நம் அனைவருக்கும் கண்டிப்பாக ஒரு சில நேரங்களில் ஜலதோஷம் (சளி) இருந்திருக்கும். சளி இன் பொதுவான அறிகுறிகளான மூக்கு ஒழுகுதல் அல்லது மூக்கடைப்பு, உட் தொண்டையில் அரிப்பு உணர்வு மற்றும் தொடர் தும்மல் ஆகியவை எல்லோருக்கும் ஏற்படக்கூடியது. இருப்பினும், ஜலதோஷம் (சளி) என்றால் என்ன? எதனால் இது ஏற்படுகிறது? இதை எவ்வாறு சரி செய்யலாம்? மற்றும் மிகவும் முக்கியமாக, ஒருவர் எவ்வாறு தனக்கு ஜலதோஷம் (சளி) வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்? போன்ற ஜலதோஷம் (சளி) தொடர்பான சில முக்கிய உண்மைகள் இன்னமும் அறியப்படவில்லை. பொதுவான ஜலதோஷம் (சளி) பற்றி எல்லாவற்றையும் அறிய தொடர்ந்து முழுமையாக படிக்கவும்.
ஜலதோஷம் (சளி) என்றால் என்ன?
ஜலதோஷம் (சளி) வைரஸ் தொற்றால் மேல் சுவாசக் குழாயில் ஏற்படும் ஒரு நோய் ஆகும். இந்த நிலைக்கு 200 க்கும் மேற்பட்ட வகையான வைரஸ்கள் காரமாக இருப்பதாக நம்பப்படுகிறது, இதில் "ரைனோவைரஸ்" மிகவும் பிரபலமானதாக இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது, இதுவே ஏறத்தாழ உலகின் பாதி ஜலதோஷ பாதிப்புகளுக்கு பொதுவான காரணமாக உள்ளது. கொரோனா வைரஸ்,ரெஸ்பைரேடரி சின்சிடியல் வைரஸ், இன்ஃப்ளுஎன்சா வைரஸ் மற்றும் பாராஇன்ஃப்ளுஎன்சா போன்ற வைரஸ்களும் ஜலதோஷத்தை (சளியை) ஏற்படுத்துகிறது.
ஜலதோஷம் (சளி) எப்படி பரவுகிறது?
மேலே குறிப்பிட்ட வைரஸ்கள் மூலம் ஏற்கனவே ஜலதோஷத்தால் (சளி) பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து ஜலதோஷம் (சளி) எளிதில் மற்றவர்களுக்கு பரவக்கூடியது. ஜலதோஷம் (சளி) காற்று மூலம், பாதிக்கப்பட்ட நபருடன் நேரடி உடல் தொடர்பு அல்லது அவர் பயன்படுத்திய கம்ப்யூட்டர் விசைப்பலகை, மொபைல் போன்கள், டோர்க்நாப் மற்றும் ஸ்பூன் போன்றவற்றை பிறர் பயன்படுத்துவதால் நேரடியாக தொற்றிக்கொள்ளும். மருத்துவர்கள் பாதிக்கப்பட்ட தனிநபருடன் எந்த நேரடி தோல் தொடர்பு மற்றும் அவரது தனிப்பட்ட உடமைகளை பிறர் பயன்படுத்த வேண்டாம் பரிந்துரைகின்றனர், அவ்வாறு செய்வதால் ஜலதோஷம் (சளி) தொற்றிக்கொள்ளும் வாய்ப்புள் அதிகரிக்க கூடும். ஜலதோஷம் (சளி) உள்ளவர்கள் தும்முல், இருமல் மற்றும் பேசும்போது அவர்கள் வாயிலிருந்து தெறிக்கும் நீர் துளிகள் காற்றில் கலக்கும் வழியாக எளிமையாக பரவுகிறது என பெரும்பாலோருக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். காற்றில் கலந்த நீர் துளிகளிலிருந்து வைரஸ் விரைவாக காற்றில் பரவி மனித உடலுக்குள் நாசி வழியும் தொண்டை குழாய் வழியும் நுழைகிறது.
ஆரம்பத்தில், நம் நோயெதிர்ப்பு அமைப்பு இந்த தொற்றுக்களுக்கு எதிராக போராடி நோய்த்தொற்றை (வைரஸ்) ரத்த வெள்ளை அணுக்களின் (WBC) உதவியுடன் தாக்கி உடலை பாதுகாக்கிறது. ஆனால் உங்கள் உடல் முன்பே இந்த நோயால் பாதிக்கப்படவில்லை என்றால், உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பு அதற்கு தயாராக இருக்காது. இதனால், உங்கள் மூக்கு மற்றும் தொண்டையின் உள்ளே அழற்சி ஏற்படுகிறது, இதன் விளைவாக ஜலதோஷம் (சளி) உருவாகிறது. ஆனால் நம் உடல் இந்த வைரஸை எதிர்த்துப் போராட நிறைய ஆற்றலைப் பயன்படுத்துகிறது, இது பெரும்பாலும் சோர்வை விளைவிக்கும் (பலவீனமாக மற்றும் சோர்வாக உணர்தல்) என்பதை கூட நாம் உணரமுடிவதில்லை. இதை தெரிந்துகொள்வது நமக்கு ஆச்சரியமாக இருக்கலாம்.
உங்களுக்கு தெரியுமா?
குளிராக உணர்தல் அல்லது நனைந்து விடுவதால் ஜலதோஷம் (சளி) தொற்றிக்கொள்கிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால் சமீபத்திய ஆய்வுகள், ஒருவர் மன அழுத்தத்தின் கீழ் இருக்கும்போது, அல்லது உணர்ச்சிவசப்பட்ட மனநிலையுடன் இருக்கும்போது அல்லது தொண்டை மற்றும் மூக்கு ஒவ்வாமை ஏற்படும் போது மட்டுமே ஜலதோஷம் (சளி) ஏற்பட வாய்ப்புகள் உள்ளது என உறுதிப்படுத்துகிறது.