கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா - Cervical Dystonia in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

November 29, 2018

March 06, 2020

கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா
கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா

கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா என்றால் என்ன?

கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா (சி.டி) என்பது சீரற்ற கழுத்துச் சுளுக்கு என்றும் அழைக்கப்படும் ஒரு அரிய வகை நரம்பியல் சார்ந்த கோளாறு ஆகும். இது ஃபோக்கல் டிஸ்டோனியாவின் ஒரு வகை ஆகும். இது கழுத்து பகுதியில் உள்ள தசைகளின் அசாதாரண மற்றும் தன்னிச்சையற்ற சுருக்கத்தால் குறிக்கப்படுகிறது. இது உங்கள் தலையை ஒரு பக்கமாகவோ, பின்புறமாகவோ, அல்லது முன்னோக்கி சாய்க்கவோ கூடும், மேலும் உங்கள் தோள்பட்டை உருமாறும்படிக் குறுகிப் போகலாம். சி.டி அனைத்து வயதைச் சார்ந்த ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படலாம் என்றாலும், இது பெண்களிடத்திலும், 40 முதல் 50 வயது வரையிலான முதியவர்களிடத்திலும் பொதுவாகக் காணப்படுகிறது. இது முதன்மை அல்லது தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் இரண்டாம்நிலை என இரண்டு வகைப்படும்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கழுத்து பகுதியில் உள்ள தசைகளின் அசாதாரண மற்றும் தன்னிச்சையற்ற சுருக்கமே இதன் பொதுவான அறிகுறியாகும். தசைப்பிடிப்பு நீடித்திருக்கக்கூடும், மாறிக்கொண்டே இருக்கக்கூடும், அல்லது இரண்டுமே சேர்ந்து இருக்கக்கூடும். இது அசௌகரியம், விறைப்புத்தன்மை மற்றும் வலியை ஏற்படுத்தும். இந்த சுருக்கம் நீட்டிக்கப்பட்டு தோள்பட்டை தசைகளுக்கு பரவியிருக்கலாம்.

ஆனால் இது தோள்களுக்கு அப்பால் உள்ள தசையை பாதிக்கும் சாத்தியம் இல்லை.

தொடர்ச்சியான தசைச்சுருக்கத்தினால் கழுத்து மற்றும் தலை பகுதி ஒரு மோசமான தோற்றப்பாங்கை அளிக்கும், அதேசமயத்தில் காலவட்ட தசைச்சுருக்கத்தினால் ஏற்ற இறக்கம் நிறைந்த தலை அசைவுகள் ஏற்படுகிறது.  முகவாய் கட்டை தோள்பட்டையை நோக்கி திரும்புவதால், தலை ஒரு பக்கமாக திரும்புகிற மோசமான தோற்றப்பாங்கு பொதுவாக காணப்படுகிறது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

பெரும்பாலும், தனிமைப்படுத்தப்பட்ட கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியாவிற்கான அடிப்படை காரணம் தெரியவில்லை, மற்றும் நரம்பியல் காரணிகள் மட்டுமே அதன் நிகழ்வுக்கு காரணமாகத் தோன்றுகிறது. முதன்மை கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியாவிற்கான காரணங்கள் பின்வருமாறு:

  • குடும்பத்தில் யாருக்கேனும் கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா இருக்கும் வரலாறு.
  • பலதரப்பட்ட மரபணு திடீர்மாற்றம்/மரபணு காரணங்கள்.
  • சுற்றுச்சூழல் காரணிகள்.

இரண்டாம் நிலை கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியாவின் காரணங்கள் பின்வருமாறு:

  • உளப்பிணி எதிர்ப்பு மருந்துகளின் பயன்பாடு.
  • டொபமைன் வாங்கிகளை தடுக்கக்கூடிய குமட்டலுக்கு சிகிச்சை அளிக்க பயன்படும் மருந்துகள்.
  • நச்சூட்டுப் பொருள்கள்.
  • உடம்பில் உள்ள பிற நரம்பணுச்சிதைவு நோய்கள்.

இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

இயல்நிலை வரைவு நுட்பம் போன்ற பெரும்பாலான ஆய்வக சோதனைகள் பொதுவாக இதற்கு மேற்கொள்ளப்டுகிறது, ஆதலால் நோய் அறிகுறிகளை கண்டறிய ஒரு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. பின்வரும் நடவடிக்கைகள் கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியாவை கண்டறிய உதவும்:

  • மருத்துவ பரிசோதனை மற்றும் கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா நோயைப் பற்றிய போதுமான அறிவு.
  • தனிநபரின் விரிவான மருத்துவம் சார்ந்த வரலாறு.
  • முதுகுத் தண்டு சுருக்கம் ஏற்பட்டு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், காந்த அதிர்வு விம்பங்கள் (எம்.ஆர்.ஐ) பரிசோதனை மேற்கோள்வது உதவக்கூடும்.
  • நரம்பு எரிச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், தசை மின்னலை வரைவு பரிசோதனை மேற்கோள்வது உதவக்கூடும்.

இதற்கான சிகிச்சையின் செயல்திறனானது நபருக்கு நபர் மாறுபடலாம், மற்றும் பெரும்பாலான முறைகள் இதன் அறிகுறிகளை நிவர்த்தி செய்யவே பயன்படுகின்றன. இதற்கான சிகிச்சை முறைகள் பின்வருமாறு:

  • போட்டுலினம் நச்சு ஊசிகள்.
  • வாய்வழி மருந்துகள்.
  • அறுவை சிகிச்சை.
  • உடல் சார்ந்த சிகிச்சை.

கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியாவுக்கும் மன அழுத்தத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றாலும், மன அழுத்தமானது அறிகுறிகளை மோசமாக்கலாம்.மன அழுத்தம், அதிகப்படியான உற்சாகம் மற்றும் குறிப்பிட்ட சில தோற்றப்பாங்குகள் டிஸ்டோனியா ஏற்படுவதற்கு காரணமாகி, அதன் அறிகுறிகளை மோசமாகலாம்.

மன அழுத்தத்தை குறைத்துக்கொண்டு, சரியான தோற்றப்பாங்கினை பின்பற்றினால், இந்த அறிகுறிகளை கட்டுப்படுத்தலாம். தலை மற்றும் கழுத்து பிணைப்புகள்/ப்ரேஸ்கள் பயன்படுத்துவதன் மூலமாக வலியையும் அசௌகரியத்தையும் குறைக்கலாம்.



மேற்கோள்கள்

  1. Dystonia Medical Research Foundation. Dystonia News. Medical Research Foundation; [Internet]
  2. National Organization for Rare Disorders. Cervical Dystonia. Danbury CT; [Internet]
  3. Brain Foundation. Cervical Dystonia. Australia. [Internet]
  4. American Academy of Family Physicians. Cervical Dystonia. UK; [Internet]
  5. National Health Service [Internet]. UK; Dystonia

கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா டாக்டர்கள்

Dr. Manoj Kumar S Dr. Manoj Kumar S Orthopedics
8 Years of Experience
Dr. Ankur Saurav Dr. Ankur Saurav Orthopedics
20 Years of Experience
Dr. Pritish Singh Dr. Pritish Singh Orthopedics
12 Years of Experience
Dr. Vikas Patel Dr. Vikas Patel Orthopedics
6 Years of Experience
ஒரு டாக்டரிடம் ஆலோசனைப் பெறுங்கள்

கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா க்கான மருந்துகள்

Medicines listed below are available for கர்ப்பப்பை வாய் டிஸ்டோனியா. Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.

Medicine Name

Price

₹537.0

Showing 1 to 0 of 1 entries