பள்ளத்தாக்கு காய்ச்சல் (காக்சிடியாய்டுப் பூசணநோய்) என்றால் என்ன?
காக்சிடியாய்டுப் பூசணநோய் அல்லது பள்ளத்தாக்கு காய்ச்சல் என்பது கோசிசிடொய்ட்ஸ் என்னும் பூஞ்சையினால் ஏற்படும் ஒரு நுரையீரல் நோய் தொற்று ஆகும். இது பெரும்பாலும் அமெரிக்காவின் தென்மேற்கு மாநிலங்களிலும், மெக்ஸிகோவின் சில பகுதிகளிலும், மத்தி0ய மற்றும் தென் அமெரிக்காவிலும் காணப்படுகிறது. அத்தகைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த பள்ளத்தாக்கு காய்ச்சல் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட கேஸில் முதன்முதலாக வட இந்தியாவில் கண்டறியப்பட்டது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
இந்த நோயின் வெளிப்பாட்டின் பின் 1லிருந்து-3 வாரங்களுக்கு இடையே இதன் அறிகுறிகள் தோன்றுகிறது மற்றும் இது சில வாரங்களிலிருந்து சில மாதம் வரை நீடிக்கிறது. இந்த நோயின் அறிகுறிகள் பின்வருமாறு:
- தடிப்பு (மேலும் வாசிக்க: தோல் அழற்சிக்கான சிகிச்சை).
- இருமல்.
- காய்ச்சல்.
- மூச்சு திணறல்.
- தலைவலி.
- இரவு நேரங்களில் அதிகமாக வியர்த்தல்.
- தசைகளில் வலி அல்லது மூட்டு வலி.
- முனைப்புள்ளிகள் ஏற்படும் வேனிற்கட்டி.
பாதிக்கப்பட்ட நபர்களில் சுமார் 5%லிருந்து -10% நோயாளிகளுக்கு சிறிது காலம் களித்து நுரையீரல் பிரச்சினைகள் உருவாகலாம். நாள்பட்ட நிலைமையில் பின்வரும் அறிகுறிகள் வெளிப்படுகின்றன:
- மிதமான காய்ச்சல்.
- நெஞ்சு வலி.
- எடை இழப்பு.
- இரத்தம் உறைந்த சளி.
நோய்த் தொற்று பரவினால் பின்வரும் அறிகுறிகள் தோன்றும்:
- புடைப்பு, தோலில் ஏற்படும் கடுமையான புண்.
- மண்டை மற்றும் மற்ற எலும்புகளில் ஏற்படும் வலிமிகுந்த காயம்.
- வலி மற்றும் வீக்கம் உடைய மூட்டுகள்.
- மூளையுறைசார் நோய்த் தொற்று (மூளை மற்றும் தண்டுவடத்தில் இருக்கும் பாதுகாப்பு திசுவில் ஏற்படும் நோய்த்தொற்று).
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
இது முக்கியமாக பூஞ்சை வித்துகளை சுவாசத்தின் மூலம் உள்ளிழுப்பதால் ஏற்படுகிறது. இந்த வித்துகள் தூசி துகள்கள்களின் மூலம் காற்றுடன் கலந்து உடலில் நுழைந்து தொற்றினை ஏற்படுத்துகிறது. எனினும், அது பரவக்கூடியது அல்ல.
ஆபத்து விளைவிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- சுற்றுசூழல் வெளிப்பாடு: சுற்றியுள்ள இடங்கள், வீட்டிற்குள் அல்லது அருகிலுள்ள பணியிடங்களில் இருந்து வித்துக்களை சுவாசிப்பதால் ஏற்படுகிறது.
- கர்ப்பம்: கர்ப்பிணி பெண்கள், கருவுற்ற கடைசி மூன்று மாதங்களில் இந்த நோயினால் மிகவும் பாதிப்படையக்கூடும்.
- குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி: எச்.ஐ.வி-பாசிட்டிவ் அல்லது எய்ட்ஸ் நோயாளிகள் இந்த நோய்த்தொற்றைப் பெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
- வயது: வயதான தனிநபர்கள் இந்த நோயினால் அதிகமாக பாதிக்கப்படுவர்.
- இனத்தன்மை: ஃபிலிபினோ மற்றும் ஆபிரிக்க மக்கள் இந்த தொற்றுநோயினால் எளிதில் பாதிக்கப்படக்கூடிய அதிக வாய்ப்பு உள்ளது.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
பள்ளத்தாக்கு காய்ச்சளுக்கான அறிகுறிகளையும் அடையாளங்களையும் மட்டுமே வைத்து நோயை கண்டறிதல் என்பது கடினமாக இருப்பதால், பின்வரும் சோதனைகளும் மேற்கொள்ளப்படலாம்:
- தோல் சோதனை.
- சளி ஸ்மியர் சோதனை.
- முழு இரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் ஒரு மணி நேரத்தில் எந்த விகிதத்தில் கீழே வந்து படிகின்றன போன்ற இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்.
சிகிச்சைக்குள் அடங்குபவை:
- பூசணஎதிர்ப்பி முகவர்களைப் பயன்படுத்துவது: இதனால் பக்க விளைவுகள் ஏற்படலாம், ஆனால் சிகிச்சை முடிந்தவுடன் அவை மறைந்துவிடும்.
- நோய்எதிர் திறனொடுக்கி மருந்துகளை கவனமாக பயன்படுத்துதல்.
சுய-பாதுகாப்பு குறிப்புகள்:
- போதிய ஓய்வு தேவை.
- போதுமான அளவில் திரவத்தை உட்கொள்ளல் அவசியமானது.
- தூசிக்கு பாதிப்புக்குள்ளாகும் அல்லது காற்றோட்டமுள்ள பகுதிகளில் வேலை செய்வதை தவிர்த்தல்.
- மோசமான வானிலையின் போது வீட்டிற்குள்ளேயே இருத்தல்.
- உங்கள் அறைக்குள் காற்று வடிகட்டிகள் மற்றும் சுவாச முகமூடிகளைப் பயன்படுத்துதல்.
- தொற்றுநோயைத் தடுக்க கிருமிநாசினி பயன்படுத்தி காயங்களை சுத்தப்படுத்துதல்.
தேவையான நடவடிக்கைளை பின்பற்றுவதன் மூலம் பள்ளத்தாக்கு காய்ச்சலை எளிதில் தடுக்க முடியும். அறிகுறிகள் அல்லது அடையாளங்கள் கட்டுப்பாட்டை மீறிச் சென்றால், உடனடியாக உங்கள் மருத்துவரை கலந்தாலோசிப்பது மேலும் ஏற்படவிருக்கும் சிக்கல்களைத் தவிர்க்க உதவும்.
(மேலும் படிக்க: பூஞ்சை நோய் தொற்றுக்கான சிகிச்சைகள்).