மூளை தொற்று - Brain Infection in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 28, 2018

July 31, 2020

மூளை தொற்று
மூளை தொற்று

மூளை தொற்று என்றால் என்ன?

மூளை தொற்று என்பது மூளையின் பல்வேறு பாகங்களை பாதிக்கும் தொற்றுகளை விவரிப்பதற்கு பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான சொல். மூளைக்காய்ச்சல்/மூளையுறை அழற்சி, மூளையில் ஏற்படும் சீழ்படிந்த கட்டி, மூளையழற்சி போன்ற நிலைமைகளுக்கு மூளை தொற்று வழிவகுக்கக்கூடும். மூளையுறைகளில் ஏற்படும் அழற்சி (வீக்கம்) மூளைக்காய்ச்சல்/மூளையுறை அழற்சி ஆகும். மூளை திசுக்களில் ஏற்படும் வீக்கம் மூளையழற்சி ஆகும். தொற்றின் காரணமாக, திசு முறிவு ஏற்படுகையில், மூளையில் சீழ் நிறைந்த கட்டி ஏற்படுதலே மூளையில் ஏற்படும் சீழ்படிந்த கட்டியாகும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

மூளை தொற்றுகளில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மூளை தொற்று பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை அல்லது ஒட்டுண்ணிகள் மூலமாக ஏற்படுகிறது. நுண்ணுயிரிகள் மூளையை பின்வரும் வழிகளில் அடையலாம்:

  • இரத்தத்தின் மூலமாக தொற்று ஏற்படுதல் - நுரையீரல், இதயம் மற்றும் பற்கள் சார்ந்த தொற்று மூளையையும் அதன் கட்டமைப்புகளையும் இரத்தத்தின் வழியாக அடையலாம். குறைந்த நோயெதிர்ப்பு அமைப்பு அல்லது கோளாறு உடையவர்கள் அல்லது நோய்எதிர் திறனொடுக்கி மருந்துகள் பயன்படுத்துபவர்களிடத்தில் மூளை தொற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகம் உள்ளது.
  • நேரடி தொடர்பு மூலமாக தொற்று ஏற்படுதல் - நுண்ணுயிரிகள் அறுவை சிகிச்சையின் போது அல்லது தலையில் உள்ள திறந்த புண்/காயம் வழியாக நுழையலாம்.
  • நடுச்செவியில் ஏற்படும் தொற்று, மாஸ்டோயிடைடிஸ் (காதுக்கு அருகில் இருக்கும் நெற்றிப் பொட்டெலும்பின் வீக்கம்), புரையழற்சி போன்ற மூளையின் அருகாமையில் ஏற்படும் தொற்றுகள் மூலமாக மூளை தொற்று ஏற்படுகின்றது.

மூளை தொற்றுகளை ஏற்படுத்தும் பொதுவான உயிரினங்கள் பின்வருமாறு:

  • டி. கோன்டி, தேனியா சோலியம் (டி. சோலியம்) மற்றும் பூசனம் (ஆஸ்பெர்கில்லஸ்) போன்ற பூஞ்சைகள்.
  • நெய்ஸெரியா மெனின்கிடைடிஸ், ஸ்ட்ரெப்‌டொகாக்கஸ் நிமோணியே, ஹேமொஃபிலிஸ் இன்ஃப்ளூயன்ஸா மற்றும் பிற பாக்டீரியாக்கள்.
  • சிக்கன்குனியா வைரஸ், ஹெர்பெஸ் சோஸ்டர்/அக்கிப்புடை மற்றும் சிம்ப்ளக்ஸ், சைட்டோமெகல்லோ வைரஸ் மற்றும் மேற்கு நைல் வைரஸ் போன்ற வைரஸ்கள்.

இதன் பரிசோதனை முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

உங்களுக்கு ஏற்படும் நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில், உங்கள் மருத்துவர் உங்களை முழுமையாக உடல் ரீதியாக பரிசோதனை செய்வார். இதனைத் தொடர்ந்து, மூளையிலோ அல்லது மூளையுறைகளிலோ வீக்கம் இருப்பதை கண்டறிவதற்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் அல்லது சி.டி ஸ்கேன் போன்ற நோய் கண்டறிதலுக்கு தேவையான இயல்நிலை வரைவு சோதனைகளை மேற்கோள்வார். நோய் தொற்றை கண்டறிய, செரிப்ரோஸ்பைனல்/மூளை தண்டுவட திரவ (சி.எஸ்.எஃப்) பரிசோதனை (முதுகுத் தண்டுவட துளையிடுதல்) மேற்கொள்ளப்படுகிறது. முதுகின் கீழ் பகுதியிலிருந்து மூளை தண்டுவட திரவம் எடுக்கப்பட்டு (முதுகெலும்பின் அடிமுதுகுப் பகுதியில்) நுண்ணுயிரிகளின் இருப்பு ஆய்வு செய்யப்படுகிறது. மேலும், நோய்க்கு காரணமான கிருமியைக் கண்டறிய வழக்கமான இரத்த பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

எந்த நுண்ணுயிரிகள் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதன் அடிப்படையில், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், வைரஸ் எதிர்ப்பு அல்லது பூஞ்சை எதிர்ப்பு மருந்துகள் மூளை தொற்று நோய்த்தடுப்பு சிகிச்சைக்காக வழங்கப்படுகின்றன. மருந்து உட்கொள்ள வேண்டிய காலம் நோய்க்காரணியைப் பொறுத்து மாறுபடும். மூளை தொற்று உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய நிலையில், சில சமயங்களில் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.



மேற்கோள்கள்

  1. MSDmannual consumer version [internet].Overview of Brain Infections. Merck Sharp & Dohme Corp. Merck & Co, Inc, Kenilworth, NJ, USA
  2. Science Direct (Elsevier) [Internet]; Brain infections
  3. MSDmannual professional version [internet].Introduction to Brain Infections. Merck Sharp & Dohme Corp. Merck & Co., Inc., Kenilworth, NJ, USA
  4. National Health Service [internet]. UK; Brain abscess
  5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Bacterial Meningitis