குஷிங்'ஸ் சிண்ட்ரோம் என்றால் என்ன?
குஷிங்'ஸ் சிண்ட்ரோம் என்பது ஒரு ஹார்மோன் கோளாறு ஆகும், இது உடலில் உள்ள ஹார்மோன் கார்ட்டிசோல் (சாதாரண கார்டிசோல் அளவுகளை விட அதிகமாக) சமநிலையின்மையின் காரணமாகவே ஏற்படுகறது. இதன் அளவுகள் மன அழுத்தம் ஏற்படும் காலங்களில் அதிகரிப்பதினால் கார்ட்டிசோல் என்பது "மன அழுத்த ஹார்மோன்" எனவே அழைக்கப்படுகிறது, . இது எண்டோஜெனஸ் ஆகவோ (உட்புற காரணிகளால் ஏற்படுதல்) அல்லது எக்ஸோஜெனஸ் ஆகவோ(வெளிப்புற காரணிகளால் ஏற்படுதல்) இருக்கலாம். உலகளவில் ஒரு மில்லியன் மக்கள்தொகைக்கு 40 முதல் 70 பேர் குஷிங்ஸ் சிண்ட்ரோமால் பாதிக்கப்படுவதாக மாறுபட்ட மதிப்பீடுகள் காட்டுகின்றன. பல மக்கள்தொகை ஆய்வுகளின் படி இந்தியாவில் இதன் நிகழ்வுகள் ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கு 0.7 முதல் 2.4 வரை வேறுபடுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
மருத்துவ அம்சங்களில் மாறுதல்கள் இருப்பதோடு பின்வருவதை
உட்கொண்டிருக்கலாம்:
- மேல் உடலில் பெரும்பாலும் காணப்படும் உடல் பருமன்.
- நிலவு போன்று வட்டமாக தொற்றுமாளிக்கும் முகம்.
- முதுகில் எருமை கூனல் ஏற்படுதல்.
- ஒழுங்கற்ற மாதவிடாய்.
- குறைந்த செக்ஸ் இயக்கம்.
- மன அழுத்தம்.
- உளப்பிணி (கடுமையான மன நோய்).
- அறிவாற்றல் கோளாறுகள்.
- பலவீனமான தசைகள்.
- எலும்பு முறிவுகள்.
- ஒழுங்கற்ற குழந்தை வளர்ச்சி.
பெரியவர்களில், குஷிங்'ஸ் சிண்ட்ரோம் பொதுவாக 30 முதல் 50 வயதிற்குள் ஏற்படுகிறது ஆனால் இது குழந்தைகளிலும் உருவாகலாம். குஷிங்'ஸ் நோய்க்குறியின் நிகழ்வு ஆண்களை விட பெண்களில் (3: 1 பெண் ஆண் விகிதத்தில்) அதிகமாக உள்ளது. சில அசாதாரணமான காணப்படும் அம்சங்கள் பின்வருமாறு:
- உறக்கமின்மை.
- தோல் சன்னமடைதல் மற்றும் வரிகளாக தழும்பு தோன்றுதல்.
- பெண்களுக்கு ஏற்படும் தலைவழுக்கை.
இதே போன்ற அறிகுறிகளைக் கொண்ட பிற நோய்கள் (வேறுபட்ட நோயறிதல்) பின்வருமாறு:
- பாலிசிஸ்டிக் கருப்பை நோய்க்குறி (பி.சி.ஓ.டி).
- வளர்சிதை மாற்ற நோய்க்குறி (இதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் நிலைமைகளின் தொகுப்பு).
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
உயர் அளவு கார்டிசோல்களின் பயன்பாடு, குறிப்பாக குளுக்கோகார்ட்டிகாய்டுகளை அடிக்கடி பயன்படுத்துவதன் விளைவே இந்த நோய் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகிறது. கார்ட்டிசால் பின்வரும் செயல்பாடுகளை கொண்டிருப்பதால் அது பயனுள்ளதாக இருக்கிறது:
- இரத்த அழுத்தம் மற்றும் இரத்த குளுக்கோஸ் அளவை பராமரிக்கிறது.
- அழற்சி நிலைகளை குறைக்கிறது.
- உடலினுள் உள்ள உணவை பயன்படும் சக்தியாக மாற்றுகிறது.
இருப்பினும், சமநிலையின்மையின் விளைவு கார்ட்டிசாலின் அசாதாரண நிலைகள், இது நீண்டகால பயணத்தில் சிக்கல்களுக்கு வழிவகுக்கூடியது. அது எண்டோஜெனஸ் அல்லது எக்ஸோஜெனஸ் ஆக இருக்கூடியது(நீண்ட காலத்திற்கு வாய்வழி கார்டிகோஸ்டீராய்டுகளை பயன்படுத்துதல்).
பிற காரணங்கள் பின்வருமாறு:
- பிட்யூட்டரி சுரப்பி புற்றுநோய் கட்டிகள்.
- ஹார்மோன் எ.சி.டி.ஹச் ஐ உருவாக்கும் எக்டோபிக் கட்டிகள்.
- அண்ணீரக சுரப்பி கட்டிகள்.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
நோயறிதல் முக்கியமாக பின்வருவனவற்றை கொண்டிருக்கலாம்:
- மருத்துவ வரலாறு.
- உடல் பரிசோதனை.
- ஆய்வக சோதனைகள்.
குளூக்கோகார்ட்டிகாய்டுகள் முக்கியமாக அழற்சி எதிர்ப்பு, ஆட்டோ இம்யூன், மற்றும் நியோபிளாஸ்டிக் (கட்டி) நோய்களுக்கு பயன்படுத்தப்படுகின்றன. எனவே, பொதுவாக நோயாளியின் முறையான மருத்துவ வரலாறு தேவைப்படுகிறது. நிகழ்த்தப்படும். மற்ற நோயறிதல் சோதனைகள் பின்வருமாறு:
- 24 மணி நேர சிறுநீர் அல்லாத கார்டிசோல் (யூ.எப்.சி).
- நடு இரவு - உமிழ்நீர் கார்டிசோல்.
- குறைந்த-அளவிலான டெக்ஸாமெத்தசோன் ஒடுக்கம் சோதனை (எல்.தி.தி.எஸ்.டி).
- இரவு முழுவதும் டெக்ஸாமெத்தசோன் ஒடுக்கம் சோதனை (ஓ.என்.தி.எஸ்.டி).
- அண்ணீரக சுரப்பிகளின் சி.டி ஸ்கேன்.
குஷிங் சிண்ட்ரோம்க்கு இது காரணமாக இருக்கலாம் என்று தோன்றும் ஒரு அடிப்படை நிலையைக் கண்டறிய பயன்படுத்தும் சோதனைகள் பின்வருமாறு:
- கார்டிகோட்ரோபின்-வெளியீட்டு ஹார்மோன் சோதனை (சி.ஆர்.ஹெச்).
- உயர் அளவு டெக்ஸாமெத்தசோன் ஒடுக்கம் சோதனை (ஹெச்.தி.தி.எஸ்.டி).
- இருதரப்பு தாழ்ந்த பெட்ரோசல் சைனஸ் மாதிரிகள் (பி.ஐ.பி.எஸ்.எஸ்).
குஷிங்'ஸ் சிண்ட்ரோம்க்கான சிகிச்சை திட்டம் பின்வருமாறு:
- மருத்துவ சிகிச்சை: இந்த நோய்க்குறியின் அடிப்படை காரணத்தை பொறுத்து மருந்துகள் வழங்கப்படுகிறது.
- ஸ்டீராய்டு உற்பத்தியை தடுப்பதற்கு.
- குளுக்கோகார்டிகோயிட் ஏற்பி தடுப்பான்கள்.
- எ.சி.டி.ஹெச் வெளியீட்டை ஒழுங்குபடுத்துதல்.
- அட்ரொனலிட்டிக் மருந்துகள்.
- நீங்கள் கார்டிசோல் எடுத்துக் கொண்டிருப்பவராக இருந்தால், அறிகுறிகளைக் குறைக்க ஒரு குறைந்த அளவு டோஸ் பரிந்துரைக்கப்படுகிறது.
- அறுவை சிகிச்சை:
- கட்டி அல்லது அட்ரீனல் சுரப்பிகள் அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றப்படலாம்.
- பிட்யூட்டரி ரேடியோதெரபி.
சுய பாதுகாப்பு குறிப்புகள்:
- மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருத்துவ விதிமுறையை பின்பற்றவும்.
- மது உட்கொள்தல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை தவிர்க்கவும், இவை மேலும் பாதிப்பு விளைவிப்பதாலும் சிக்கல்களுக்கு வழிவகுப்பதாலும் இவற்றை தவிர்த்தல் நன்று.
- நன்கு சமச்சீரான உணவைப் பழக்கத்தை பின்தொடரவும் அல்லது உணவியல் வல்லுனரிடம் ஆலோசிக்கவும்.
- உயர் தாக்கம் தரும் பயிற்சிகள் அல்லது விளையாட்டுகளை செய்யும் போது எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து இருக்கலாம், எனவே வழக்கமான குறைந்த தீவிரம் கொண்ட பயிற்சிகள் மட்டும் செய்யவும்.
- மனஅழுத்தத்தை தவிர்க்கவும், இதனால் கார்டிசோலின் அதிக உற்பத்தி குறைக்கப்படும்.
மருத்துவரை தேவைப்படும்போது ஆலோசித்து, மேலே குறிப்பிட்டுள்ள நடவடிக்கைகள் சரியாக பின்பற்றப்பட்டால், குஷிங் சிண்ட்ரோமை சமாளிப்பது சாத்தியமே.