இடுப்பெலும்பு முறிவு என்றால் என்ன?
இடுப்பு மூட்டுகளை உருவாக்கும் எலும்புகளில் ஏற்படும் ஒரு முறிவு இடுப்பெலும்பு முறிவாகும். இடுப்பெலும்பிற்கு அருகில் உள்ள தொடையெலும்பின் மேற்பகுதி இடுப்பு எனப்படுகிறது, மேலும் இந்த எலும்பில் ஏற்படும் முறிவு உயிருக்கு ஆபத்தான விளைவுகளைக்கூட ஏற்படுத்தலாம். பெரும்பாலான இடுப்பெலும்பு முறிவுகள் பெண்களுக்கும் 65 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பலவீனமான எலும்புகளின் காரணமாக ஏற்படுகிறது.
அதன் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு:
- மேல் தொடை அல்லது இடுப்பு பகுதியில் வலி.
- கடுமையான வீக்கம் மற்றும் எலும்பு முறிவு உண்டான தளத்தில் சிராய்ப்பு.
- இடுப்பு இயக்கத்தில் அசௌகரியம் மற்றும் சிரமம்.
- நடப்பதில் சிக்கல்.
- பாதிக்கப்பட்ட இடுப்பில் சுமை தூங்குவதில் இயலாமை.
மற்ற அசாதாரண அறிகுறிகள் பின்வருமாறு:
- பாதிக்கப்பட்ட இடுப்பு வெளிப்புறம் நோக்கி சுழற்றப்படலாம் அல்லது உருக்குலைந்து காணப்படலாம்.
அதன் முக்கிய காரணங்கள் என்ன?
மிகவும் பொதுவான காரணங்கள் சில பின்வருமாறு:
- அதிர்ச்சி அல்லது விபத்துக்கள் இடுப்பு எலும்புக்கு நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பலவீனமான எலும்புகளால் முதியவர்கள் தங்கள் கால்களை முறுக்குவதினாலும் அல்லது நீண்ட நேரம் நிற்பதினாலும் மிக சாதரணமாக இடுப்பெலும்பு முறிவு ஏற்படுகிறது. ஆனால் அதிர்ச்சி சம்பந்தப்பட்டிருந்தால் இது பொதுவாக எந்த வயதினரையும் பாதிக்கக்கூடும்.
- பெரும்பாலும் உயரமான இடத்திலிருந்து விழுவது பெரியவர்களுக்கு ஏற்படும் இடுப்பெலும்பு முறிவுக்கு காரணம் ஆகிறது.
- சில மருத்துவ நிலைகள் எலும்புமுறிவுடன் தொடர்புடையதாக காணப்படுகிறது. இந்த நிலைகள் எலும்புகளை பலவீனப்படுத்துகின்றன (வைட்டமின் D மற்றும் கால்சியம் குறைபாடு, எலும்புத்துளைநோய் (ஆஸ்டியோபோரோசிஸ்), மீச்செயற்பாடுள்ள தைராய்டு) அல்லது கீழே விழும் ஆபத்தை அதிகரிக்கின்றன (டிமென்ஷியா, பார்கின்சன் நோய்).
- கார்டிகோஸ்டீராய்டுகள் போன்ற மருந்துகள் எலும்புகளை பலவீனப்படுத்துகிறது மற்றும் மயக்கமருந்து மற்றும் ஆன்டிசைகோடிக்ஸ் (உளவியல் எதிர்ப்பு மருந்துகள்) ஆகியவற்றால் கீழே விழும் ஆபத்து அதிகரிக்கிறது.
- புகையிலை மெல்லுதல் அல்லது மது அருந்துதல் போன்ற பழக்கங்கள், பலவீனமான எலும்புகள் மற்றும் குறைந்த எலும்பு குணமடையும் தன்மைக்கு வழிவகுக்கிறது.
- உடல் இயக்கமின்மை மற்றும் அதிகமாக உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கைமுறை ஆகியவை எலும்பு பலவீனம் மற்றும் எலும்பு அடர்த்திக் குறைபாட்டுடன் தொடர்புடையது.
இது எவ்வாறு கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது?
கவனமான மருத்துவ வரலாறு, அறிகுறிகளின் மதிப்பீடு மற்றும் உடல் பரிசோதனை ஆகியவை நோயறிதலுக்கு உதவுகிறது.
நோயறிதல் எக்ஸ்-ரே மூலம் சுலபமாக உறுதிசெய்யப்படுகிறது. விரிவான மதிப்பீட்டிற்கு ஒரு எம்.ஆர்.ஐ அல்லது சி.டி ஸ்கேன் தேவைப்படலாம்.
சிகிச்சை பொதுவாக எலும்புமுறிவின் வகை மற்றும் இடத்தைச் சார்ந்துள்ளது. வழக்கமாக இடுப்பெலும்பு முறிவுகளை சரிசெய்ய அறுவை சிகிச்சை தேவைப்படுகின்றன.
சில மோசமான மருத்துவ நிலைகளில், அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டு அறிகுறிகளுக்கான சிகிச்சை மற்றும் கவனம் மட்டும் அளிக்கப்படுகிறது.
சில அரிய சந்தர்ப்பங்களில், நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட்டு முழு படுக்கை ஓய்வு மற்றும் உடல் அசைவு இல்லாமல் இருக்கவேண்டுமென்று அறிவுறுத்தப்படுகிறது.