சுருக்கம்
மூளை கட்டி என்பது மூளை செல்களில் ஏற்படும் அசாதாரணமான வளர்ச்சியாகும். கட்டிகள் பாதிப்பற்றதாக (தீங்கற்றது) அல்லது புற்றுநோய் உருவாக்கக்கூடியதாக (தீங்கானது) இருக்கலாம். மூளைக்குள் உருவாகும் மூளை கட்டிகள், முதன்மை மூளை கட்டிகள் எனப்படுகிறது. இன்னொரு புறம், இரண்டாம் நிலை மூளை கட்டிகள் அல்லது புற்று மூளை கட்டிகள் என்பன, புற்று நோய் காரணமாக உடலின் வேறு பகுதியில் உருவாகி மூளையை வந்தடையும் கட்டிகள் ஆகும். மூளை கட்டியின் குணங்களும் அறிகுறிகளும், கட்டியின் அளவு, கட்டி வளரும் அளவின் வேகம் மற்றும் கட்டி இருக்கும் இடம் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து அமைகிறது. மூளை கட்டிகளின் சில ஆரம்ப நிலை மற்றும் பொதுவான அறிகுறிகளில் மாறுபட்ட வகை தலைவலிகள், அடிக்கடி மற்றும் கடுமையான தலைவலி, பேசுவதில் சிரமம், தடுமாற்றம் ஆகியவை அடங்கும். மூளை கட்டிகளுக்கான சிகிச்சை, மூளை கட்டியின் வகை, அதே போன்று கட்டியின் அளவு மற்றும் இருக்குமிடத்தைப் பொறுத்து அமைகிறது.