தேனீக்கடி என்றால் என்ன?
பீ ஸ்டிங் (தேனீக்கடி) என்றால் ஒரு தேனீயின் கடி என்று பொருள், தேனீக்கடியானது மிக அதிகளவில் பிரச்சனை தரக்கூடிய ஒன்றாகவும் மாறலாம். தேனீக்கடி என்பது பிற பூச்சிக்கடிகளை விட அதிகப்பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது, ஏனெனில் அவை அமிலத் தன்மையைக் கொண்டவை, எனவே தான் நமது உடல் தேனீக்கடிக்கு வேறுவிதமாக வினைபுரிகிறது.
தேனீயால் கடிக்கப்பட்ட ஒருவரிடம் கடந்த காலத்தில் தேனீக்கடியினால் ஒவ்வாமை எதிர்வினைகளைக் கொண்டிருந்தால், அதுவே அவரது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாகிவிடும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒரு தேனீக்கடியினால் ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு எதிர்வினைகளையோ அல்லது ஒரு நபருக்கே வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு எதிர்வினைகளையோ ஏற்படுத்த முடியும். இதன் வினைகளானது பரவலாக வகைப்படுத்தப்பட்டுள்ளது அவை லேசான, மிதமான மற்றும் கடுமையானதாகும்.
- லேசான எதிர்வினைகள் ஒரு நாளைக்குளேயே குணமாகிவிடும்.
- தேனீக்கடித்த இடத்தில வலி மற்றும் எரிச்சலான உணர்ச்சி ஏற்படும்.
- சிவந்தத்தன்மை மற்றும் சற்று வீக்கம்- ஆக இருக்கும்.
- மிதமான எதிர்வினைகள் மறைய ஒரு வாரம் ஆகும்.
- வீக்கத்தின் அளவு படிப்படியாக அதிகரிக்கும்.
- சில நாட்களுக்கு தேனீக்கடித்த இடம் சிவந்திருப்பது நீடிக்கும்.
- கடுமையான எதிர்வினைகள் அனஃபிலாக்டிக் விளைவுகள் என்றும் அழைக்கப்படும் மற்றும் இது அபாயகரமானதாகவும், உடனடியான சிகிச்சை தேவைப்படும் மருத்துவ அவசரமாகவும் கருதப்படுகிறது.
- கடுமையான அரிப்பு மற்றும் வெளிர் தோலாக மாறிவிடும்.
- தலைசுற்றல், குமட்டல், பலவீனம் மற்றும் சோர்வு.
- சுவாச பிரச்சனைகள்.
- நினைவிழத்தல் ஆகியவை ஏற்படும்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
- ஒரு நபருக்கு தேனீக்கடியேற்பட்டால், அதன் கொடுக்கானது தோலினுள் விஷத்தை ஏற்றுகிறது. இது வலி மற்றும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.
- தேனீக்கூடுகளை சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் அல்லது தேனீக்களுடன் வேலை செய்யும் நபர்கள், தேனீக்கடியினால் அதிகம் பாதிக்கபடுவார்கள்.
- கடந்த காலங்கத்தில் தேனீக்களால் தாக்கப்பட்ட ஒருவருக்கு மீண்டும் கடுமையான எதிர்வினையால் மிகுந்த ஆபத்தேற்படலாம்.
இது எவ்வாறு கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
- உங்களை தேனீகடித்துவிட்டால், உங்களுக்கு தேனீ விஷத்தின் ஒவ்வாமை இருக்கிறதா என அறிந்துகொள்ள சோதனைகளை செய்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறீர்கள். சோதனைகள் பின்வருமாறு:
- ஐஜிஇ ஆன்டிபாடிகள் என்று அழைக்கப்படும் சில ஆன்டிபாடிகளின் அளவுகளை சோதிக்க ஒரு இரத்த பரிசோதனை செய்யவேண்டும்.
- தோல் பட்டை சோதனை, இதன் மூலம் ஒரு சிறிய அளவு விஷத்தை உட்செலுத்தி ஏதேனும் எதிர்வினைகள் உண்டாகிறதா என்று பார்த்தல்.
- தேனிக்கடியினால் ஏற்படும் லேசான எதிர்வினைக்கு உடலில் விஷம் இறங்குவதை தடுக்க கடிவாயில் இருக்கும் கொடுக்கை உடனடியாக நீக்கிவிடவேண்டும், அதன்பிறகு மேற்பூச்சு ஸ்டீராய்டு கிரீமை பயன்படுத்த வேண்டும். குளிர் அமுக்கிகளுடன் ஆன்டிஹிஸ்டமின்சும் பயன்படுத்தப்படலாம்.
- மிகவும் கடுமையான சந்தர்ப்பங்களில், எபினேபிரின் ஊசி, கூடுதல் ஆக்சிஜென் மற்றும் நரம்பு திரவ சிகிச்சை ஆகியவற்றை உள்ளடக்கிய உடனடி சிகிச்சை அனபிலாக்ஸிஸ்ற்கு தேவைப்படுகிறது. அனபிலாக்ஸிஸ் என்பது உடனடி சிகிச்சை அளிக்கபடவேண்டிய ஒரு மருத்துவ அவசரமாகும்.