தோலடி நார்த்திசுவீக்கம் என்றால் என்ன?
தோலடி நார்த்திசுவீக்கம் என்பது முதல்நிலையில் கால்களில் ஏற்படக்கூடிய ஒரு தோல் நோயாகும். அது சில சமயங்களில் முகம் அல்லது கைகளையும் தாக்கக்கூடும். நுண்ணுயிர் தொற்றினால் ஏற்படும் இதனால் தோல் சிவந்து காணப்படுவதுடன் வீக்கமும் இருக்கும் மற்றும் தொடும்போது மிகுந்த வலியை கொடுக்கும். புரையோடுதல் ஒரு பரவக்கூடிய நோய் அல்ல மற்றும் இதை சுலபமாக கையாள முடியும்.எனினும் இந்த தொற்று நிணநீர்க்கணுக்கள் வழியாக ரத்த ஓட்டத்தில் பரவும் என்பதால் இதற்கு சிகிச்சை அளிக்காமல் விட்டுவிடுவது இதை அபாயகரமானதாக்கி விடும்.
இதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் என்னென்ன?
இதன் அறிகுறிகள் பொதுவாக உடலின் ஒரு பக்கத்தில் மட்டும் காணப்படுகிறது மற்றும் பின்வருபவை அவற்றில் அடங்கும்:
- தோல் சிவந்து காணப்படுவது.
- வலி மற்றும் மிக மென்மையாக இருப்பது.
- வீக்கம் மற்றும் தோலில் கூம்புக்குழிவு.
- கொப்புளங்கள்.
- பாதிக்கப்பட்ட இடம் சூடாக இருப்பது மற்றும் லேசான காய்ச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
இந்த நிலை வழக்கமாக ஸ்டாஃபிலோகாக்கஸ் அல்லது ஸ்ட்ரெப்டோகாக்கஸ் நுண்ணுயிரியால் உண்டாகிறது. இவை தோல் தொற்று, அறுவை சிகிச்சை காயங்கள், குடல்புண், காயங்கள் மற்றும் விலங்குகள் கடித்தல் போன்றவற்றால் ஏற்படும் ஒரு வெடிப்பு அல்லது பிளவு வழியாக தோலிற்குள் நுழைகிறது. இவை மிகவும் பொதுவாக கால்களில் காணப்படுகிறது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பரிசோதனையின் போது இந்த நிலையை கண்டறிவது மிகவும் சுலபமானது மற்றும் நேரடியானதாகும். முழுமையான ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் செவ்வணுப் படிமான வீதம் போன்ற ரத்த சோதனைகள் நோயைக் கண்டறிவதற்கும் நோய்க்காரணியை உறுதிப்படுத்துவதற்கும் தேவைப்படக்கூடும்.
வழக்கமாக வாய்வழியாக நுண்ணுயிர் எதிரிகளை எடுத்துக்கொள்வதன் மூலம் இதன் சிகிச்சை நிர்வகிக்கப்படுகிறது. ஆதரவான கவனிப்பை அளிப்பதற்காக குறிப்பிட்டப்பகுதியில் பயன்படுத்தும் குழைமங்கள் அளிக்கப்படலாம். சில நாட்களுக்கு பிறகு முன்னேற்றத்திற்கான சில அடையாளங்கள் கவனிக்கப்படும் போது மருத்துவர் 10-15 நாட்களுக்கான மருந்துகளை பரிந்துரை செய்யலாம். நுண்ணுயிரி உடலிலிருந்து வெளியேறிவிட்டது என்பதை உறுதிப்படுத்துவதற்கும் இந்த நிலையில் பின்னடைவு ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கும் மருந்துகளை பரிந்துரைக்கபட்ட முழுமையான காலத்திற்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
சில நேரங்களில் காய்ச்சல் அதிகமாக இருந்து, இதன் அறிகுறிகள் உடலின் பெரும்பாகத்திற்கு பரவியிருந்தாலோ அல்லது நோயாளிக்கு வாய்வழி மருந்தினால் போதுமான பயன் கிடைக்காவிட்டாலோ மருத்துவர் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை நரம்பு வழியாக செலுத்த முடிவெடுக்கக்கூடும்.