பாதத்தில் ஏற்படும் எலும்புமுறிவு என்றால் என்ன?
பாதத்தில் ஏற்படும் எலும்புமுறிவு என்பது மிகவும் பொதுவாக தோன்றும் ஒரு எலும்புமுறிவு ஆகும்.பாதத்தில் மொத்தம் 26 எலும்புகள் உள்ளன, இவை நேரடியான அடி அல்லது விபத்துகளால் உடையக்கூடும்.சிறிய தவறான செய்கைகளால் அல்லது விழுவதால் கூட பாதத்தின் எலும்புங்கள் உடையலாம், இதை பொதுவாக நாம் அபாயமாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.வழக்கமாக பாதத்தில் ஏற்படும் எலும்புமுறிவு கால் விரல்களில் இருக்கும் எலும்புகளில் (பாலான்ஜெஸ்), இதை தொடர்ந்து கணுக்கால் எலும்புகளில் (கால் விரல்களில் இருக்கும் 5 எலும்பிற்கும் நடுவில் மற்றும் பின் மற்றும் அடிக்கால் எலும்புகளில்) காணப்படும்.பொதுவாக கணுக்கால் எலும்புமுறிவு ஐந்தாவது கணுக்கால் எலும்பில், அதாவது கடைசி விரலை சேர்க்கும் எலும்பில் காணப்படும்.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பாதத்தில் ஏற்படும் எலும்புமுறிவின் மிகவும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- வலி.
- எலும்புமுறிவு ஏற்பட்ட இடத்தில் வீக்கம்.
- உடைந்த பாதத்தை அசைப்பதில் சிரமம்.
மற்ற அறிகுறிகள் பின்வருமாறு:
- எலும்பு முறிவு தளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிராய்ப்பு மற்றும் நிறமாற்றம்.
- நடக்கும்போதும் கனமான பொருட்களைத் தூக்கும் போதும் வலி ஏற்படுதல்.
- வலி உடல் செயல்பாடுகளால் மோசமடைகிறது மற்றும் ஓய்வெடுப்பதன் மூலம் நிவிர்த்தியாகிவிடுகிறது.
- மென்மை.
- உருக்குலைவு.
இதன் முக்கியமான காரணங்கள் என்ன?
பாதத்தில் ஏற்படும் எலும்புமுறிவின் முக்கியமான காரணங்கள் பின்வருமாறு:
நேரடி அதிர்ச்சி அல்லது காயம்: வாகன விபத்துகளில் நொறுங்கிய எலும்புகள் , கால் தடுக்கி விழுதல் அல்லது கீழே விழுதல், உயரத்தில் இருந்து குதிக்கையில் ஏற்படும் காயம், ஏதேனும் கனமான பொருள் கால் மீது விழுதல் போன்றவற்றால் பாத எலும்பு முறிவு ஏற்படலாம்.
மற்ற காரணங்கள் பின்வருமாறு:
- ஏதேனும் அடி பட்டதால் உண்டாகும் காயம் அல்லது அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவதால் உண்டாகும் அழுத்தத்தால் வரும் எலும்புமுறிவு.
- தடுமாற்றத்தால் வரும் எலும்பு முறிவு.
- நடக்கையில் மரச்சாமான்கள் அல்லது ஏதேனும் கனமான பொருட்கள் மீது இடித்துக்கொள்ளுதல் அதிர்ச்சி உண்டாக்கலாம்.
- கணுக்கால் திருகிக்கொண்டால் கூட பாத எலும்புமுறிவு ஏற்படலாம்.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
பாதத்தின் எலும்பு மற்றும் மூட்டுகளை பரிசோதித்து பார்த்து பாத எலும்புமுறிவை கண்டறிவார்கள்.பாதத்தின் உணர்ச்சி மற்றும் நரம்பு தொகுப்பு பரிசோதனை (அதாவது பாதத்தில் இருக்கும் நரம்பு மற்றும் இரத்த குழாய்களின் பரிசோதனை) மூலம் எலும்பு முறிவின் மதிப்பீடு செய்யப்படுகிறது.
சோதனைகள் பின்வருமாறு:
- எக்ஸ்-ரே.
- கேளா ஒலிவரைவி (அல்ட்ராசோனோகிராபி).
எலும்புமுறிவின் தளம் மற்றும் தீவிரத்தைப் பொறுத்து முறிவின் முன்கணிப்பு மற்றும் நோய் கண்டறிதல் செய்யப்படுகிறது.எனவே குணமாவதற்கு நான்கு வாரங்களில் இருந்து 10 முதல் 12 வாரங்கள் வரை ஆகும்.
பெரும்பாலான சந்தர்ப்பங்களில், சிம்புகள் மற்றும் வார்த்து உருக்கொட்டுதலுடன் கூடிய கட்டுப்படுத்தப்பட்ட உடல் செயல்பாடுகள் மூலம் விரைவாக குணமாக உதவும்.
வலி மற்றும் அழுத்தத்தைக் குறைக்க ஒரு விரலுடன் இன்னோரு விரலை சேர்த்து கட்டலாம்.
எலும்பு உடைந்த இடமானது சிதைந்துவிட்டால் அல்லது அதன் இடத்திலிருந்து நகர்ந்திருந்தால், மருத்துவர் மயக்கமருந்து கொடுத்து சீரமையா எலும்பை சரி செய்வார்.எலும்பு துண்டுகள் சதையை துளைத்து இருந்தால் அதாவது இது திறந்த முறிவாய் இருந்தால் இதற்க்கு அறுவை சிகிச்சை தேவைப்படும்.
முன்பாத எலும்பில் அதாவது கடைக்கால் மற்றும் தண்டிற்கு நடுவில் பாத எலும்புமுறிவு ஏற்பட்டிருந்தால் இதை ஜோன்ஸ் எலும்பு முறிவு என்று கூறுவார்கள்.இது மிகவும் ஆபத்தானது மற்றும் இதற்க்கு சிகிச்சைமுறை மிகவும் மெதுவாக இருக்கலாம் மற்றும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.
சுய பாதுகாப்பு:
- பாதிக்கப்பட்ட பாதத்தை உயர்த்தி வைத்தல்.
- வலியை குறைக்க பனிக்கட்டி ஒத்தடம் கொடுத்தல்.
- எடைத்தூக்குவதைக் குறைத்தல்.