பித்தத்தேக்க கல்லீரல் நோய் என்றால் என்ன?
பித்தத்தேக்க கல்லீரல் நோய் என்பது பித்தநீர்த்தடை என்றும் அறியப்படுகிறது, பித்தத்தேக்க கல்லீரல் நோய் என்பது கல்லீரலில் இருந்து செல்லும் பித்த ஓட்டத்தின் அளவு குறைவது அல்லது அதில் ஏற்படும் அடைப்பு போன்ற நிலையே ஆகும். இந்த நோய் கடுமையானதாகவோ அல்லது நீண்டகாலமாகவோ இருக்கலாம். மேலும், இது எல்லா வயத்துக்குட்பட்ட தனிநபர்களையும் பாதிக்கக்கூடியது. இது கல்லீரலின் வெளியே ஏற்படும் வெளி கல்லீரல் பித்தநீர்த்தடை மற்றும் கல்லீரலுக்கு உள் ஏற்படும் உள் கல்லீரல் பித்தநீர்த்தடை என இரு வகைப்படுத்தப்பட்டிருக்கிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பித்தத்தேக்க கல்லீரல் நோயின் அறிகுறிகள் கல்லீரல் அழற்சி (ஹெபடைடிஸ்) அறிகுறிகளோடு ஒத்ததாக இருக்கின்றன, இதுவும் அதன் காரணங்களில் ஒன்றாகும். பித்தநீர்த்தடையின் அறிகுறிகள் பின்வருமாறு:
- குமட்டல்.
- இருண்ட நிறத்திலான சிறுநீர்.
- வெள்ளை அல்லது களிமண் நிற மலம்.
- அரிப்பு.
- மேல் வயிற்றில் ஏற்படும் வலி.
- தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்.
- சில உணவுகள் செரிப்பதில் ஏற்படும் சிரமம் (மேலும் வாசிக்க: அஜீரணத்துக்கான சிகிச்சை).
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
பாதிக்கப்பட்டவர்களின் வயது வரம்பின் அடிப்படையில், பித்தநீர்த்தடைக்கான காரணங்கள் பின்வருமாறு:
- கைகுழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பித்தநீர்த்தடைக்கான காரணங்கள்:
- துத்தநாகம் சேமிப்பு கோளாறு போன்ற மரபணு காரணம்.
- சிர்ரன் மரபணுவின் திடீர் மரபணு மாற்றம்.
- பைலரின் சிண்ட்ரோம்/நோய்க்குறி (ஒரு மரபணு சார்ந்த தன்நிறப்புரி பின்னடைவு கோளாறு).
- பெரியவர்களுக்கு ஏற்படும் பித்தநீர்த்தடைக்கான காரணங்கள்:
- பரிந்துரைக்கப்படும் மருந்துகள்.
- மூலிகைகள் உள்ளடக்கிய சிகிச்சைகள்.
- மருத்துவரால் பரிந்துரை செய்யப்படாத மருந்துகள்.
இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்படும் பித்தநீர்த்தடைக்கான காரணங்கள்:
- உள் கல்லீரல் பித்தநீர்த்தடைக்கான காரணங்கள்:
- கர்ப்பம்.
- காசநோய்.
- மது சார்ந்த கல்லீரல் நோய்.
- நிணநீர் திசுக்கட்டி.
- பாக்டீரியாவால் கல்லீரலில் ஏற்படும் சீழ்ப்படிந்தகட்டி.
- பித்தநீர் சார்ந்த கல்லீரல் இழைநார் வளர்ச்சி (மேலும் படிக்க: கல்லீரல் இழைநார் வளர்ச்சிக்கான அறிகுறிகள்).
- இரத்த ஓட்டத்தின் மூலம் பரவுக்கூடிய நோய்த்தொற்றுகள்.
- வெளி கல்லீரல் பித்தநீர்த்தடைக்கான காரணங்கள்:
- நீர்க்கட்டிகள்.
- பித்தக்கானில் உருவாகும் கட்டிகள்.
- பித்தக்கானில் இருக்கும் கற்கள்.
- கணைய அழற்சி (மேலும் படிக்க: கணைய அழற்சிக்கான சிகிச்சை).
- கணையத்தில் ஏற்படும் கட்டி.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
உங்களுக்கு பித்தத்தேக்க கல்லீரல் நோய் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், மருத்துவர் பின்வரும் சோதனைகளை பரிந்துரைப்பார்:
- கல்லீரல் செயல்பாட்டு சோதனை: இது பித்தம் மற்றும் இரத்தத்தில் உள்ள காரத்தன்மையுடைய ஃபாஸ்ஃபட்டேகளின் அதிக அளவுகளை கண்டறிய உதவுகிறது.
- கல்லீரலை மதிப்பிட உதவும் இயல்நிலை வரைவு சோதனைகள் பின்வருமாறு:
- அடிவயிற்றின் எம்.ஆர்.ஐ.
- வயிற்றின் மீயொலி இயல்நிலை வரைவு (இமேஜிங்).
- உங்கள் அடிவயிற்றின் சி.டி ஸ்கேன்.
- எண்டோஸ்கோபிக் ரெட்ரோகிரேடு க்லோஞ்சியோபான்க்ரியாட்டோகிராபி (ஈஆர்சிபி).
பித்தத்தேக்க கல்லீரல் நோய்க்கான சிகிச்சையானது, இந்த நிலைக்கான அடிப்படை காரணத்தின் அடையாளத்தை கண்டறிந்து, அதற்குத் தகுந்த சிகிச்சை அளிப்பதே ஆகும். பித்தநீர்த்தடைக்கான சிகிச்சைகள் பின்வருமாறு:
- அறிகுறிகள் சார்ந்த சிகிச்சை: நமைப்பு (அரிக்க அல்லது சொறிய வேண்டும் போல் இருத்தல்) இதன் மிகவும் பொதுவான அறிகுறியாகும், ஆனால் இது மெதுவாக தூக்கத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும், எனவே, அதை நாம் சமாளிக்க வேண்டும். கொலஸ்டிரமைன் போன்ற எதிரயன் பரிமாற்ற பிசின் பொதுவாக நமைத்தலின் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுகிறது. நுண்ணுயிர் எதிர்ப்பிகள் நமைத்தலுக்கான இரண்டாம் கட்ட சிகிச்சையாகும்.
- குறிப்பிட்ட சிகிச்சை: பலவிதமான நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் இயக்க ஊக்கி மருந்துகள் சிகிச்சை நிலைமைக்கான காரணத்தை பொறுத்து ஆரம்பிக்கப்படலாம்.
(மேலும் வாசிக்க: கல்லீரல் நோய்களின் வகைகள்)