மிகையாக உண்ணும் தீவழக்கம் என்றால் என்ன?
மிகையாக உண்ணும் தீவழக்கம் என்பது பெரிதும் அங்கீகரிக்கப்படாத, வெளியில் பெரிதும் தெரியப்படாத ஒரு தீவிர பிரச்சனையாகும். அடிக்கடி அளவுக்கதிகமாக சாப்பிடுவது, சாப்பிட்டபின் குற்ற உணர்ச்சி ஏற்படுவது இந்த தீவழகத்தின் தனித்தன்மையாகும்.
இந்தத் தீவழக்கம் இளம்பருவத்தினரிடம் பொதுவாக காணப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்தத் தீவழக்கத்தால் கஷ்டப்படுபவர்கள் வழக்கமாக சாப்பிடுவதை விட குறைந்த இடைவெளிகளில் அதிகமாக சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பிறகு வழக்கமாக மன அழுத்தம்,அவர்கள் மீதே கோபம் அல்லது குற்ற உணர்ச்சி போன்றவற்றை உணர்வார்கள்.
பிற அறிகுறிகள்:
- அசௌகர்யமாக உணர்வது வரை உண்பது.
- மிக வேகமாக உண்பது.
- கூச்சத்தாலும் தான் அதிகமாக சாப்பிடுவதை மற்றவர் தெரிந்து கொள்ளக் கூடாது என்பதாலும் எப்போதும் பிறரோடு சேர்ந்து சாப்பிடுவதை தவிர்ப்பது.
- மன அழுத்தம், பதட்டம், கோபம் அல்லது குற்ற உணர்ச்சியாக உணரும் சமயங்களில் மிகையாக உண்பது.
இந்தத் தீவழக்கம் ஆண்களைவிடபெண்களிடத்தில் அதிகமாகக் காணப்படுகிறது மற்றும் 20 முதல் 30 வயது உள்ளவர்களிடம் அதிகமாக காணப்படுகிறது.
இந்தத் தீவழக்கம் ஏற்படுவதற்கு முக்கிய காரணங்கள் என்ன?
மிகையாக உண்பது என்பது ஒருவருடைய பழக்கவழக்கம் மற்றும் மன நிலையை சார்ந்து இருப்பதால் இது ஏற்படுவதற்கான சரியான காரணத்தை சொல்ல இயலாது. ஆனால் சில முக்கிய காரணிகள் கீழ்வருமாறு சொல்லப்பட்டுள்ளன.
- மிகையாக உண்பது மற்றும் உடல் பருமன் ஒன்றோடொன்று தொடர்புடைய விஷயமாகும். ஏனென்றால் மிகையாக உண்ணும் பழக்கம் உள்ள 30 சதவீதம் பேர் பருமனாக உள்ளனர். உடல் பருமன் என்பது மிகையாக உண்ணுவதற்கு ஒரு காரணமாகவும் மற்றும் அதனால் ஏற்படும் ஒரு விளைவாகவும் இருப்பதால் இது ஒரு சுழற்சி ஆகும்.
- மரபணு காரணங்கள்: மூளையில் டோபமைன் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு பாராட்டு மற்றும் இன்ப உணர்வு அதிகமாக இருப்பதால் அவர்கள் மிகையாக உண்பதை நாடுகிறார்கள் என்பது ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கையாகும்.
மன அழுத்தம், மனச்சோர்வு, தனிமை மற்றும் தன்மதிப்பு சார்ந்த மனநிலை பிரச்சனைகளும் ஒருவரை அவர்கள் மனநிலை சரியாவதற்கு அவர்களை உணவை நாடி செல்ல செய்கிறது.
இதை எப்படி கண்டறிந்து சிகிச்சை அளிப்பது?
நோயாளி தனக்கு மிகையாக உண்ணும் பழக்கம் உள்ளதை ஒப்புக் கொள்வதே இதனை கண்டறிவதற்கான முதன்மையான வழியாகும்.
- ஒருவரின் நடவடிக்கை மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளை அவர்கள் கையாளும் விதத்தை வைத்தே நிபுணர்கள் இந்த நோயை கண்டறிய இயலும்.
- ஒருவரின் உணவுப் பழக்கம்,உணவு திட்டம் மற்றும் உடல் எடயை கொண்டு இந்த நோயை கண்டறியலாம்.
மனநல சிகிச்சை, ஆலோசனை, உடல் எடையை குறைப்பதற்கான பயிற்சி மற்றும் மாத்திரை ஆகியவையே மிகையாக உண்ணும் தீவழகத்திற்கான சிகிச்சையாகும்.
- தெரிவு நடத்தை சிகிச்சையின் மூலம் நிபுணர்கள் ஒருவர் மிகையாக உண்பதற்கு தூண்டப்படுவதற்கான காரணத்தை கண்டறிய முயல்வர். மன அழுத்தம், பதட்டம் அல்லது கோபம் போன்ற உணர்வுகளில் எது ஒருவரை மிகையாக உண்ணுவதற்கு தூண்டுகிறது என்பதை கண்டறிவார்கள்.
- மிகையாக உண்ணுவது ஒரு சூழ்நிலையை சமாளிப்பதற்கான வழிமுறையாக இருக்கும் பட்சத்தில், ஆலோசனை வகுப்புகள் அவர்கள் அதிலிருந்து வெளிவர உதவலாம்.
- உடல் எடையை குறைக்கும் பயிற்சியின் மூலம் ஒருவரின் தன்மதிப்பு மற்றும் தோற்றம் குறித்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.
- மேற்கண்ட சிகிச்சைகளோடு சேர்த்து ஒருவரின் மன ஆரோக்கியம் மேம்பட மனச்சோர்வு மருந்து மாத்திரை கொடுக்கலாம். சீரான உணவு பழக்கத்தோடு சேர்த்து உணவு திட்டத்தில் செய்யும் மாற்றம் நல்ல மாறுதலைக் கொண்டு வரும்.