கண்களில் ஏற்படும் கோளாறுகள் (கண் கோளாறுகள்) எனப்படுபவை எவை?
கண்களில் ஏற்படும் கோளாறுகள் என்ற இந்த சொற்கூறு, கண்ணின் மற்ற பகுதில் உள்ள பிரச்சனைகளையும் குறிப்பதாகும். வறண்ட கண்கள், இமைப்படல அழற்சி ,கண் அழுத்த நோய், மாகுலர் டிஜெனேரேஷன், ரிழிவினால் விழித்திரை பாதிப்பு அடைவது, கண்புரை,கண்பார்வை குறைபாடு ஏற்படுதல், மாறுகண், சோர்வுற்ற கண்கள் மற்றும் கண்பார்வை இழப்பு ஆகியவை பொதுவாக காணப்படும் கண்களில் ஏற்படும் கோளாறுகள் ஆகும்.
அதன் முக்கிய அறிகுறிகள் என்ன?
பின்வரும் அறிகுறிகளை கொண்டு நீங்கள் கண் நோயினால் பாதிக்கபட்டுள்ளீர்கள் என்பதை அறியலாம்:
- சிவந்த மற்றும் வீங்கிய கண்.
- அரிப்பு மற்றும் கண்ணிலிருந்து நீர் வெளியேற்றம்.
- நறைநறைப்பு மற்றும் கண் எரிச்சல்.
- பலவீனமான பார்வை.
- கண்களை சுற்றி வலி உண்டாகுதல்.
- மங்கலாக அல்லது இரட்டை பார்வை.
- பார்வை பகுதியில் புள்ளிகள் தோன்றுதல் - அதாவது, மிதவைகள்.
- கருவிழி நிற மாற்றம்.
- வெளிச்ச உணர்திறன் பிரச்சனை.
- பார்வை இழப்பு.
- கண் மீது திரை படர்வதுபோல் உணர்தல்.
இதன் முக்கிய காரணங்கள் என்ன?
பல்வேறு காரணங்களினால் கண் நோய்கள் ஏற்படலாம். கண் நோய்களுக்கான முக்கிய காரணங்கள் பின்வருமாறு:
- பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ்கள் அல்லது ஒட்டுண்ணிகள் மூலமாக தொற்று ஏற்படுகிறது.
- கண் அல்லது கண் பகுதில் காயம் ஏற்படுதல்.
- நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் முடக்கு வாதம் போன்ற நோய்த்தொற்று நிலைமைகள் மற்றும் சோகிரென்ஸ் நோய்க்குறி. போன்ற தன்னுடல் தாக்கு நோய் நிலைகள்.
- கண்களில் உண்டாகும் அதிக அழுத்தம்.
- வைட்டமின் ஏ குறைபாடு.
- மரபணு மரபுவழி நோய்கள்.
- ஒவ்வாமைகள்.
- நாட்பட்ட மருந்துகள்.
- முதுமை.
இது எப்படி கண்டறியப்படுகிறது மற்றும் சிகிச்சையளிக்கப்படுகிறது?
குறைந்தபட்சம் ஒரு வருடத்திற்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்வது அவசியம். நோய்க்கான அறிகுறிகள் மற்றும் அடிப்படை காரணத்தை கண்டறிவதில் இந்த கண் பரிசோதனைகள் முக்கிய பங்கு வகுக்கிறது. இந்த கண்களில் ஏற்படும் கோளாறு நோய்க்கான காரணத்தை கண்டறிய கீழ்கண்ட பரிசோதனைகள் கண் மருத்துவரால் செய்யப்படுகிறது, அவை:
- கண் பரிசோதனை.
- மறுபிம்பம் மற்றும் ஸ்நெல்லன் சோதனைகள், கண் கூர்மை, அதாவது அருகில் மற்றும் தொலைநோக்குயின்மை போன்ற பிரச்சனைகளை சோதனை செய்யப் பயன்படுகிறது.
- காட்சி புல சோதனை.
- கோல்டுமன்னின் பெரிமெட்ரி மற்றும் ஆம்ஸ்லெர் போன்ற சோதனைகள்.முறையே, புற மற்றும் மைய பார்வையை சரிபார்க்க செய்யப்படுகிறது.
- கண் (உட்புற மேல்பாகம்) பார்வையின் ஆழத்தை பார்க்க இந்த ஃபண்டோஸ்கோப்பி சோதனை செய்யப்படுகிறது.
- டோனோமெட்ரி சோதனை கண்களின் அழுத்தத்தை அளவிட செய்யப்படுகிறது.
- ஈகிஹரா வண்ண தகடுகள் நிற குருட்டுத்தன்மையை சோதிக்க செய்யப்படுகிறது.
கண் கோளாறுக்கான சிகிச்சை நோய் நிலைமைகளின் தீவிரத்தை பொறுத்தது.தற்போது செய்யப்படும் கண் சிகிச்சை முறைகள்:
- கண்கண்ணாடிகளை பயன்படுத்தி பார்வை திருத்தம், காண்டாக்ட் லென்ஸ்கள் அல்லது லேசர் சிகிச்சை மூலம் பார்வை திருத்தம்.
- கண் சொட்டு மருந்து அல்லாத மருந்து அல்லது உலர்ந்த கண்கள் உயவூட்டுவதற்கு கண் ஜெல்கள்.
- ஒவ்வாமையை சரிசெய்ய கண் சொட்டு மருந்து, கண் அழுத்த நோய், கண் தொற்று சிகிச்சை.
- விழித்திரை நீரிழிவு இருப்பின் லேசர் சிகிச்சை முறை.
- கண்புரை தலையீட்டை சரிசெய்ய அறுவைசிகிச்சை மற்றும் விழித்திரை பற்றின்மை சிகிச்சை.
- மாகுலர் டிஜெனேரேஷனை சரிசெய்ய போட்டோடைனமிக் சிகிச்சை.
- ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் உலர் கண்கள் சிகிச்சைக்கான ஊட்டச்சத்து மருந்துகள்.
சில வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்களை கண்களில் ஏற்படும் கோளாறுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது; ஆரோக்கியமான மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, புகைபிடிப்பதை நிறுத்தி, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது,சன்கிளாசஸ் மூலம் கண்களை பாதுகாத்தல்,வேலை செய்யும் போது பாதுகாப்பு கண்ணாடிகளைப் பயன்படுத்துதல், உங்கள் கண்களுக்கு போதுமான ஓய்வு அளித்தல் போன்றவை உங்களை கண்களில் ஏற்படும் கோளாறு நோயிலிருந்து பாதுகாக்கிறது. ஒரு வேளை நீண்ட அல்லது தொடர்ச்சியான அறிகுறிகளென்றால், உங்கள் கண்சிகிச்சை மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறவும்.