முளைப்பூஞ்சைநோய் (பிளாஸ்டோமைக்கோஸிஸ்) என்றால் என்ன?
பிளாஸ்டோமைஸிஸ் டெர்மடிடிஸ் என்றழைக்கப்படும் பூஞ்சையால் ஏற்படும் ஒரு அரிய நோய் முளைப்பூஞ்சைநோய் ஆகும். ஈரமான மண்ணில் உள்ள பூஞ்சை வித்துகளை சுவாசிக்கும்போது இந்த பூஞ்சை உடலில் நுழைகிறது. இது உடலில் உள்ள அனைத்து உறுப்புகளையும், குறிப்பாக நுரையீரல் மற்றும் தோலை பாதிக்கிறது, அதனை தொடர்ந்து சிறுநீரகம், எலும்பு மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. இந்த நோயின் அறிகுறிகள் ஃபுளு காய்ச்சலை போன்றது, நோய் அடுத்த நிலை அடையும்போது தோல்களும் பாதிக்கின்றன (கொப்புளங்கள் மற்றும் வெடிப்புகள்).
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பூஞ்சையின் வித்துகளை நுகர்ந்த 3 வாரங்கள் மற்றும் 3 மாதங்களுக்கு இடையில் முளைப்பூஞ்சைநோயின் ஆரம்ப அறிகுறிகள் தோன்றும். இதன் அறிகுறிகள் ஃபுளு காய்ச்சலை ஒத்திருக்கும் பின்னர் சில நாட்களில் சரியாகிவிடும். பாதிக்கப்பட்ட நபர்களில் அதிகப்படியானவர்களுக்கு அறிகுறிகள் தெரிவதில்லை. இருப்பினும், தொற்று உடலின் பல்வேறு பாகங்களுக்கு பரவும்பொழுது, குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு அறிகுறிகள் தோன்றும்.
- காய்ச்சல்.
- இரவில் வியர்வை மற்றும் உடல் உஷ்ண வெளியேற்றம்.
- தொற்று நுரையீரலுக்கு பரவும்போது ஏற்படும் இருமல் மற்றும் இரத்தம் கலந்த சளி.
- நெஞ்சு வலி.
- மூட்டு வலி மற்றும் தசை வலி.
- அதிகப்படியான சோர்வு மற்றும் பொதுவான அசௌகரியம்.
- காரணம் இல்லாமல் எடை இழப்பு.
- நுரையீரல் அழற்சி மற்றும் மூச்சுத் திணறல் சிண்ட்ரோம் ஆகிய அறிகுறிகள் கடுமையான நுரையீரல் முளைப்பூஞ்சைநோயில் பொதுவானவை.
- சருமத்தில் காணப்படும் அறிகுறிகள் வெளிப்படையான பகுதிகளில் மரு அல்லது சீழ்ப்புண் போன்ற காயங்கள், அவை சாம்பல் அல்லது ஊதா நிறத்தில் இருக்கலாம். மூக்கு அல்லது வாய் உள்ளே தோன்றும் புண்கள் பொதுவாக வலியற்றதாக இருக்கும். கொப்புளங்களில் சுலபமாக இரத்தம் கசியலாம்.
- எலும்புகளுக்கு தொற்று பரவும்போது, எலும்பு திசுக்களில் சிதைவு மற்றும் எலும்பில் சீழ் திரளுதல் போன்ற அறிகுறிகள் இருக்கும்.
- விந்தகம், புரோஸ்டேட் மற்றும் விந்தணு முதிர்ச்சிப்பை ஆகியவை மூளைப்புஞ்சைநோயால் பாதிக்கப்படலாம்.
- நரம்பு மண்டத்தில் முளைப்புஞ்சைநோயின் தாக்கம் ஏற்படும்போது மூளைக்காய்ச்சல் ஏற்படலாம்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பிளாஸ்டோமைஸிஸ் என்றழைக்கப்படும் பூஞ்சை மூளைப்புஞ்சைநோயை ஏற்படுத்துகிறது. இது பொதுவாக ஈரமான மண், அழுகிய மரத்துண்டு அல்லது உலர்ந்த இலைகளில் காணப்படுகிறது. அதை சுவாசிக்கும்போது, பூஞ்சை உடலில் நுழைந்து பல்வேறு பகுதிகளுக்கு பரவுகிறது. பொதுவாக அமெரிக்கா, கனடா மற்றும் ஆபிரிக்காவில் மூளைப்புஞ்சைநோய் காணப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
வரலாறு, அறிகுறிகள், உடல் பரிசோதனை மற்றும் பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் மருத்துவர்கள் மூளைப்புஞ்சைநோயை கண்டறிந்துள்ளனர்.
ஆய்வக சோதனைகள்:
- தொண்டையிலிருந்து எடுக்கப்பட்ட தோல் அல்லது பஞ்சு மாதிரியை கொண்டு ஒரு செயற்கை ஊடகத்தில் பூஞ்சையை வளர்ப்பது.
- சளியில் உள்ள புஞ்சையை கண்டறிய சளியை ஒரு விசேஷ வேதிப்பொருளுடன் (10% பொட்டாசியம் ஹைட்ராக்சைடு) கலந்து சோதனை செய்யலாம்.
- பாதிக்கப்பட்ட திசுவில் உள்ள புஞ்சையை நுண்ணோக்கி மூலம் காண ஹிஸ்டோலஜி பரிசோதனை செய்யலாம்.
- மார்பக எக்ஸ்-ரே மூலம் பூஞ்சை தொற்றினால் நுரையீரலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை கண்டறியலாம்.
- பெருமூளைத் தண்டுவட நீர் பகுப்பாய்வு மூலம் தண்டுவடம் மற்றும் மூளையில் உள்ள பூஞ்சையை கண்டறியலாம்.
முளைப்பூஞ்சநோய் பொதுவாக பூசண எதிர்ப்பி மூலம் சிகிச்சையளிக்கப்படுகிறது. இட்ராகோனசோல் மற்றும் அம்போட்டேரிசின் பி ஆகியவை நோய்த்தொற்றின் தீவிரத்தன்மையைப் பொறுத்து சிகிச்சையளிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பூசணஎதிர்ப்பி மருந்துகள் ஆகும். தொற்றின் தீவிரத்தன்மை மற்றும் நபரின் நோயெதிர்ப்புத்திறனை பொறுத்து சிகிச்சை 6 மதத்திலிருந்து ஒரு வருடம் வரை நீடிக்கலாம்.
(மேலும் படிக்க: பூஞ்சை தொற்றுக்கான சிகிச்சைகள்)