சுருக்கம்
உலகளவில், மார்பக புற்றுநோய், பெண்களுக்கு பொதுவான புற்றுநோயாகும். மார்பில் ஒரு கட்டி உருவாகுவது,மார்பக புற்றுநோயின் பொதுவான அறிகுறி ஆகும்.இருப்பினும், மார்பக புற்றுநோயுடன் உள்ள அனைத்து பெண்களும் மார்பில் ஒரு கட்டி உண்டாகுவதில்லை. மார்பக புற்றுநோயின் மற்ற அறிகுறிகளும் மார்பின் மீது தோலை உரிதல், காம்புகளிலிருந்து திரவம் கசியுதல், கழுத்து மற்றும் கக்கத்தில் கட்டிகள் ஆகியவை ஆகும். மருத்துவ மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களினால், பல புதுமையான நோய்கண்டறியும் கருவிகள் உள்ளன, இதனால் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டறிய முடியும். மார்பக புற்றுநோயானது நான்கு வெவ்வேறு நிலைகளால் முன்னேறும், எனவே, நோய் ஆரம்ப நிலையிலே நோயை கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்தால், உயிர் பிழைக்கும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த நோயை கண்டறியும் கருவிகளில் மாம்மோகிராஃபி, காந்த அதிர்வு உருவரைவு (எம்.ஆர்.ஐ. ஸ்கேன்) மற்றும் மார்பகங்களில் உள்ள திரவங்கள் மற்றும் திசுக்களின் திரையிடல் ஆகியவை அடங்கும். உயிரித்தொழில்நுட்பத்தில் உள்ள அசாத்திய முன்னேற்றங்கள் மார்பக புற்றுநோய்க்கான தவறான மரபணுக்களை எளிதில் கண்டறிய உதவுகின்றன. புரதம் குறிப்பான் ஆய்வுகள் மார்பக புற்றுநோய்க்கான மிக சரியான சிகிச்சை முறையைத் தீர்மானிக்க எளிதாகுகிறது.
நோய்க்கான வழக்கமான சிகிச்சையாக கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை மற்றும் புதுமையான நானோ தொழில்நுட்பம் ஆகியவை ஆகும். மார்பக புற்றுநோயை தடுப்பதற்கு முறைப்பட்ட உடற்பயிற்சி, உடல் எடையைக் கட்டுப்படுத்துதல் மற்றும் குழந்தைக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் அளித்தல் ஆகியவை செய்யவேண்டும் எனினும், குடும்ப வரலாற்றை பொறுத்து,வரும் தலைமுறைகளில் நோய் ஆபத்து அதிகரிக்கிறது. எனவே, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மார்பக புற்றுநோயைத் தடுக்கும் வழக்கமான உடல் நல பரிசோதனைகள் அவசியம். புற்றுநோய் திசு உடலின் இயல்பான திசுக்களில் தாக்கும்போது சிக்கல்கள் எழுகின்றன உதாரனத்திற்க்கு; அருகில் இருக்கும் திசுக்கள் மீது அழுத்தத்தினால் ஏற்படும் வலி, அருகில் உள்ள இரத்த நாளங்கள் அல்லது நரம்புகள் தடுப்பு, போன்றவை. இருப்பினும், மார்பக புற்றுநோய் சிகிச்சையின் விளைவாக பல பாதகமாக எழும் சிக்கல்கள் எழும், எ.கா. முடி இழப்பு, வாந்தியெடுத்தல், வெள்ளை இரத்தக் அணுக்கள் எண்ணிக்கை குறைதல் மற்றும் பல. ஆரம்பகால நோயறிதல் மற்றும் உடனடி சிகிச்சை இந்த கொடூரமான நோய்களில் உயிர்வாழ்வு விகிதங்களை அதிகரிக்கும். கதிர்வீச்சு, கீமோதெரபி மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் ஆகியவை புற்றுநோயின் பரவுதலின் தீவிரத்தன்மையையும், அளவையும் குறைக்கும், இவை மூன்றும் பொதுவான சிகிச்சை முறைகள் ஆகும்.