நீர்மத் திசுவழற்சி (சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்) என்றால் என்ன?
நீர்மத் திசுவழற்சி என்பது படிப்படியாக பல்வேறு உறுப்புகளில் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு மரபணு நோயாகும், முக்கியமாக நுரையீரலில் சளியின் தேக்கத்தினால் பாதிப்பை விளைவிக்கிறது. இதன் வெளிப்பாடு செரிமான தடத்திலும் இனப்பெருக்கக் குழாயிலும் கூட காணப்படுகிறது. இது உலகளவில் கிட்டத்தட்ட 70,000 பேரின் உயிருக்கு-ஆபத்து விளைவிக்க கூடிய நிலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் இனக் குழுக்களினிடையே, காகாசியர்களிடத்தில் பரவலாகக் காணப்படுகிறது. சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ் நோய்தாக்கமானது இந்தியாவில் 10,000 பிறந்த குழந்தைகளில் ஒருவருக்கு ஏற்படக்கூடியதாகும்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பெரும்பாலும் நீர்மத் திசுவழற்சியின் அறிகுறிகள் கைக்குழந்தை பருவத்திலிருந்தே ஏற்படுகிறது, அதனால் ஒவ்வொரு வருடமும் நுரையீரல் செயல்பாடு குறைந்து சுவாச நோய்களால் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட நபர்களுக்கு குழந்தை பருவத்திலிருந்தே அறிகுறிகள் உருவாகியிருக்கலாம் அல்லது அவர்களின் வாழ்க்கையின் பிற்பகுதியில் அறிகுறிகள் ஏற்பட்டிருக்கலாம், அறிகுறிகள் நோயின் தீவிரத்தன்மையைப் பொறுத்து வேறுபடுகின்றது. நீர்மத் திசுவழற்சியை குழந்தை பிறந்த முதல் மாதத்திலிருந்தே கண்டறிய முடியும், இன்னும் சொல்ல போனால் அறிகுறிகள் துவங்கவதற்கு முன்பே கூட கண்டறியமுடியும்.
அடிக்கடி சுவாசத்தில் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- கடுமையான இருமல் (உலர்ந்த அல்லது சளியுடன் கூடிய இருமல்).
- மூச்சு இழுப்பு.
- மீண்டும் மீண்டும் தோன்றும் சைனஸ் தோற்று.
- ஒவ்வாமைகள்.
டைஜஸ்டிவ் தடத்தில் ஏற்படும் அறிகுறிகள் பின்வருமாறு:
- அசௌகரியமான பெரிய, பிசுக்குள்ள குடல் இயக்கங்கள்.
- போதிய உணவு உட்கொள்ளும் போதும் அசாதாரணமான இடை இழப்பு.
- சரியில்லாத வளர்ச்சி.
- குடல் ஒழுங்கின்மை.
- தாகம் மற்றும் சிறுநீர் கழிக்கும் உணர்வு அடிக்கடி ஏற்படுதல் (மேலும் வாசிக்க: அடிக்கடி சிறுநீர் கழிப்பதன் காரணங்கள்).
இதன் முக்கிய காரணங்கள் யாவை?
சளி, வியர்வை, மற்றும் செரிமான சாறுகள் போன்ற சாதாரண உடல் சுரப்பிகளில் உருவாகும் திரவங்களில் நீர்மத் திசுவழற்சி பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் சளி கட்டி நுரையீரலில் தங்கிவிடுவதால் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படுகிறது. நீர்மத் திசுவழற்சி என்பது மரபணு குறைபாட்டினால் ஏற்படுகிறது, இது உடல் செல்களில் உள்ளே மற்றும் வெளியே என இயங்கும் உப்புசத்தின் செல்வாக்கை கொண்ட (சிஸ்டிக் ஃபைப்ரோஸ் டிரான்ஸ்மம்பிரன் கன்டக்டன்ஸ் ரெகுலேட்டர் [சி.எப்.டி.ஆர்]) புரதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. பெற்றோர்கள் இந்த மரபணுவின் கேரியர்களாக (நோய் கடத்தி) இருக்கும்பட்சத்தில் இந்த குறைபாடுள்ள மரபணு குழந்தைகளுக்கும் பரிமாற்றம் செய்யப்படுகிறது. பெற்றோர்களில் யாரேனும் ஒருவருக்கு மட்டும் இந்த மரபணு இருந்தால் குழந்தைக்கு நீர்மத் திசுவழற்சியின் அறிகுறிகள் வளர்ச்சியடைவதில்லை, ஆனால் அது ஒரு நோய் கடத்தியாக மாறலாம் மற்றும் அடுத்த தலைமுறைக்கும் இந்த குறைப்பாடுள்ள மரபணு பரவக்கூடும்.
ஆபத்து விளைவிக்கும் காரணிகள் பின்வருமாறு:
- மரபணு காரணி:
- சி.எப்.டி.ஆர் புரதத்தில் ஏற்படும் சேதத்தின் அளவை பொருத்தே மரபணு மாற்றங்கள் வகைப்படுத்தப்படுகின்றன.
- மரபணு மாற்றங்களில், வகை I, II மற்றும் III ஆகியவை மிகக் கடுமையானத் தாக்கத்தை ஏற்படுத்துகையில், வகை IV மற்றும் V லேசான தாக்கத்தை ஏற்படுத்துபவை.
- வாழ்க்கைமுறை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகள்:
- எடையை பராமரிப்பதற்கு அதிக கலோரிகள் தேவைப்படுகிறது, இதுவே சுமையாக மாறலாம்.
- புகைப்பிடிப்பது நுரையீரலின் செயல்பாட்டை மோசமடையச் செய்யும்.
- மதுப்பழக்கம் கல்லீரல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம்.
- வயது வரம்பு:
- வயது வரம்பினை பொருத்து அறிகுறிகள் தீவிரமடைகின்றன.
இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகைச்சையளிக்கும் முறைகள் யாவை?
இந்நாட்களில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்மத் திசுவழற்சியை ஆரம்பக் காலத்திலேயே கண்டறிய நோய்ப்பாதிப்பு ஆய்வு மற்றும் நோய் கண்டறிதல் முறை போன்ற வசதிகள் இருக்கிறது.
பின்வரும் சோதனைகள் செய்யப்படலாம்:
- இரத்த சோதனை: கணையத்தில் இருந்து நோய்த்தாக்குதலான டிரிப்சினோஜென் அல்லது ஐஆர்டி அளவுகளை சரிபார்த்தல்.
- மரபணு சோதனைகள்: இந்த சோதனைகள் நோயை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக செய்யப்படுகின்றன.
- வியர்வைப் பரிசோதனை: வியர்வையில் இருக்கும்(குழந்தைகளில்) உப்பின் அளவை சரிபார்த்தல்.
மீண்டும் கணைத்தில் ஏற்படும் அழற்சி, மூக்கில் உண்டாகும் சிறு கட்டிகள் (நாசல் பாலிப்ஸ்) மற்றும் நுரையீரல் தொற்று போன்ற நோய்களை கண்டறிய வயதில் பெரிய குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு, மரபணு மற்றும் வியர்வை ஆகிய இரு பரிசோதனைகளும் பரிந்துரைக்கப்படலாம்.
நீர்மத் திசுவழற்சிக்கான சிகிச்சை தேர்வுகள் பின்வருமாறு:
- மருந்துகள்:
- சளியை-கரைக்கும் மருந்துகள்.
- என்சைம்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கான மாத்திரைகள்.
- நுண்ணுயிர் எதிர்ப்பிகள்.
- அழற்சி எதிர்ப்பு மருந்துகள்.
- பிசியோதெரபி:
- சுவாசிக்கும் போது ஏற்படும் அடைப்புகளை சரிசெய்தல் தன்மையை அதிகரிக்கவும் சைனஸ் மேலாண்மையை மேம்படுத்தவும், உடற்பயிற்சி மற்றும் பிற்சேர்ப்புகள் தேவைப்படலாம்.
- நுரையீரல் மாற்றம்:
- மருந்துகள் பயனற்றுப் போகும் நிலையில், நுரையீரலை அறுவை சிகிச்சை மூலம் மாற்றிப்பொருத்துதலே சிறந்த சிகிச்சைக்கான தேர்வாகும்.
அதன் மரபுரிமையின் இயல்பினால், நீர்மத் திசுவழற்சி முற்றிலும் குணப்படுத்த முடியாதது. ஆகையால், ஆரம்பகாலத்திலேயே நோய்கண்டறிதல் மற்றும் சிகிச்சையளித்தலே இதற்கான சிறந்த வழியாகும் மற்றும் மேலும் வரவிருக்கும் அபாயமான சிக்கல்களைத் தவிர்க்கவும் இது உதவுகிறது.