மூச்சுவிடுதல் சிரமம் என்றால் என்ன?
ஒருவர் தனது உடல் தேவைகளுக்கு தேவையான ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்ளும்போது கஷ்டமாகவோ அல்லது அசௌகரியமாகவோ உணர்ந்தால், அந்த நபருக்கு மூச்சுவிடுதலில் சிரமம் அல்லது மூச்சுத் திணறல் இருக்கிறது என்று பொருள். இது மூக்கடைப்பின் காரணத்தினால் லேசாகவும் அல்லது நிமோனியா போன்ற தீவிரமான நிலையின் காரணத்தினால் கடுமையாகவும் ஏற்படலாம்.
இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
மூச்சுவிடுதல் சிரமத்தை சார்ந்த கவலைக்கிடமான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் பின்வருமாறு:
- நேராக படுக்கும் போது மூச்சு விட சிரமமாகவோ அல்லது 30 நிமிடத்திற்கும் மேலாக மூச்சு திணறல் நீடித்தலோ அல்லது உள்ளிழுப்புகளை / இன்ஹேலர்களைப் பயன்படுத்தும்போதிலும், முன்னிருக்கும் அறிகுறிகள் மேலும் மோசமடைதல்.
- நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும் போதோ அல்லது வெளியிடும் போதோ விசில் சத்தம் உண்டாகுதல் (மூச்சிரைப்பு).
- அதிக காய்ச்சலுடன் கூடிய, குளிர் மற்றும் இருமல்.
- உதடுகள் அல்லது விரல் நுனிகள் நீல (நீல நிறமாற்றம்) நிறமாக மாறுதல்.
- சுவாசிக்கும் போது உயர்ந்த-தொனியில் ஏற்படும் சத்தம், இந்த சத்தம் ஸ்ட்ரிடோர் என அழைக்கப்படுகிறது.
- மயக்கமடைதல்.
- உங்கள் பாதங்களும், கணுக்கால்களும் வீக்கமடைதல்.
முக்கிய காரணங்கள் என்ன?
மூச்சுத்திணறல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- பதற்றம் மற்றும் பயத்தினால் ஏற்படும் தாக்குதல்.
- டிராக்கியா மற்றும் மூச்சுக்குழாய் உட்பட சுவாச வழி அமைப்பில் இருக்கும் சில பாகங்களில் ஏற்படும் பிரச்சனைகள்.
- ஒவ்வாமைகள்.
- இரத்த சோகை.
- குறைவான உடல்தகுதியின் நிலை.
- நிமோனியா, ஆஸ்துமா etc போன்ற நுரையீரல் நிலைகள்.
- ஒருவரின், இதயத்துக்கு தேவையான ஆஃசிஜேனை அனுப்ப போதிய இரத்தத்தை பம்ப் செய்ய முடியாத பொழுது மாரடைப்பு, இதயம் செயலிழப்பு போன்றவைகள் ஏற்படுகிறது.
இதை கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
ஆரம்பக்கட்டத்தில், உங்கள் மருத்துவர் மற்ற அறிகுறிகளோடு உங்கள் நிலை குறித்த விரிவான மருத்துவ அறிக்கையை எடுப்பார். அதன்பிறகு உடல் பரிசோதனை செய்யப்படும். மருத்துவ வரலாற்றை பொறுத்தும், தனிநபரின் வயது, மற்றும் பரிசோதனை முடிவுகளை பொறுத்தும், மருத்துவர் கீழ்கண்ட சோதனைகளுக்கான ஆலோசனையை வழங்குவார்:
- இரத்தத்தில் சர்க்கரை-ஆஃசிஜென் அளவை பரிசோதிக்கும் இரத்த பரிசோதனைகள்.
- ஒவ்வாமை சோதனைகள்.
- மார்பு எக்ஸ்-கதிர்.
- தொண்டை பஞ்சுருட்டு/ஸ்வாப் (உங்கள் தொண்டையின் உட்பாகத்திலிருந்து ஒரு வகைப்படிவம் சேகரிக்கப்படுகிறது மற்றும் எடுக்கப்பட்ட அந்த மாதிரியைக் கொண்டு நோய்த் தொற்று சோதனை செய்யப்படுகிறது).
- உடல் ப்ளைத்சமோகிராபி.
- விரவுதல் /டிஃப்யூஷன் பரிசோதனை.
- நுரையீரல் செயல்பாடு சோதனைகள்.
அடிப்படை காரணத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக சிகிச்சை எடுப்பது அவசியம். இதில் நுண்ணுயிர் எதிர்ப்பிகள், சிறுநீரிறக்கிகள், அழற்சி எதிர்ப்பு மருந்துகள், ஸ்டெராய்டுகள் போன்றவை.
அடங்கும்.மூச்சுவிடுதலில் ஏற்படும் சிரமத்துக்கான கூடுதலான சிகிச்சை பின்வருவனவற்றை உட்கொண்டது:
- உதடு-மூடிய நிலையில் மூச்சு விடுதல்:
இந்த நுட்பத்தில், ஒருவர் வாய் அல்லது மூக்கின் வழியாக மூச்சு விடுவதற்கு அறிவுறுத்தப்படுகிறார், உதடுகளை மூச்சு விட ஏதுவாக வைத்து அதாவது விசில் அடிப்போது போன்ற நிலையில் வைத்து, அதைத்தொடர்ந்து நுரையீரலில் உள்ள அனைத்து காற்றையும் வெளியேற்றுவதற்காக இழுத்து மூச்சை வெளியில் விடுவேண்டும்.
- நிலைப்படுத்தல்:
இந்த நுட்பம் பொதுவாக மூச்சு திணறல் ஏற்படும் நிலையில் பயன்படுத்தப்படுகிறது, தசைகள் தளர்வாக இருக்கும் பொழுது சுவாசித்தலை சுலபமாக்குகிறது. இது வழக்கமாக மாடி படிகள் ஏறும் போது பயன்படுத்தப்படுகிறது. இந்த நுட்பத்தில், பின்வருபவை செய்யப்படுகிறது:
சுவற்றில் சாய்ந்து ஓய்வு எடுத்துக் கொண்ட பிறகு, முன்னோக்கி குணிந்து உங்கள் கைகளை உங்கள் தொடையில் வைத்து உங்களை நிலைப்படுத்த வேண்டும், அது உங்கள் மார்பு மற்றும் தோள்பட்டை தளர்வாக உதவுகிறது. எனவே, அவைகள் தளர்த்தப் பட்டபின், நீங்கள் சுவாசிப்பதற்கு உதவுகிறது. உதடு-மூடிய நிலை சுவாசத்தை பயன்படுத்தலாம்.
- வேகமான சுவாசம்:
இந்த நுட்பம் நீங்கள் நடக்கும் போதோ அல்லது அதிக எடை குறைவான பொருட்களை தூக்கும் போதோ பயன்படுத்தப்படுகிறது, இது மூச்சுத் திணறலை தடுக்கவோ அல்லது குறைக்கவோ உதவுகிறது.
- நடைபயிற்சி: ஒரு நபர் நடைபயிற்சி செய்யும் போது நின்று மூச்சை நன்றாக உள்ளிழுத்து, மேலும் சிறிது தூரம் நடந்த பின் மூச்சை வெளியில் விட வேண்டும். அதன் பிறகு சிறிது நேரம் ஓய்வெடுத்தவிட்டு இதேப்போல் மீண்டும் தொடரவேண்டும்.
- தூக்குதல்: ஒரு நபர் ஏதேனும் பொருட்களை கொண்டு செல்லும் போது அவன்/அவள் அந்த பொருட்களை அவர்களது உடலோடு ஒட்டியிருக்கும் படி வைத்து நடக்கவேண்டும், இது சக்தியை மிச்சப்படுத்துகிறது அதோடு பொருட்களை தூக்குவதற்கு முன் ஆழ்ந்து சுவாசித்தல் வேண்டும்.
- உணர்திறன் குறைப்பு.
இந்த நுட்பம் எந்த பயமுமின்றி மூச்சுதிணறலை எதிர்கொள்ள உதவுகிறது. இதில் அடங்கியவை நிலைப்படுத்துதல்:
உதடு-மூடிய நிலை சுவாசம், மற்றும் வேகமான சுவாசம் ஆகியவகைகளை தினமும் பயிற்சி செய்வதன் மூலம் உங்களது நம்பிக்கையை அதிகரிக்க முடியும். உங்களைச் சுற்றியுள்ள மக்களிடம் உங்கள் நிலையைப் பற்றி தெரிவிக்க வேண்டும்.