கிளமீடியா - Chlamydia in Tamil

Dr. Ajay Mohan (AIIMS)MBBS

November 29, 2018

July 31, 2020

கிளமீடியா
கிளமீடியா

கிளமீடியா என்றால் என்ன?

கிளமீடியா என்பது ஆண், பெண் என இருபாலரையும் பாதிக்கும் பாலியல் ரீதியாக பரவும் ஒரு நோய்த்தொற்றாகும். கிளமிடியா டிராக்கோமடிஸ் என்ற நுண்ணுயிரி (பாக்டீரியா) இந்த நோய் ஏற்பட காரணமாகிறது.

முன்னெப்போதாவது இந்த நிலை ஏற்பட்டிருந்த ஒரு நபரின் உடலில் இந்த நுண்ணுயிரி நுழைந்தால், அவர் மீண்டும் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவார்.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கிளமீடியா உள்ள சில நபர்களுக்கு அவர்கள் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட வேறொருவரின் தொடர்பில் வரும்வரை எந்த அறிகுறிகளும் இல்லாமலே போகலாம்.

ஆண்களிடம் தென்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:

 • சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல்.
 • ஆண்குறியிலிருந்து எரிச்சலுடன் திரவம் வெளியேறுதல்.

பெண்களிடம் தென்படும் அறிகுறிகள் பின்வருமாறு:

குழந்தைகள் விஷயத்தில் கண் மற்றும் நுரையீரலில் ஏற்படும் தொற்றுகளும் இதற்கான அறிகுறிகளில் அடங்கும்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

 • கிளமீடியா ஒரு நபருக்கு உடலுறவின் மூலமாக ஏற்படக்கூடும். இந்த நோய்த்தொற்றுள்ள இணையருடன் வாய்வழி, ஆசனவாய் வழி அல்லது யோனி வழியாக உடலுறவு கொள்ளும்போது உங்களுக்கு இந்த நோய்த்தொற்று ஏற்படும் அபாயமிருக்கிறது.
 • இந்த நோய்த்தொற்றுள்ள ஒரு தாய், பிரசவத்தின் போது தன் குழந்தைக்கு இந்த தொற்றை பரப்பக்கூடும்.
 • பாதுகாப்பில்லாத உடலுறவு அல்லது பல இணையர்களிடம் உடலுறவு போன்றவையால் உங்களுக்கு கிளமீடியாவுடன் சேர்த்து ஒரு பாலினரீதியாக பரவும் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் அபாயமுள்ளது. (மேலும் படிக்கவும்: பாதுகாப்பான உடலுறவு கொள்வது எப்படி)

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

 • எந்த அறிகுறியும் இல்லாவிட்டாலும் நீங்கள் கிளமீடியா தொற்றுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக நீங்கள் சந்தேகித்தால் மருத்துவரிடம் உங்கள் பாலியல் ரீதியான வரலாற்றை தெரிவிப்பது அவசியமாகும்.
 • ஒரு பெண்ணிடம் இந்த தொற்றுள்ளதா என்பதை கண்டறிய யோனியிலிருந்து மாதிரி எடுக்கப்படுகிறது.
 • ஆண்களிடம் இதை கண்டறிவதற்காக சிறுநீர் சோதிக்கப்படுகிறது.

இதன் சிகிச்சை கீழ்வருமாறு அமைகிறது:

 • இது ஒரு நுண்ணுயிரியால் (பாக்டீரியா) ஏற்படும் தொற்று என்பதால் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் இந்த நோய்க்கான தரமான சிகிச்சையாக அமைகின்றது.
 • அளிக்கப்பட்ட ஆண்டிபையோட்டிக்கை/நுண்ணுயிர் எதிர்ப்பிகளை பொறுத்து இந்த சிகிச்சைக்கான கால அளவு 10-14 நாட்கள் வரை நீடிக்கலாம். நீங்கள் இந்த தொற்றிலிருந்து முழுமையாக விடுபடுவதை உறுதி செய்வதற்காக இந்த சிகிச்சையை நீங்கள் முழுமையாக நிறைவு செய்யவேண்டுமென்பது முக்கியமாகும்.
 • பெண்களுக்கு இந்த தொற்று கர்ப்பப்பை மற்றும் கருப்பைவாய் வரை பரவும் சிக்கல்களை ஏற்படுத்தி மலட்டுத்தன்மை போன்ற கடுமையான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கிறது.
 • ஆண்களிடம் இந்த தொற்று விந்துப்பை அல்லது சிறுநீர் வடிகுழாய் வரை பரவுகிறது.மேற்கோள்கள்

 1. Elwell C et al. Chlamydia cell biology and pathogenesis.. Nat Rev Microbiol. 2016 Jun;14(6):385-400. PMID: 27108705
 2. Marc O. Beem et al. Respiratory-Tract Colonization and a Distinctive Pneumonia Syndrome in Infants Infected with Chlamydia trachomatis. The New England Journal of Medicine; February 10, 1977
 3. Catherine M. O’Connell et al. Chlamydia trachomatis Genital Infections. Microb Cell. 2016 Sep 5; 3(9): 390–403. PMID: 28357377
 4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Chlamydia Infections
 5. Kalpana Betha et al. Prevalence of Chlamydia trachomatis among Childbearing Age Women in India: A Systematic Review. Infect Dis Obstet Gynecol. 2016; 2016: 8561645. PMID: 27672303