மருந்து மூலம் ஏற்படும் மைய நரம்பு மண்டலத்தின் மனச்சோர்வு - Drug Induced CNS Depression in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 01, 2018

March 06, 2020

மருந்து மூலம் ஏற்படும் மைய நரம்பு மண்டலத்தின் மனச்சோர்வு
மருந்து மூலம் ஏற்படும் மைய நரம்பு மண்டலத்தின் மனச்சோர்வு

மருந்து மூலம் ஏற்படும் மைய நரம்பு மண்டலத்தின் மனச்சோர்வு என்றால் என்ன?

மைய நரம்பு மண்டலத்தின் மனச்சோர்வு (சிஎன்எஸ்) என்பது மூளை மற்றும் முதுகுத் தண்டு மூலமாக நிகழ்த்தப்படும் உடலின் நரம்பியல் செயல்பாடுகளை (இது சிஎன்எஸ்யை உண்டாக்குகிறது) மெதுவாக குறைக்கிறது. சிஎன்எஸ் மனச்சோர்வு சிஎன்எஸ் மூளைத்திறன்குறைப்பு மருந்து என்று அறியப்படும் மருந்துகளால் தோன்றுகிறது, இந்த வகை மருந்துகள் மயக்க மருந்து, தூக்க மருந்து மற்றும் மூளையின் செயல்பாட்டு திறனை குறைக்கக்கூடிய பொருட்கள் ஆகியவற்றை உள்ளடக்குகிறது.

நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?

சிஎன்எஸ் மனச்சோர்வின் அறிகுறிகள் பின்வருமாறு:

  • ஒருங்கிணைப்புத் திறன் இல்லாமை.
  • தெளிவற்ற பேச்சு மற்றும் பேசுவதில் சிரமம்.
  • எண்ணங்களை வெளிப்படுத்துவதில் சிரமம்.
  • அயர்வு.
  • சோம்பல்.
  • லேசான குழப்பம்.
  • சுவாசிப்பதில் சிரமம்.
  • இதய துடிப்பின் வேகம் குறைதல் (இது கடுமையான மனச்சோர்வு ஏற்படும்போது நிகழ்கிறது).
  • முடிவெடுக்க இயலாமை.
  • மற்றவர்களின் அறிவுறுத்தல்கள் அல்லது வார்த்தைகளை புரிந்துகொள்வதில் பிரச்சனை.
  • தேவைப்படும் போது பதில் சொல்லாமல் இருப்பது.
  • நடத்தை பிரச்சினைகள்.
  • உரையாடலைத் தவிர்ப்பது.

கடுமையான சிஎன்எஸ் மனச்சோர்வு ஏற்பட்டால், ஒருவர் கோமா நிலைக்குத் தள்ளப்படலாம். தீவிர நோய் நிலைகளில், சிஎன்எஸ் மனச்சோர்வு உயிரிழப்பை உண்டாக்கலாம்.

நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?

மருந்துகள் சிஎன்எஸ் மனச்சோர்வுக்கு நன்கு அறியப்பட்ட காரணம் ஆகும். இந்த மருந்துகள் நரம்பியத்தாண்டுவிப்பிகள் (மூளையில் உள்ள இரசாயன கலவைகள்) மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றன, இதனால் மூளையின் செயல்பாடு குறைந்துவிடுகின்றது. சிஎன்எஸ் மனச்சோர்வுக்கு வழிவகுக்கும் மிகவும் பொதுவான சிஎன்எஸ் மூளைத்திறன்குறைப்பு மருந்துகள் பின்வருமாறு:

  • பார்பிச்சுரிக் அமில உப்புக்கள் (இந்த மருந்துகள் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் அதிக பதட்டம் அல்லது வலிப்பு வலிப்புத்தாக்க கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க மருத்துவரால் பரிந்துரைக்கப்படுகிறது).
  • தூக்க மருந்துகள் (பென்சொடயசெபின் அல்லாத தூக்க மருந்துகள் தூக்கக் கோளாறுகள் அல்லது தூங்குவதில் சிரமங்களைக் கொண்ட தனிநபர்களுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன, அவை சோர்வினை குறைத்து குறைவான பக்க விளைவுகளைக் கொண்டிருக்கின்றன).
  • பென்சொடயசெபின் (பென்சொடயசெபின் கொண்ட மருந்துகள் கவலை, பதற்றம், தீவிர மன அழுத்த விளைவுகள் மனக்குழப்பத்தால் ‎ஏற்படும் சீர்குலைவு போன்றவற்றிற்கு சிகிச்சையளிக்க பரிந்துரைக்கப்படுகின்றன.அது மூளையின் செயல்பாடுகளை அமைதிப்படுத்துகின்றன.இருப்பினும், இவை மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படுவதில்லை, ஏனெனில் இதில் ஆபத்துகள் நிறைந்திருப்பதாலும் மற்றும் அதற்கு அடிமையாக வாய்ப்புள்ளதாலும் இது பயன்படுத்தப்படுவதில்லை).

இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?

இந்த மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டால், செயல்பாட்டுத்திறனில் குறுக்கிடுகின்றன கவலை மற்றும் தூக்கமின்மை போன்ற தீவிர பிரச்சனைகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவே ஆகும். சிஎன்எஸ் மனச்சோர்வு பெரும்பாலும் அறிகுறிகளின் விளக்கத்தை பொறுத்து மருத்துவ ரீதியாக கண்டறியப்படுகிறது.

சில நிலைமைகளில், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளில் சிறிய அளவு கொடுக்கப்பட்டு, அதன் பதில் விகிதம் மற்றும் செறிவு மதிப்பீட்டின் அடிப்படையில் மருத்துவர் சிகிச்சை செய்யலாம். சிஎன்எஸ் மனச்சோர்வு நோயைக் கண்டறிவதற்கு இரத்த பரிசோதனைகள் மற்றும் சிடி ஸ்கேன்கள் எடுப்பது கூட சிறந்தவையாகும்.

அறிகுறிகளின் தீவிரத்தின் அடிப்படையில், மருத்துவர்கள் மெதுவாக பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் அளவை குறைக்கலாம் அல்லது முற்றிலும் மருந்தை நிறுத்தலாம். இந்த மருந்தினை ஒருவர் ஏன் உபயோகித்தார் என்பதன் அடிப்படையிலேயே இதன் சிகிச்சை முறையும் சார்ந்துள்ளது.

மேலும், மது நுகர்வு தவிர்க்கப்பட வேண்டும், ஏனென்றால் இது தற்காலிக உற்சாகத்தை (மகிழ்ச்சியின் நிலை) தூண்டலாம், ஆனால் இறுதியில் மைய நரம்பு மண்டலத்தின் செயல்திறன் வேகத்தை குறைக்க வழிவகுக்கிறது.



மேற்கோள்கள்

  1. National institute of drug abuse. What classes of prescription drugs are commonly misused?. National Institute of health. [internet].
  2. Lane RJ, Routledge PA. Drug-induced neurological disorders. Drugs. 1983 Aug;26(2):124-47. PMID: 6349966
  3. National Cancer Institute [Internet]. Bethesda (MD): U.S. Department of Health and Human Services; NCI Dictionary of Cancer Terms
  4. National institute of drug abuse. What are prescription CNS depressants?. National Institute of health. [internet].
  5. U.S food and drug administration. Drug Safety Communications. US. [internet].