நீரிழிவு டிஸ்லிபிடிமியா என்றால் என்ன?
டிஸ்லிபிடியாமியா என்பது கொழுப்புப்புரதத்தின் வளர்சிதைமாற்றத்தில் ஈடுபடும் ஒரு கோளாறு ஆகும். இந்த கோளாறு கொழுப்புப்புரதத்தில் அதிகப்படியான உற்பத்தி அல்லது குறைபாடினை விளைவிப்பதால், இரத்தத்தில் உள்ள கொலஸ்டிராலின் அளவுகள் அதிகரிக்கவோ அல்லது குறையவோ வழிவகுக்கிறது. நீரிழிவு நோயாளிகளே டிஸ்லிபிடியாமியா நோய்தாக்குவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர், அதாவது மாற்றப்பட்ட கொழுப்புப்புரதத்தின் அளவுகளை கொண்டிருப்பதால் அவர்கள் இந்நோயினால் ஏற்படும் ஆபத்துக்கு உள்ளாகிறார்கள்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
டிஸ்லிபிடியாமியா லேசாக இருக்கும் போது, இது எந்தவித அறிகுறிகளையும் ஏற்படுத்தாமலேயே இருக்கலாம். இருப்பினும், கடுமையான நிகழ்வுகளில் நீரிழிவு டிஸ்லிபிடிமியா பின்வரும் அறிகுறிகளை ஏற்படுத்தலாம்.
- அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி.
- நெஞ்சு வலி.
- சுவாசப் பிரச்சனைகள்.
- தசைகளில் வலி.
- குழப்பம்.
நீரிழிவு டிஸ்லிபிடிமியா நோயினால் தாக்கப்பட்ட ஒருவருக்கு, இதய நோய், பக்கவாதம் போன்ற வளரும் சிக்கல்கள் உண்டாவதற்கான அதிக ஆபத்தும் உள்ளது.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
வகை 2 நீரிழிவு நோயினை கொண்டவர்களுக்கு டிஸ்லிபிடிமியா வளர்வதற்கான ஆபத்து நிறையவே இருக்கிறது.
நீரிழிவு நோய் என்பதே ஒரு மருத்துவ நிலை, இது சாதாரண கொழுப்புப்புரதத்தின் அளவுகளில் குறுக்கிடுவதால் டிஸ்லிபிடிமியாவிற்கான இரண்டாவது காரணமாக இருப்பதோடு அவை மேலும் அதிகரிப்பதற்கான காரணியாகவும் இருக்கிறது. இன்சுலின் என்ற ஹார்மோன் செயல்பாட்டில் உள்ள குறைபாடு மற்றும் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அதிகப்படியான அளவுகள் ஆகியவையே நீரிழிவு நோயாளிகளிடத்தில் டிஸ்லிபிடிமியா ஏற்படுவதற்கான பிரதான காரணங்கள் ஆகும்.
உடல் பருமன் மற்றும் வாஸ்குலர் நோய்கள் போன்ற மருத்துவ நிலைகள் டிஸ்லிபிடிமியாவை விளைவிக்கக்கூடும். டிஸ்லிபிடிமியா ஏற்படுவதற்கான கூடுதல் காரணங்கள் பின்வருமாறு:
- கல்லீரல் நோய்.
- அதிகமான மது உட்கொள்தல்.
- செயலற்ற வாழ்க்கை முறை.
- அதிக அளவு கலோரி உடைய உணவுப் பொருட்கள் அடங்கிய உணவு திட்டம் (ஆரோக்கியமற்ற உணவுபழக்கம்).
- பொருள்களை தவறாக பயன்படுத்துதல்.
இதன் கண்டறியும் முறைகள் மற்றும் சிகிச்சை முறைகள் யாவை?
இரத்த பரிசோதனை மற்றும் சிறுநீர் பரிசோதனை ஆகியவை டிஸ்லிபிடிமியா கண்டறிதலுக்காக மருத்துவரால் மேற்கொள்ளப்படும் சோதனைகள்.
நீரிழிவு நோய் கொண்டவர்கள், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பது, இதயக் குழலிய நோய்கள் போன்ற கோளாறுகள் ஏற்படாமல் தடுக்க மிக அவசியமானதாகும். எனவே, மருத்துவர் உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையில் மாற்றங்களை செய்யும்படி மட்டும் பரிந்துரைப்பதில்லை அவற்றோடு சேர்த்து முறையான பரிசோதனைகளை அடிக்கடி மேற்கொள்ளும்படி வலியுறுத்துவார்.
ஸ்டேடின்கள் என அழைக்கப்படும் மருந்துகள் மற்றும் ஃவைபிரினோஜன் போன்ற மருந்துகள், டிஸ்லிபிடிமியாவின் ஆபத்தை குறைக்க பரிந்துரைக்கப்படுகின்றன.