நாள்பட்ட விக்கல்கள் என்றால் என்ன?
விக்கல்கள் 48 மணி நேரத்திற்கு மேல் நிற்காமல் நீடித்து இருந்தால் அது நாள்பட்ட விக்கல்களாக கருதப்படுகிறது. மார்பு வயிற்றிடைமென்றகடு அதாவது அடிப்படையில் ஒரு பெரிய தகடு-போன்ற தசை திடீரென தானாக சுருங்கி விரியும், இதனை அடுத்து குரல் நாண்கள் உடனடியாக மூடிக்கொள்ளும். இதுவே விக்கல் எடுக்கும் போது உண்டாகும் சத்தத்துக்கான காரணம். ஏதாவது நேரத்தில் விக்கல்கள் ஏற்படுவது என்பது பொதுவானதே ஆகும். ஆனால் நாள்பட்ட விக்கல்கள் பொதுவானவை அல்ல மற்றும் அதற்கு மருத்துவ கவனிப்பு கண்டிப்பாக அளிக்கப்பட வேண்டும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்த நிலையின் முக்கிய அறிகுறி என்பது விக்கல்களே. இருப்பினும், நீண்ட கால இடைவெளிக்கு பிறகு விக்கல்கள் நிலைப்பெற்றிருந்தால் பிற அறிகுறிகளும் கவனிக்கப்படலாம், அவை பின்வருமாறு:
- தூக்கமின்மை.
- சாப்பிடவோ அல்லது நீராகாரங்களை குடிக்கவோ இயலாமை.
- சோர்வு.
- எடை இழப்பு.
- நீர்ப்போக்கு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
விக்கலுக்கான காரணிகள் பெரியளவில் வேறுபடக்கூடும். இருப்பினும், ஒருவர் நாள்பட்ட விக்கல்களை எதிர்கொள்ள நேரிடும் போது, அதற்கு பின்வருபவை காரணமாக இருக்கலாம்:
- நரம்பியல் கோளாறு.
- கர்ப்பம்.
- அண்மையில் மயக்க மருந்துக்கு உட்பட்டிருந்தால் அதனால் ஏற்படும் விளைவு.
- குறிப்பாக வயிறு அல்லது மேல்வயிற்றில் செய்யப்பட்டிருக்கும் அறுவை சிகிச்சையினால் ஏற்படலாம்.
- வயிறு, கடைப்பெருங்குடல், கல்லீரல் அல்லது மார்பு வயிற்றிடைமென்றகடு போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் கூட நேரலாம்.
- மதுப்பழக்கம்.
- புற்றுநோய்.
- நுரையீரல் அழற்சி அல்லது நுரையீரற் சவ்வின் அழற்சி.
- தண்டுவட மரப்பு நோய் அல்லது மத்திய நரம்பு மண்டலத்தில் ஏற்படும் மற்ற நிலைகள்.
- மன அழுத்தம் அல்லது பதட்டம் போன்ற மனநல பிரச்சினைகள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
நாள்பட்ட விக்கல்களை கண்டறிதல் மிகவும் எளிமையானது. மேலும் இதை கிட்டத்தட்ட உடனடியாக கண்டறிந்துகொள்ளலாம். ஒரு விரிவான மருத்துவம் சார்ந்த வரலாறு மற்றும் உடல் பரிசோதனை பெரும்பாலும் இதனைக் கண்டறிவதற்கு போதுமானதாக இருக்கக்கூடும். இருப்பினும், இதன் மூல காரணத்தை அல்லது இதன் தொடர்புடையவற்றை அறிந்து கொள்ளவோ சில இயல்நிலை வரைவு ஆய்வுகள் பரிந்துரைக்கப்படுவது என்பது அசாதாரணமானது அல்ல. உங்கள் மருத்துவர் மார்பிலோ அல்லது மேல்வயிற்றிலோ நோயியலின் தாக்கம் இருக்கிறதா என்பதைப் பற்றி அறிந்துகொள்ள எக்ஸ்-கதிர்களை சோதனையை பரிந்துரைக்கலாம்.
சிகிச்சை நோயாளியின் நிலையைப் பொறுத்து வேறுபடுகின்றது, அவை பின்வருமாறு:
- குளோர்புரொமசைன், பாக்ளோபின் அல்லது வல்பிரோயிக் அமிலம் ஆகியவை பரிந்துரைக்கப்படலாம்.
- விக்கலை ஏற்படுத்தும் நிலைக்கான சிகிச்சை.
- தசை தளர்த்திகள் மற்றும் உள அமைதியூக்கிகள்.
- அலையுநரம்புகளை தூண்டுவதற்காக அறுவை சிகிச்சை.
- மார்பு வயிற்றிடைமென்றகடு டிற்கு விநியோகம் செய்யும் விதானநரம்புக்குள் மயக்க மருந்தை உட்செலுத்துதல்.
- அக்குபங்க்சர் மருத்துவம் அல்லது ஆழ்துயில் மருத்துவம் போன்ற மாற்று சிகிச்சைகள்.