமின் மற்றும் மினரல்ஸ் நிறைந்த சத்தான ஆரோக்கியமான உணவை உண்டு முதுகெலும்பை பராமரியுங்கள்.வைட்டமின் டி மற்றும் கால்சியம் உள்ள உணவை சேருங்கள். இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் எலும்புகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகின்றன, எலும்புப்புரைகளை தடுக்கின்றன மற்றும் எலும்பு முறிவுகள் ஆபத்தை குறைக்கின்றன.
 • புகை பிடிக்கும் பழக்கத்தை விடவும்                             
  புகை பிடிப்பதால் முதுகு எலும்பிற்கு இரத்த போக்கு குறைக்கிறது . இதனால் இருமல் உண்டாகலாம், அது முதுகு வலியை தூண்டும்
 • உங்கள் தோரணை சரிசெய்யவும்                                       
  உடல் எடையை சமப்படுத்தி  சீராக கால்களின் எடையில் பகிரவும்.நிற்கும்போது அல்லது உட்காரும் பொது முதுகெலும்பில் உள்ள  வளைவுகளுக்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். ஒரு தவறான அல்லது முறையில்லாத தோரணை, தசைகளில் அழுத்தம் தந்து  நாள்பட்ட முதுகு வலி உண்டாக்கும்.
  கனமான எடையை தூக்கும்பொது பின்புறதசைகள் மீது அழுத்தத்தைக்  தவிர்ப்பதற்காக, சரியான முறை கையாள்வது மிகவும் முக்கியம்.


மேற்கோள்கள்

 1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Back Pain
 2. Supreet Bindra , Sinha A.G.K. and Benjamin A.I. Epidemiology of lower back pain in Indian population : A review. International Journal of Basic and Applied Medical Sciences. 2015 Vol. 5 (1) January-April, pp. 166-179/Bindra et al.
 3. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont IL. Low Back Pain.
 4. Health Harvard Publishing. Harvard Medical School. Back Pain. Harvard University, Cambridge, Massachusetts
 5. American Academy of Family Physicians [Internet]. Leawood (KS); Diagnosis and Treatment of Acute Low Back Pain
 6. National Institute of Arthritis and Musculoskeletal and Skin Diseases. What Is Back Pain?. U.S. Department of Health and Human Services Public Health Service.
 7. Doctors That Do | Doctors of Osteopathic Medicine. Prevention: The best treatment for back pain. American Osteopathic Association Chicago and Washington, D.C.
 8. Am Fam Physician. [Internet] American Academy of Family Physicians; Evaluation and Treatment of Acute Low Back Pain.
 9. American Chiropractic Association .[Internet]. American Chiropractic Foundation, ACA Political Action Committee, National Chiropractic Legal and Legislative Action Fund; Arlington, VA. What is Chiropractic?.
 10. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Medicines for back pain
 11. Orthoinfo [internet]. American Academy of Orthopaedic Surgeons, Rosemont IL. Artificial Disk Replacement in the Lumbar Spine.
 12. K M Refshauge and C G Maher. Low back pain investigations and prognosis: a review. Br J Sports Med. 2006 Jun; 40(6): 494–498. PMID: 16720885.
 13. Science Direct (Elsevier) [Internet]; What is the prognosis of back pain?

முதுகு வலி க்கான மருந்துகள்

Medicines listed below are available for முதுகு வலி. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Lab Tests recommended for முதுகு வலி

Number of tests are available for முதுகு வலி. We have listed commonly prescribed tests below: