கோலிக் - Colic in Tamil

Dr. Pradeep JainMD,MBBS,MD - Pediatrics

December 06, 2018

October 29, 2020

கோலிக்
கோலிக்

கோலிக் என்றால் என்ன?

கோலிக் என்பது பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் காணப்படும் பொதுவான நிலைமயே ஆகும். இருப்பினும், பொதுவாக கோலிக் என்பது  கைகுழந்தைகளில் காணப்படும் குழந்தைக்குரிய கோலிக்கையே குறிக்கின்றது. பிறந்த முதல் இரண்டு மாதங்களுக்குள், ஒவ்வொரு 5 குழந்தைகளிலும் சுமார் 1 குழந்தைக்கு  கோலிக்கினால் பாதிக்கப்பேற்படுகிறது. கோலிக் என்பது வயிற்றில் உண்டாகியிருக்கும் வலியினாலோ அல்லது வயிற்றில் ஏற்பட்டிருக்கும் அசௌகரியத்தினாலோ என நம்பி அவஸ்தையினால் அழும் கைக்குழந்தைகளை தேற்ற முடியாமல் இருக்கும் நிலையே ஆகும். குழந்தை ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் மேலாகவும் ஒரு வாரத்தில் 3 நாட்களுக்கு மேலாகவும் தொடர்ந்து அழுதுக்கொண்டேயிருந்தால் அது கோலிக் என கண்டறியப்படுகிறது.

குழந்தைகள் தங்களுடைய தேவைகளை பிறர் அறிந்து கொள்வதற்காகவே அழுகிறார்கள். பசி, தூக்கம், சோர்வு, வெப்பம் அல்லது குளிர் அல்லது அழுக்கடைந்த டயப்பர் போன்ற காரணத்தால் அழுகவில்லை எனும் பொழுது, ​​குழந்தை பெரும்பாலும் கோலிக் தாக்குதலினாலேயே பாதிக்கப்பட்டிருக்கிறது என கருதுவது பாதுகாப்பானது.

நோயின் முக்கிய அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

கைக்குழந்தைகள் கோலிக் தாக்குதலை அனுபவிக்கும்போதோ அல்லது அவற்றின் பாதிப்புகளுக்கு உட்படும் போதோ, நீங்கள் பின்வரும் அறிகுறிகளை கவனிக்கலாம்:

  • ஒழுங்கற்ற அல்லது தொந்தரவுகள் நிறைந்த தூக்கம்.
  • பாலூட்டும் முறையில் ஏற்படும் தொந்தரவு, அதாவது குழந்தை அழுவதால் பாலூட்டுவதில் ஏற்படும்  தடையோ அல்லது குழந்தை  வழக்கதுக்கு மாறக நடந்துகொள்தல்.
  • ஓய்வின்மை.
  • கைகுழந்தைகளிடத்தில் ஏற்படும் பதற்றமான உணர்வு - விரல்கள் மடங்கியுள்ள கைகள், வளைந்த முதுகுப்புறம், முழங்கால்கள் உள்ளிழுக்கப்படுவதோடு வயிற்றில் உள்ள தசைகள். இறுக்கமடைந்திருப்பதினால் ஏற்படும் உணர்வு.
  • கவனத்தை மாற்றினாலும், ஆறுதல் படுத்தினாலும், அதிக கவனம் செலுத்தினாலும் அதற்கு இசைந்து கொடுக்காமல் தளராமல் அழுதுக் கொண்டேயிருத்தல்.
  • தொந்தரவு மற்றும் அசௌகரியத்தின் பாங்கு ஒவ்வொரு நாளும், அதே சமயத்தில் ஏற்படுவது.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

எந்த கைகுழந்தைக்கும் கோலிக் ஏற்படும் வாய்ப்புள்ளது. இது முதல் குழந்தை அல்லது குழந்தை பருவத்தின் பிற்பகுதியில் அல்லது தாய்ப்பால் அருந்தும் குழந்தைகளை விட பாட்டில் பால் அருந்தும் குழந்தைகளில் அதிகமாக உள்ளது என்றெல்லாம் கணிப்பது கடிணம், ஏனெனில், இவர்கள் அனைவரும் சமமாக  பாதிக்கப்படக்கூடியவர்களே. கோலிக் ஏற்படுத்தும் சில காரணங்கள் பின்வருமாறு:

  • தாயின் பாலில் இருக்கும் சில பொருட்களினால் ஏற்படும் எதிர்வினை காரணமாக இருக்கலாம்.
  • லாக்டோஸ்  சகிப்புத்தன்மையின்மை.
  • அஜீரணம்.
  • கர்ப்பகாலத்தின் போது புகைபிடித்த தாய்மார்களின் குழந்தைகளுக்கு கோலிக் ஏற்படலாம்.

இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?

குழந்தைகள் கோலிக் நோயினால் தான் வேதனை படுகிறார்களா என கண்டறிவதற்கு முன்பு மருத்துவர்கள் பொதுவாக குழந்தைகள் படும் வேதனைக்கு வேறெதுவும் சாத்தியமான காரணங்கள் இருக்கிறதா என அறிந்துகொள்ள எளிமையான சோதனைகளை மேற்கொள்வார்கள். இது மற்ற எந்த சோதனைகளை போலவும் அல்லது ஆய்வை போலவும் மேற்கொள்ளப்படாது.

பெரும்பாலான மருத்துவர்கள், கோலிக் நோய் படிப்படியாக குணமாகும் வரையிலும், மற்றும் குழந்தை அதற்கு ஏற்றார் போல் தன்னை மாற்றிக்கொள்ளும் வரையிலும் பொறுமையாக இருக்கும்படி அறிவுறுத்துகிறார்கள். லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டால், மருத்துவர்கள் பசுமாட்டுப் பாலை தவிர்க்கும்படி அறிவுறுத்துகிறார்கள் அல்லது குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிக்கொண்டிருக்கும் அம்மக்களுக்கு சில உணவுகட்டுப்பாடுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கலாம்.

தொட்டிலில் ஆட்டுதல், குழந்தையை துணியால் சுற்றி இதமாக அணைத்துக்கொள்தல் மற்றும் பேசிஃபையரின் பயன்பாடு அறிவுறுத்தக்கூடியதும் மற்றும் பெரும்பான்மையான நிகழ்வுகளில்  இதுவே உதவக்கூடியதுமாகும். பாலூட்டியவுடன் குழந்தையை ஏப்பம் எடுக்க வைத்தால் மற்றும் குளிக்கும் முன் எண்ணெய் மசாஜ் செய்வதும் உதவக்கூடும்.

சில நேரங்களில் சிமித்திகோன் சொட்டு மருந்துகள் கொடுப்பதன் மூலம் குழந்தைகளுக்குள் இருக்கும் வாயு எளிதாக வெளியேறி மற்றும் வலி நிவாரணம் பெறவும் உதவுகிறது.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; Colic
  2. National Health Service [Internet]. UK; Colic
  3. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Colic
  4. Healthdirect Australia. Colic in babies. Australian government: Department of Health
  5. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Colic and crying: self-care

கோலிக் க்கான மருந்துகள்

Medicines listed below are available for கோலிக். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.