குறை இதயத் துடிப்பு (மெதுவான இதயத் துடிப்பு) என்றால் என்ன?
குறை இதயத் துடிப்பு என்கிற நிலையில் ஒரு மனிதனின் இதய துடிப்பு நிமிடத்துக்கு 60 முறைக்கு கீழ் துடிக்கும். ஒரு ஆரோக்கியமான மனிதனின் இதயத்துடிப்பு நிமிடத்திற்கு 60 - 100 முறை துடிக்கும். பொதுவாக இது வயதானவர்களிடமும் விளையாட்டு வீரர்களிடமும் காணப்படும். சில இளம் வயது மற்றும் ஆரோக்கியமான மக்களிடமும் கூட குறை இதயத் துடிப்பு காணப்படும், அவர்கள் வேறு சில அறிகுறிகளை அனுபவிக்காத வரையிலும் அது சாதாரணமாகவே கருதப்படுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பொதுவாக குறை இதயத் துடிப்புடான் காணப்படும் அடையாளங்களும் அறிகுறிகளும்:
- பலவீனம்.
- சோர்வு.
- மயக்கம்.
- குமட்டல்.
- வியர்க்கவைத்தல்.
- குழப்பம்.
- மூச்சு விடுவதில் சிரமம்.
- குறைந்த இரத்த அழுத்தம்.
- லேசான அல்லது கடுமையான நெஞ்சு வலி.
சில சமயம் எந்த ஒரு அறிகுறியையும் அனுபவிக்கமாட்டார்கள்.
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
குறை இதயத் துடிப்புக்கு முக்கியமாக இரண்டு காரணங்கள் உள்ளன. அவை:
- இயற்கையான காரணங்கள்:
- வயது அதிகரித்தல்.
- மாரடைப்பு.
- தன் நோயெதிர்ப்பு நோய்கள் (நோய் எதிர்ப்பு அமைப்பு நல்ல திசுக்களை தாக்குதல்) லூபஸ், முடக்கு வாதம் மற்றும் ஸ்கிளீரோடெர்மா போன்ற நோய்கள்.
- தசை அழிவு.
- இதய நோய்த்தொற்று.
- இதய அறுவை சிகிச்சைகள்.
- ஸ்லீப் அப்னியா (துக்கத்தில் சுவாசம்விட சிரமம்).
- மரபு.
- சினோடரேரியல் கணு (வழக்கமான இதய தாளத்துக்கு பொறுப்பாண நரம்பு நார்) பிறழ்ச்சி.
- வெளிப்பட்ட காரணங்கள்:
- இருமல்.
- வாந்தி.
- சிறுநீர் கழித்தல்.
- மலம் கழித்தல்.
- பீட்டா பிளாக்கர்கள் மட்டும் கால்சியம் சேனல் பிளாக்கர்கள் (இரண்டும் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த பயன்படுத்துபவை) மற்றும் எதிர்ப்பு ஆர்ரிசிய மருந்துகள் (இது அதிக, ஒழுங்கற்ற விரைவான இதய துடிப்புக்கு பயன்படுத்தப்படுகிறது).
- ஹைப்போதைராய்டிசம் (உடலில் தைராய்டு சுரப்புக் குறைதல்).
- உடலில் தாழ்வெப்பநிலை (ஹைப்போதெர்மியா).
- மூளையில் ஏற்பட்ட காயம், முதுகெலும்ப மற்றும் நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட காயம்.
- உடலில் உள்ள பொட்டாசியம் அளவில் ஏற்றத்தாழ்வுகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது?
உங்கள் மருத்துவர் உங்களின் முழு மருத்துவ வரலாறு மற்றும் நீங்கள் தினசரி பின்பற்றும் மருந்துகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்வர் மற்றும் சந்தேகம் கொண்டவர்கள் மீது உடல் பரிசோதனை மேற்கொள்வர். இதை உறுதிப்படுத்த உங்கள் மருத்துவர் ஈசிஜி சோதனை மேற்கொள்வார், அது இதயத்துடிப்பின் ஏற்படும் கோளாறுகளைக் கண்டறிய உதவும். மற்ற சோதனைகளும் மேற்கொள்ளப்படும் எ.கா. இரத்த சோதனை (ஹைப்போதைராய்டிசம் அல்லது எலக்ட்ரோலைட் சமநிலையை கண்டறிய), தூக்கத்தில் மூச்சுத்திணறல் சோதனை, எலக்ட்ரோபிசியாலஜி சோதனை (ஒழுங்கற்ற இதயத் துடிப்பின் சரியான காரணத்தை அறிய) மற்றும் அழுத்த சோதனை (இதயம் எப்படி அழுத்தத்தில் செயல்படுகிறது என்பதை அறிய) மேற்கொள்ளப்படுகிறது.
வேறு அறிகுறிகள் இல்லாவிட்டாலும், சாதாரண மருத்துவ சோதனை மூலம் குறை இதயத் துடிப்பைக் கண்டுபிடிக்க முடியும்.
சாதாரணமாக அறிகுறிகள் இல்லாதவர்களுக்கு இந்நோய்க்கான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. குறை இதயத்துடிப்பு அறிகுறிகள் காரணத்திற்கு ஏற்றவாறு மாறும். குறை இதயத் துடிப்பு ஏதாவது மருந்தினால் உண்டாகிறதென்றால் அந்த மருந்து குறைவான அளவு எடுக்க பரிந்துரைக்கப்படுகிறது அல்லது முற்றிலும் நிறுத்தப்படுகிறது சைனஸ் முனை பிறழ்ச்சி என்றால் இதயமுடுக்கி (பேஸ்மேக்கர்) இதயத்தின் துடிப்பை சீர் செய்ய பயன்படுத்தப்படுகிறது.