கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் என்றால் என்ன?
கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் என்பது கர்ப்பமான பெண்களிடத்தில் (குறிப்பாக கருத்தரித்த 20 வாரங்களுக்கு முன்) சிறுநீரில் புரதம் இன்றி காணப்படும் உயர் இரத்த அழுத்தத்தை (உயர் இரத்த அழுத்தம்: இரத்த அழுத்தம் 140/90 மிமீ - ஐ விட அதிகமாக இருத்தல்) குறிக்கிறது. கருத்தரித்த 20 வாரங்களுக்கு பிறகு, உயர் இரத்த அழுத்தத்துடன் சேர்ந்து சிறுநீரில் புரதமும் இருப்பின், இந்நிலை முன்சூல்வலிப்பு என அழைக்கப்படுகிறது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
கர்ப்பகால உயர் இரத்த அழுத்ததிற்கான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் ஒவ்வொரு கர்ப்பிணி பெண்களுக்கும் வேறுபடும், மிகவும் பொதுவான தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளாவன:
- திடீரென எடை அதிகரித்தல்.
- வீக்கம் (நீர்க்கட்டு).
- நீண்ட கால தலைவலி.
- வாந்தி அல்லது குமட்டல்.
- சிறுநீர் குறைவாக வெளியேறுதல்.
- வயிற்றின் மேல் வலது பக்கத்தில் அல்லது வயிற்றில் வலி.
- மங்கலான அல்லது இரட்டைப் பார்வை கோளாறு.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
கர்ப்பகால உயர் இரத்த அழுத்தத்திற்கான காரண காரணிகள் பின்வருமாறு:
- முந்தைய கர்ப்பம் அல்லது கர்ப்பம் அடைவதற்கு முன்னர் இருந்த உயர் இரத்த அழுத்தம்.
- கூட்டு நீரிழிவு நோய் அல்லது சிறுநீரக நோய்.
- ஆப்பிரிக்க அமெரிக்க இனமாக இருப்பதோ அல்லது 20 வயதிற்குள்ளோ அல்லது 40 வயதிற்கும் மேற்பட்டவராக இருத்தல்.
- கர்ப்பத்தில் இரட்டையர்கள் அல்லது மூவர்கள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருத்தல்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
மருத்துவர் முதலில் அறிகுறிகளைப் பற்றிய முழு விவரங்களை அறிந்து கொள்வார். இதனைத் தொடர்ந்து இரத்த அழுத்தத்தை அளவிடுவார். உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிய பின்வரும் சோதனைகள் பயன்படுகின்றன:
- அடிக்கடி எடையை கண்காணித்தல் மற்றும் வீக்கத்தை சோதனை செய்வது.
- இரத்த உறைதல் பரிசோதனை.
- சிறுநீரிலிருக்கும் புரதத்தைக் கண்டறிய சிறுநீர் பரிசோதனை செய்யப்படுகிறது (சிறுநீரில் புரதங்கள் இருப்பது சிறுநீரகங்களின் செயல்பாட்டில் உள்ள சிக்கல்களைக் குறிக்கிறது).
- கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள்.
வயிற்றிலிருக்கும் கருவின் ஆரோக்கிய நிலையை சரிபார்க்க, கரு கண்காணிப்பு செய்யப்படுகிறது. அது பின்வருவனவற்றை உள்ளடுக்குகிறது:
- கருவிலிருக்கும் குழந்தையின் உதைகளையும் அசைவுகளையும் கணக்கிடும் பரிசோதனை.
- தாயின் அடிவயிற்றில் உருளும் குழந்தையின் இதயத் துடிப்பை கண்காணிக்கும் நான்ஸ்ட்ரெஸ் பரிசோதனை (என்.எஸ்.டி).
- கருவின் வளர்ச்கியைக் கண்காணிக்க மீயொலி (அல்ட்ரா சவுண்ட்) பரிசோதனை மூலமாகவோ நான் ஸ்ட்ரெஸ் பரிசோதனையுடன் இணைந்தோ செய்யப்படும் பயோபிசிக்கல் ப்ரொபைல் சோதனை.
- இரத்த நாளங்களின் வாயிலாக பாயும் இரத்த ஓட்டத்தை மதிப்பிடும் டாப்ளர் ஓட்டம் அல்ட்ராசவுண்ட் என்ற அல்ட்ராசவுண்ட் பரிசோதனை.
கர்ப்பகால உயர் இரத்த அழுத்ததிற்கான சிகிச்சைகள் பின்வருமாறு:
நோயாளியின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் மருத்துவ பின்புலத்தை பரிசீலித்த பின்னர் மருத்துவர் சிகிச்சையின் திட்டத்தை செய்வார். இந்த நிலை மோசமாவதை தடுப்பதும் சிக்கல்களை தவிர்ப்பதுமே சிகிச்சையின் பிரதான குறிக்கோள் ஆகும். கர்ப்பகால உயர் இரத்த அழுத்ததிற்க்கு பின்வரும் சிகிச்சைகளை பயன்படுத்தலாம்:
- படுக்கையில் ஓய்வு எடுப்பது (வீட்டிலோ அல்லது மருத்துவமனையிலோ).
- உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளான மக்னீசியம் சல்பேட் அல்லது மற்ற மருந்துகள் தீவிர உயர் இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க பயன்படுகிறது.
- கர்ப்பகால உயர் இரத்த அழுத்தம் மிக மோசமாக இருந்தால் அல்லது முன்சூல்வலிப்பபு ஏற்பட்டால், தொடர்ந்து சிறுநீர் மற்றும் இரத்த பரிசோதனை செய்யப்படுகிறது.
- குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளிடத்தில் நுரையீரல் முதிர்ச்சியடையாமல் இருத்தல் ஒரு பெரிய பிரச்சனை ஆகும், இதற்கு இயக்க ஊக்கி மருந்துகள் பயன்படுகிறது.