எரிதிமா மல்டிஃபார்ம் - Erythema Multiforme in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

December 01, 2018

March 06, 2020

எரிதிமா மல்டிஃபார்ம்
எரிதிமா மல்டிஃபார்ம்

எரிதிமா மல்டிஃபார்ம் என்றால் என்ன?

எரிதிமா மல்டிஃபார்ம் என்பது நோய் தொற்றுகள் மற்றும் மருந்துகளால் ஏற்படும் ஒரு வகையான அதிக உணர்திறன் கோளாறு ஆகும்.இது சருமத்தில் ஏற்படும்  வெடிப்புகளால் தோன்றுகிறது.எரிதிமா மல்டிஃபார்ம் பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களை பாதிக்கிறது.மேலும் இது பெண்களை விட ஆண்களிடம் பொதுவாக காணப்படுகிறது.இந்தியாவில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வின் படி, இந்த எரிதிமா மல்டிஃபார்ம் நோய்த்தாக்கத்தினால ஏற்படும் தோல் புண்களின் சதவீதம் மட்டும்  25%-30% என கண்டறியப்பட்டிருக்கிறது.

இதன் முக்கிய அறிகுறிகள் என்ன?

இரண்டு வடிவங்களில் எரிதிமா மல்டிஃபார்ம் ஏற்படுகிறது:

  • ஒரு வகை மிதமான பாதிப்புகள் ஏற்படுத்தும் மற்றும் முக்கியமாக சருமம்  மற்றும் வாய்ப்புண்களை ஏற்படுத்தக்கூடியது.
  • மற்ற வகை அரிதான மற்றும் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது.இது தோல் மற்றும் வாய் தவிர உடலின் மற்ற பகுதிகளை கடுமையாக பாதிக்கிறது.

அறிகுறிகள் பின்வருமாறு:

இந்த நிலை பொதுவாக 2-4 வாரங்களில் குணமாகும், ஆனால் இது மீண்டும் திரும்ப வரலாம்.இந்த அறிகுறிகள் முதல் முறை வந்த பிறகு ஆண்டுகளுக்கு 2-3 முறை என பல ஆண்டுகள் வரை நீடிக்கலாம்.

இதன் முக்கிய காரணங்கள் என்ன?

இது எதனால் ஏற்படுகிறது என்று இன்னும் தெளிவாக கண்டறியப்படவில்லை,ஆனால் இது தோன்றுவதற்கான முக்கிய காரணிகளாக, ஹெர்பெஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் (ஹெச்.எஸ்.வி) 1 மற்றும் 2 வகைகள்  மைகோப்ளாஸ்மா நிமோனியா ஆகியவை ஆகும். இந்நோய்க்கான காரணங்களாக  50% வலிப்புநோய்க்கு தரப்படும் மருந்துகள், நுண்ணுயிரிக்கொல்லி வகை மருந்துகளாலும் மற்றும் கீல்வாத எதிர்ப்பு மருந்துகள், வலி ​​நிவாரண மருந்துகள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளால் ஏற்படுகிறது என்பது கண்டறியபட்டிருக்கிறது.சில நோயாளிகளுக்கு, இந்த நிலை மரபுவழியாக தோன்றியதாக இருக்கலாம்.

இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?

எரிதிமா மல்டிஃபார்ம் பெரும்பாலும் மருத்துவ ரீதியாக கண்டறியப்படுகின்றது.நோயின் வகை, அளவு மற்றும் பாதிக்கப்பட்டுள்ள சருமத்தின் ஏற்பட்டுள்ள நிறம் ஆகியவற்றை பகுப்பாய்வு செய்வதன் மூலம் டாக்டர்  நோயின் நிலையை கண்டறிவார்.சரும திசுக்களைப் பரிசோதித்தல் மற்ற நிலைகளை பற்றி அறிந்து கொள்ளவும் செய்யப்படலாம், அதனால் இது எரிதிமா மல்டிஃபார்ம் பிரச்சனைக்கு  மட்டும் பிரத்தேயகமாக எடுக்கப்படுவதில்லை.ஹெச்.எஸ்.வி தொற்றை  அறிந்துகொள்ள ஆய்வக சோதனைகள் செய்யப்பட வேண்டும்.வேறுபட்ட நோயறிதல்களில் தோல் தடிப்புகள், படை நோய், வைரல் தடிப்புக்காய்ச்சல்  மற்றும் பிற வகையான மனச்சிக்கல் குறைபாடுகள் ஆகியவை அடங்கும்.

இந்த நிலையை சரிசெய்வதற்கான முதல் படியாக சந்தேகத்திற்குரிய தொற்றின்   காரணத்திற்கு சிகிச்சை அளிக்கப்படுவது அல்லது நோயுண்டாக்கும் மருந்தை உட்கொள்வதை நிறுத்த வேண்டும்.மிதமான பாதிப்புகள் ஏற்படுத்தும் எரிதிமா மல்டிஃபார்ம் பொதுவாக சிகிச்சை ஏதுமின்றி ஒரு சில வாரங்களில் தானாகவே குணமாகிவிடும்.உடற்காப்பு மருந்துகள், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் மவுத் வாஷ்  ஆகியவையுடன் அறிகுறிகளுக்கு நிவாரண மருந்துகள் பயன்படுத்தப்படலாம்.வலியைத் தாங்கிக்கொள்ள மருந்துகள் வழங்கப்படலாம்.சீரற்ற அல்லது கொப்புளங்களால் ஏற்படும் காயங்களுக்கும் மற்றும் சருமத்தில் அதிக எரிச்சலை ஏற்படுத்தும் புண்களுக்கு, ஈர ஒத்தடத்தை பயன்படுத்தலாம். மற்ற சிகிச்சைகள் பின்வருமாறு:

  • தொற்றை தடுக்க நுண்ணுயிர் எதிர்ப்பான்கள் (ஆண்டிபயோட்டிக்ஸ்).
  •  வீக்கத்தைக் கட்டுப்படுத்த ஸ்டீராய்டுகள்.



மேற்கோள்கள்

  1. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Erythema multiforme
  2. National Organization for Rare Disorders. [Internet]. Fairfield County, Connecticut, United States; Erythema Multiforme.
  3. American Academy of Family Physicians. [Internet]. Leawood,Kansas, United States; Erythema Multiforme.
  4. Dr Amanda Oakley. [Internet]. Dermnet, Hamilton, New Zealand 1997; Erythema Multiforme.
  5. Hafsi W, Badri T. Erythema Multiforme. [Updated 2019 May 2]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.