செரிமான கோளாறுகள் - Digestive Disorders in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

December 14, 2018

October 28, 2020

செரிமான கோளாறுகள்
செரிமான கோளாறுகள்

செரிமான கோளாறுகள் என்னென்ன?

உறுப்புகளை உள்ளடக்கிய செரிமான தடத்தோடு தொடர்புடைய நோய்கள் அதாவது வயிறு, சிறு குடல், பெருங்குடல் அதே போல கல்லீரல், பித்தப்பை, பித்தநீர் பாதை மற்றும் கணையம் போன்றவைகள் செரிமான கோளாறுகள் அல்லது இரைப்பைக் குடல் கோளாறுகள்/காஸ்ட்ரோடெஸ்டினல் நோய்கள் என அழைக்கப்படுகின்றன. இந்த கோளாறுகள் பரவலான பல நோய்களின் வரம்பினை சூழ்ந்திருகின்றது அதாவது கணையம், மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, கிரோன்'ஸ் நோய், எரிச்சலுடைய குடல் நோய்க்குறி (ஐபிஎஸ்), நெஞ்செரிச்சல், பித்தநீர்க்கட்டி, பெருங்குடல் அழற்சி/கோலிடிஸ், புண்கள், குடலிறக்கம் என பட்டியல் மேலும் நீளுகின்றன.

இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?

சில பொதுவான அறிகுறிகள் முழுமையாக செரிமான கோளாறுகளுக்கான எச்சரிக்கை அறிகுறிகளாகவே இருக்கின்றன:

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

செரிமான கோளாறுகள் பின் வருபவற்றில் ஒன்று அல்லது பல காரணங்களினால் இருக்கலாம்:

பொதுவான காரணங்கள்:

 • நுண்ணுயிர் தொற்று.
 • ஜிஐடி யின் அழற்சி.
 • செரிமான என்ஸைம்களின் குறைபாடு.
 • குடலிற்கு செல்லும் இரத்தஓட்டம் குறைவாக இருப்பது.
 • பித்தநீர்க்கட்டி உருவாக்கம்.
 • அழற்சி எதிர்ப்பு மருந்துகளை உட்கொள்வதால் நேரும் பக்க விளைவுகள்.
 • மனஅழுத்தம்.
 • புகை பிடித்தல்.
 • மது அருந்துதல்.
 • அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்ளல்.
 • காரமான உணவு.
 • மரபணு காரணங்கள்:  கணையம், கல்லீரல் நோய்கள் மற்றும் கிரோன்'ஸ்  நோய் போன்ற நோய்கள் ஏற்படுவதற்கு சில மரபணுக்களின் வெளிப்பாடேக் காரணமாக இருக்கலாம்.
 • அறுவைசிகிச்சைக்குப் பின் ஏற்படும் காரணங்கள்: பித்தநீர்க்கட்டியை அகற்றுதல் அல்லது குடலில் ஒரு பகுதியைச் நீக்குதல் உள்ளிட்ட அறுவைச் சிகிச்சைகளும் செரிமான நோய்களுக்கு வழிவகுக்கலாம்.
 • நோய்எதிர்ப்பு அழற்சி மற்றும் நீண்டகால நோய்களின் இருப்பு: ச்ஜோரென்ஸ் நோய்குறி, முடக்கு வாதம் மற்றும் சிஸ்டெடிக் லூபஸ் எரிதமெட்டோசஸ் (எஸ் எல் இ) போன்ற நோய்கள் செரிமான கோளாறுகளுக்கு வழிவகுக்கும். கல்லீரல் புற்று நோய், பெருங்குடல் மற்றும் கணையம் போன்ற நோய்கள் செரிமானத்தை பாதிக்கலாம்.
 • வயது: வயது முதிர்தல் செரிமான அமைப்பின் பலவீனத்திற்கு வழிவகுக்கிறது.

இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?

செரிமான கோளாறுகள் செரிமான அமைப்பில் இருக்கும் ஒரு உறுப்பையோ அல்லது பல உறுப்புகளையோ பாதிக்கலாம். மருத்துவ வரலாறு, உடல் பரிசோதனை மற்றும் ஆய்வக சோதனைகள் ஆகிய மூன்றும் இந்த நோயை கண்டறிவதற்கான தூண்கள்.

 • மருத்துவ அறிக்கை: உங்கள் உணவு பழக்கவழக்கங்கள், வாழ்க்கை முறை மற்றும் குடல் பழக்கவழக்கங்கள் மற்றும் உளவியல் மதிப்பீடு ஆகியவற்றை அறிந்துகொள்வதனால் மேலும் செய்யவேண்டிய பரிசோதனைகளை தீர்மானிக்க உங்கள் மருத்துவருக்கு உதவியாயிருக்கும்.
 • உடல் சார்ந்த பரிசோதனை: கை மற்றும் ஸ்டெதாஸ்கோப் கொண்டு வயிற்றை பரிசோதிப்பதன் மூலம் அடிவயிற்றில் உள்ள அசாதாரணங்களை கண்டறிய இயலும்.
 • ஆய்வக சோதனைகள்:
  • மலப் பரிசோதனை.
  • உடற்குழாய் உள்நோக்கல்/எண்டோஸ்கோபி.
  • ஜிஐடி யை கொண்டு மூச்சுக்குழலுக்குள் குழாய் செருகுதல்.
  • லேப்ரோஸ்கோபிக் பரிசோதனை.
  • வயிற்று திரவ சோதனை.
  • ஆசிட் ரிஃப்ளக்ஸ் சோதனைகள்.
  • ஜிஐடி யின் சாதாரண மற்றும் பேரியம் எக்ஸ்- கதிர்கள் மற்றும் எம்ஆர்ஐ மற்றும் அடிவயிற்றின் சிடி ஸ்கேன் போன்ற இமேஜிங் நுட்பங்கள்.
  • வயிற்றின் அல்ட்ராசவுண்ட் இமேஜிங்.

இதற்கான சிகிச்சை நோய் கண்டறிதலை சார்ந்தே இருக்கும். பின்வரும் உத்திகளை கொண்டு சிகிச்சையை வெற்றிகரமாக்கலாம்:

 • உங்கள் தூண்டுதல் காரணிகளை அடையாளம் காணவும்: உங்கள் செரிமான பிரச்சனையை மோசமாக்கும் சில உணவுகள் மற்றும் பழக்கவழக்கங்களில் கவனம் செலுத்தலாம். உங்கள் மருத்துவர் மற்றும் உணவியல் நிபுணரின் சரியான ஆலோசனையுடன், நீங்கள் இந்த பிரச்சனையிலிருந்து வெளிவர முடியும்.
 • மருந்துகள்: வயிற்றுபோக்குக்கான எதிர்ப்பு மருந்து, குமட்டலுக்கான எதிர்ப்பு மருந்து, வாந்திக்கான எதிர்ப்பு மருந்து மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் ஆகியவைகளை உங்களது அறிகுறிகளை பொறுத்து மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
 • அறுவைசிகிச்சை: பித்தநீர்கட்டி, குடல் வால் அழற்சி மற்றும் குடலிறக்கம் போன்ற சீர்குலைவுகளுக்கு அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படலாம்.
 • எண்டோஸ்கோபி: இரைப்பை இரத்தக்கசிவுக்கு ஹீமோஸ்ட்டிக் மருந்துகள் எண்டோஸ்கோபின் வழியாக வழங்கப்படலாம்.

இந்த சிகிச்சைகள் செரிமான கோளாறுகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்காக பயன்படுகின்றன என்றாலும், சில எளிமையான வாழ்க்கை முறை மாற்றங்கள் தடுப்பு நடவடிக்கைகளாக செயல்படலாம்:

 • உடற்பயிற்சி.
 • யோகா மற்றும் தியானம்.
 • ஆரோக்கியமான உணவு பழக்கம், நிலையான உணவு வழக்கம்.
 • உங்கள் குடல் ஃபுளோராவை நிரப்பும் புரோபயாடிக்குகளின் பயன்பாடு.

செரிமான கோளாறுகளை தினசரி பலவழக்கம் மற்றும் உணவு முறைகளில் ஏற்படுத்தும் சிறிய மாற்றத்தினால் தவிர்க்கலாம். மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சையின் தலையீடால் இந்த கோளாறுகளை முழுமையாக குணப்படுத்தலாம். மாற்று தெரபிகளை மேற்கொள்ளும் போது எப்பொழுதுமே உங்களது உடலியல் மருத்துவரிடம் ஆலோசனை செய்வது சாலச்சிறந்தது.மேற்கோள்கள்

 1. Craig OF, Quigley EM. Current and emerging therapies for the management of functional gastrointestinal disorders. Ther Adv Chronic Dis. 2011 Mar;2(2):87-99. PMID: 23251744
 2. National Institute of Diabetes and Digestive and Kidney Diseases [internet]: US Department of Health and Human Services; Digestive Diseases
 3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Digestive Diseases
 4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Digestive diseases
 5. Center for Disease Control and Prevention [internet], Atlanta (GA): US Department of Health and Human Services; Digestive Diseases

செரிமான கோளாறுகள் க்கான மருந்துகள்

Medicines listed below are available for செரிமான கோளாறுகள். Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.