பைபோலார் டிஸ்ஆர்டர் (இருமுனையப் பிறழ்வு) என்றால் என்ன?
பைபோலார் டிஸ்ஆர்டர் (இருமுனை பிறழ்வு என்பது) மனநலம் சார்ந்த பிரச்சினையாகும். இதனால் ஒருவருக்கு உச்சநிலை மகிழ்ச்சி மற்றும் மன சோர்வு என மாறிமாறி உண்டாகும். இதனை பித்து மனச்சோர்வு என்றும் அழைப்பர். இந்நோயால் ஒருவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
ஒருவரின் உள்ளம் மிகவும் உயர்ந்த உணர்ச்சிகளுடன் இருக்கும் நிலை பித்து என அழைக்கப்படுகிறது.
- இந்த நிலையில் அவர்கள் அதீத மகிழ்ச்சி மற்றும் நேர்மறை உணர்வை வெளிப்படுத்துவர். பிறருக்கு கொடை அளிப்பதோ,பணத்தை செலவழிப்பதோ,பொருட்கள் வாங்குவதோ இயல்புக்கு மாறாக இருக்கும்.
- முன்கோபம், திரிபுக்காட்சி அல்லது இல்லாததை இருப்பதுபோல உணர்தல் ஆகிய உணர்வுகள் இருக்கலாம்.
இதற்கு நேர் எதிர்மறையான நிலை மனசோர்வு இந்நிலையில் ஒருவர் சோகமாக,சோர்வாக மற்றும் எதிலும் ஆர்வமில்லாமல் இருப்பர்.
- இந்த மனச் சோர்வு மனைசார் மனச்சோர்வு போன்று இருக்கும். அதில் ஒருவர் யாருடனும் பேசவோ அல்லது அவருடைய அன்றாட வேலைகளை செய்யவோ விருப்பமில்லாமல் இருப்பர்.
- அவர்களுக்குத் தற்கொலை எண்ணம் தோன்றலாம்.
இத்தகைய இருவேறு அதீத மன நிலைகளுக்கிடையே பொதுவான மனநிலையிலும் காணப்படுவர். ஒவ்வொரு நிலையும் சில வாரங்களில் இருந்து சில மாதங்கள் வரை கூட நீடிக்கலாம். இதற்கு ஒரு குறிப்பிட்ட அமைப்பு கிடையாது.
பைபோலார் டிஸ்ஆர்டர் (இருமுனையப் பிறழ்வு) ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் என்ன?
பைபோலார் டிஸ்ஆர்டர் (இருமுனையப் பிறழ்வு) ஏற்படுவதற்கு நமக்குத் தெரிந்த காரணம் எதுவும் இல்லை.ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன.அதிலிருந்து இதுவரை இதற்கான காரணிகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.
- இந்த நிலை ஏற்படுவதற்கு மூளையின் வடிவம் ஒரு முக்கிய காரணியாக சொல்லப்படுகிறது.
- பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிக்கு இருமுனையப் பிறழ்வு இருந்தால் குழந்தைகளுக்கு இது வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
- அதீத மன அழுத்தம், மன வேதனை அல்லது உடல் நலக்குறைவு போன்ற காரணிகளும் இருமுனையப் பிறழ்வு ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம்.
இதை எப்படி கண்டறிந்து சிகிச்சை அளிப்பது?
இருமுனையப் பிறழ்விற்கு எந்த ஒரு உடல் சார்ந்த அறிகுறிகளும் இல்லாததாலும் மற்றும் மனநிலை ஒவ்வொரு மனிதருக்கும் மாறுபடுவதாலும் இதனை கண்டறிவது கடினமாகும்.
- மனநோய் மருத்துவர் ஒருவரின் மனநிலையை பல்வேறு செயல்கள் மூலம் முழுமையான சோதனைக்கு உட்படுத்துவர். நோயாளி பராமரித்து வைத்திருக்கும் மனநல குறிப்புகள் இதை கண்டறிதலுக்கு உதவி புரியும்.
- உளவியல் அறிகுறிகளை வைத்து இருமுனையப் பிறழ்வை உறுதி செய்ய சில மனநல ஆய்வுகள் உள்ளன.
- மற்ற பிரச்சனைகளை கண்டறிய உடல் பரிசோதனை மற்றும் ரத்த பரிசோதனையையும் மருத்துவர் மேற்கொள்வர்.
மருந்து, சிகிச்சை, வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் மனநிலையை சமப்படுவது போன்றவை இந்த நோய்க்கான சிகிச்சையில் உள்ளடங்கும்.
- மனச்சோர்வு மருந்து (antidepressant) மற்றும் ஆன்டிசைகோடிக் மருந்துகள் இதற்குத் தரப்படும் மருந்துகளில் உள்ளடங்கும்.
- சிகிச்சை வழிமுறைகளில் ஒருவரின் அன்றாட தூக்கம் மற்றும் உணவு பழக்கங்களை கண்காணிப்பது போன்ற ஆளிடை சிகிச்சையும் உள்ளடங்கும்.
- தெரிவு மருத்துவம் மூலம் மனநல மருத்துவர் நோயாளியிடம் அவர்களின் எண்ணங்கள் மூலம் எப்படி அவர்கள் செயலை கட்டுப்படுத்துவது என்பதை பற்றி பேசுவார்.
பிற சுய பராமரிப்பு வழிமுறைகளில் அன்பர்களின் உதவியை நாடுவது, நிலையான அன்றாட நடைமுறைகளை பின்பற்றுவது, மனநிலை மாற்றங்களை கண்டறிவது மற்றும் நிபுணர்களின் உதவியோடு நம் கட்டுப்பாட்டை பெற முயல்வது ஆகியவை உள்ளடங்கும்.