தாடை எலும்புமுறிவு என்றால் என்ன?
எலும்பு உடைவது அல்லது விரிசல் ஏற்படுவது எலும்புமுறிவு என்று அழைக்கப்படுகிறது. தாடை எலும்பு உடைந்தால் அது தாடை எலும்புமுறிவு என்று அழைக்கப்படுகிறது. முகத்தில் ஏற்படும் எலும்புமுறிவுகளில் கன்னத்தில் இருக்கும் எலும்பு மற்றும் மூக்கின் எலும்பு முறிவதற்கு அடுத்தபடியாக தாடை எலும்புமுறிவு மூன்றாவது பொதுவான எலும்புமுறிவாக இருக்கிறது.
தாடை எலும்பு மருத்துவ ரீதியாக சிபுகம் அல்லது கீழ்த்தாடை என்று அழைக்கப்படுகிறது. தாடை எலும்பின் இறுதியில் இருக்கும் தடித்த எலும்புமுனை, காதிற்கு முன்னால் உள்ள தாடை-பொட்டெலும்பு மூட்டின் ஒரு பகுதியாக உருவாகிறது. தாடை எலும்புமுறிவின் விளைவாக தாடை-பொட்டெலும்பு மூட்டுப்பகுதியில் தடை இடம்பெயர்ப்பு ஏற்படுகிறது.
தாடை முறிவின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
தாடைஎலும்பு முறிவின் அறிகுறிகள் கீழே பட்டியிடப்பட்டுள்ளன:
- முகம் அல்லது தாடையை அசைத்தால் மோசமாகும் வலி.
- உணவை மெல்லுவதில் சிரமம்.
- வாயை திறக்க அல்ல மூடுவதில் சிரமம்.
- வாயை திறக்கையில் தாடை ஒரு பக்கத்திற்கு விலகிச் செல்லுதல்.
- சேதமடைந்த பல்.
- கீழ் உதட்டில் உணர்வின்மை.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
தாடை எலும்புமுறிவு, வகையைப் பொறுத்து பல வழிகளில் ஏற்படலாம். அவை:
- தற்செயலாக கீழே விழும்போது தாடையில் ஏற்படும் காயம், குழந்தைகளில் காணப்படுகிறது.
- வண்டி அல்லது மிதிவண்டியில் இருந்து விழும்போது ஏற்படும் காயம்.
- தாடையில் குத்துகையில் ஏற்படும் காயம்.
- விளையாடும் போது விழுதல்.
- தொழில்துறை விபத்துக்கள்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
தாடையின் அசைவு மற்றும் முக சிராய்ப்பு, உருக்குலைவு, வீக்கம் அல்லது சிவத்தல் இருக்கிறதா என்று மருத்துவர் ஒரு முழுமையான உடல் பரிசோதனை நடத்துவார். வெளிப்புற பரிசோதனைக்கு பின், வாயிற்குள் பற்கள் தன் இடத்தில் இருந்து நகன்று, சீரற்று அல்லது உடைந்து இருக்கிறதா என்று மருத்துவர் பரிசோதிப்பார். முறிவின் இடம் மற்றும் தாக்கத்தின் அளவை உறுதி செய்ய அகன்ற எக்ஸ் - கதிர்கள் சோதனை (பனோராமிக் எக்ஸ்-ரே) எடுக்கப்படும்.
வலியைக் குறைக்க மருந்துகள் பயன்படுத்திக்கொள்ளலாம், மற்றும் மென்மையான உணவை எடுத்துக்கொள்வதற்கான வழிமுறைகள் கொடுக்கப்படும். நிலையான முறிவுகளுக்கு, பெரும்பாலும் மேல் மற்றும் கீழ் பற்களை ஒன்றாக கம்பி மூலம் கட்டி விடுவார்கள். இந்த கம்பி 6 - 8 வாரத்திற்கு நீக்கப்படலாகாது. நிலையற்ற முறிவுக்கு திறந்த அறுவைசிகிச்சை முறையை உபயோகித்து உடைந்த பிரிவுகளை டைட்டானியம் தட்டுகள் மற்றும் திருகுகளைக் கொண்டு சீரமைக்கின்றனர். நீங்களே சுயமாக தாடை அமைப்பை சரி செய்வதை தவிர்க்கவேண்டும் என்று உறுதியாக அறிவுறுத்தப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் வரும் வலி மற்றும் வீக்கத்திற்கு அழற்சி எதிர்ப்பு மருந்துகள் கொடுக்கப்படும்.