சிறுநீர் தேக்கம் என்றால் என்ன?
சிறுநீர் தேக்கம் என்பது, ஒரு நபரினால் திருப்திகரமாக சிறுநீர் கழிக்க இயலாத நிலையை குறிக்கிறது. ஒருவருக்கு சிறுநீர் கழிக்கவேண்டிய உந்துதல் உணர்வு இருக்கலாம், அதோடு அவர் சிறுநீர்ப்பை நிரம்பி இருப்பதையும் அறிந்திருக்கலாம் ஆனால் அவர்களால் முழுமையாக சிறுநீர் கழிக்க முடியாது.
கடுமையான சிறுநீர் தேக்கம் திடீரென்று ஏற்படுவதோடு அது வேதனைக்குறிய அறிகுறிகளையும் ஏற்படுத்தும் எனவே இத்தகைய நிலைக்கு உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது. இருப்பினும், நீண்ட கால சிறுநீர் தேக்கம் உருவாக பல ஆண்டுகளுக்கு மேலாவதோடு இது வலியுடைய அறிகுறிகளை தராமலுமிருக்கலாம், அதே நேரத்தில் ஒருவர் படிப்படியாக சிறுநீர்ப்பையில் இருக்கும் சிறுநீரை முற்றிலும் கழிக்க முடியாத நிலையை எதிர்கொள்ள நேரிடுகிறது.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
கடுமையான சிறுநீர் தேக்கத்தின் அறிகுறிகள் பின்வருமாறு:
- சிறுநீர் கழித்தலின் இயலாமை.
- சிறுநீரை உடனடியாக வெளியேற்றியாக வேண்டிய உந்துதல் உணர்வு.
- அடிவயிற்றில் ஏற்படும் வலி.
- அடிவயிறு உப்பி இருத்தல்.
நீண்டகால சிறுநீர் தேக்கத்தின் அறிகுறிகள் பின்வருமாறு:
- சிறுநீரை வெளியேற்றுவதில் ஏற்படும் சிரமம்.
- பலவீனமான சிறுநீரக பாதை.
- சிறுநீர் கழித்த பிறகும் கூட சிறுநீர் கழிப்பதற்கான உந்துதல் உணர்வு.
- சிறுநீர் கழித்த பிறகு அடிவயிற்றில் லேசான அசௌகரியம்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
சிறுநீர் தேக்கத்திற்கு பல காரணங்கள் உண்டு மற்றும் இதன் அடிப்படை காரணங்கள் மிகப்பெரிய அளவில் பரந்து இருக்கின்றது அவை பின்வருமாறு:
- இடுப்பு அல்லது பிறப்புறுப்பு பகுதியில் உண்டாகும் காயம்.
- நரம்பு பிரச்சனைகள்.
- பாதிக்கப்பட்ட பகுதியில் சமீபத்திய அறுவை சிகிச்சை.
- மருத்துவ நிலைகள்,அதாவது நீரிழிவு அல்லது பல ஸ்களீரோசிஸ்.
- சிறுநீர்ப்பை தசைகளை பலவீனப்படுத்துவது.
- மலச்சிக்கல்.
- குறிப்பிட்ட சில மருந்துகள்.
- சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய் தொற்று.
- சிறுநீர் வடிக்குழாயில் ஏற்படும் தடை.
இதை கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
கடுமையான அல்லது நீண்டநாள் சிறுநீரகத் தேக்கத்தை கண்டறிய, மருத்துவர் சில பரிசோதனைகளை செய்யலாம் அவை:
- உடல் பரிசோதனை.
- கிரிஸ்டோஸ்கோபி (சிறுநீர்ப்பையின் உட்புறத்தை ஆய்வதற்கான கருவி).
- சிடி ஸ்கேன்கள்.
- உரோடினாமிக் சோதனைகள் (சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரக வடிக்குழாய் சிறுநீரகத்தை எவ்வளவு நன்றாக சேமித்து வெளியேற்றுகிறது என்பதை தெரியப்படுத்துவதற்கான சோதனைகள்).
- எலெக்ட்ரோயோகிராஃபி (பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நரம்பு சம்பந்தமான நடவடிக்கைகளை அளவிடவும் மற்றும் மதிப்பிடவும் உபயோகப்படுத்துவது).
மருத்துவர்கள் பின்வரும் முறைகளின் மூலம் சிறுநீரக தேக்க சிகிச்சைகளை கையாளலாம்:
- சிறுநீர் வடிக்குழாயிலிருந்து சிறுநீர் நீக்கம் செய்தல் (சிறுநீர் வடிகுழாயை அகலப்படுத்துவதன் மூலம் சிறுநீர் நீக்கத்தை துரிதப்படுத்துவது).
- சிறுநீர்க வடிகுழாயில் ஸ்டெண்ட் வைத்தல் (செயற்கை குழாய் செருகுவதன் மூலம் சிறுநீர் குழாயை அகலப்படுத்துதல்).
- புரோஸ்டேட் மருந்துகள் (புரோஸ்டேட் வளர்ச்சியை தடுக்க உட்கொள்ளும் மருந்துகள் சிறுநீர் தேக்கத்தின் அறிகுறிகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது).
- சிறுநீர்ப்பை வடிகால் (ஒரு குழாயைப் பயன்படுத்தி சிறுநீர்ப்பையை முற்றிலும் காலியாக்குதல் அதாவது முழு சிறுநீரையும் வெளியேற்றுதல்).
- அறுவை சிகிச்சை.