பொது மயக்க மருந்து - General Anesthesia in Tamil

Dr. Ayush PandeyMBBS,PG Diploma

April 24, 2019

March 06, 2020

பொது மயக்க மருந்து
பொது மயக்க மருந்து

பொது மயக்க மருந்து என்றால் என்ன?

பொது மயக்க மருந்து என்பது அறுவை சிகிச்சை நடைமுறைகளை செயல்படுத்துவதற்காக கட்டுப்பாட்டுடன் உள்ள மயக்க நிலையை (இதனால் அறுவை சிகிச்சையின் போது ஒருவர் நகராமலும், வலியை உணராமலும் இருப்பர்) உருவாக்க பயன்படுத்தப்படுவதாகும். பொது மயக்க மருந்துகள் என்றழைக்கப்படும் மருந்துகளானது உங்களை தூங்க வைப்பதற்காகவும் அல்லது அறுவை சிகிச்சையின் போது உங்களை சௌகரியமாக அல்லது பாதுகாப்பாக உணர வைக்கவும் உபயோகிக்கப்படுகிறது.

இது எதற்காக செய்யப்படுகிறது?

இது கீழ்வரும் காரணங்களுக்காக செய்யப்படுகிறது:

  • இது அறுவை சிகிச்சை மிகுந்த வலி மிக்கதாகவும், நீண்ட நேரம் நடத்தப்படுவதாகவும் இருந்தால், வலியில் இருந்து நிவாரணம் பெற பயன்படுகிறது.
  • இது பதற்றத்தை குறைத்து உங்களை சௌகரியமாகவும், நிம்மதியாகவும் உணரச் செய்ய பயன்படுத்தப்படுகிறது.
  • சுவாசிக்கும் திறனை பாதிக்கும் அறுவை சிகிச்சைகளில் உதவ பயன்படுத்தப்படுகிறது.

இது யாருக்கு தேவைப்படுகிறது?

பின்வரும் நிகழ்வுகளில் பொது மயக்க மருந்து தேவைப்படுகிறது:

  • நீண்ட நேரத்திற்கு ஆழ்ந்த தளர்வு நிலை தேவைப்படும் அறுவை சிகிச்சை நடைமுறைகள்.
  • மரப்பு மருந்து அல்லது பகுதி உணர்விழப்பு மருந்துகள் மட்டுமே போதாத அறுவை சிகிச்சைகள்.
  • குறிப்பிடத்தக்க இரத்த இழப்பிற்கு வாய்ப்புள்ள அறுவை சிகிச்சைகள்.
  • சுவாச சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புள்ள அறுவை சிகிச்சைகள்.
  • ஒத்துழைக்க மறுக்கின்ற நோயாளிகளுக்கு சிறிய நடைமுறைகளுக்கு கூட பொது மயக்க மருந்து தேவைப்படும்.

இது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது?

இது கீழ்கண்ட முறையில் செயல்படுத்தப்டுகின்றது:

  • அறுவைசிகிச்சை தொடங்குவதற்கு முன், மயக்கமருந்து நிபுணர் ஒவ்வாமை, புகைபிடித்தல், மது அருந்துதல், வழக்கமாக எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றை உள்ளடக்கிய முழு மருத்துவ பின்புலத்தை வாங்கிக்கொள்வார். உணவு அல்லது திரவ உட்கொள்ளல் குறித்த அறிவுரைகள் உங்களுக்கு வழங்கப்படும்.
  • உங்களுக்கு கொடுக்கப்பட்ட  மயக்க மருந்துகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளவையில் ஏதேனும் ஒன்றாக இருக்கலாம்:
    • திரவம்: இது  ஊசியால் உள்செலுத்தக்கூடியது. இதனை உடல்வடிகுழாய் (நரம்பிற்குள் மருந்து அல்லது உணவு உட்செலுத்த உதவும் மெல்லிய, நெகிழியாலான வடிகுழாய்) மூலம் நரம்புகள் வழியாக உட்செலுத்துவர்.
    • வாயு: இது முகமூடியின் மூலம் உள்ளிழுக்கப்படுகின்றது.
  • நரம்புகள் வழியாக கடத்தப்படும் சிக்கினல்கள் (சமிக்ஞைகள்), மயக்க மருந்துகளால் குறுக்கிடப்படுகிறது, இதன்மூலம் மூளை வலியை உணர்வது தடைப்படுகிறது.
  • மயக்க மருந்தின் செயல்பாடு தொடங்கியபின், மயக்கமடையும் ஒரு சில நிமிடங்களுக்கு முன், தலையில் பாரம் குறைந்தது போல் தோன்றும். இது செயல்முறை முடியும் வரை நீடிக்கும். அறுவை சிகிச்சைக்குப் பின் ஏற்படும் வலியைப் போக்க நரம்பு வழியாக வலி நிவாரண மருந்துகள் வழங்கப்படுகின்றன.
  • செயல்முறை முழுவதும், ஜீவாதாரங்களான நாடித்துடிப்பு, சுவாசம் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவை கண்காணிக்கப்படும்.



மேற்கோள்கள்

  1. National Health Service [Internet]. UK; General anaesthesia
  2. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; General anaesthetics
  3. Smith G, Goldman J. General Anesthesia for Surgeons. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
  4. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; General anesthesia
  5. André Gottschalk et al. Is Anesthesia Dangerous?. Dtsch Arztebl Int. 2011 Jul; 108(27): 469–474. PMID: 21814522