சுருக்கம்
மலத்தில் இருக்கும் ரத்தமானது மலக்குடலின் இரத்தப்போக்காக கருதப்படுகிறது. இது வழக்கமாக கழிவறைகளில் மலத்தை கழிக்கும்போது அல்லது கழிப்பறை தாள்களை பயன்படுத்தும்போது கவனிக்க முடிக்கிறது. மலக்குடலிருந்து வரும் இரத்தப்போக்கானது (மலக்குடல் இரத்தப்போக்கு) செரிமான பாதையின் மேல் அல்லது கீழ் பகுதியில் ஏற்படும் இரத்தப்போக்கு என குறிப்பிடப்படுகிறது. இரத்தப்போக்கானது வாயிலிருந்து ஆசனவாய் வரை எங்கு இருந்து வேண்டுமானலும் தொடங்கலாம். இது பொதுவாக ஆசனவாய் கிழித்தல் மற்றும் மூலம் போன்ற காரணத்தினால் ஏற்படலாம். இதன் அறிகுறிகளாக அடிவயிற்று வலி போன்ற வலியுடன் இருக்கலாம். சில நேரங்களில் மலக்குடல் இரத்தப்போக்கானது ஏதேனும் அடிப்படை நோயைக் குறிக்கலாம், எனவே உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும். இதற்கான மருத்துவ ஆய்வானது முழு இரத்தம் எண்ணிக்கை மற்றும் பெருங்குடல் அகநோக்கல் போன்றவை மலக்குடல் இரத்தப்போக்கு உள்ள நபர்களுக்கு நிகழ்த்தப்படுகிறது. இதற்கான சிகிச்சையானது அடிப்படை காரணத்தை சார்ந்துள்ளது மற்றும் கண்டிப்பாக மருத்துவரின் வழிகாட்டுதலின் கீழ் சிகிச்சைகள் எடுக்கப்பட வேண்டும்.