ஜியார்டியாஸிஸ் என்றால் என்ன?
ஜியார்டியாஸிஸ் என்பது சிறு குடலில் ஜியார்டியா லேம்பிலா எனப்படும் ஒட்டுண்ணியால் ஏற்படும் தொற்றுநோய் ஆகும். ஜியார்டியா லேம்பிலா என்பது பிற மனிதர்கள், வளர்ப்புப்பிராணிகளான நாய் மற்றும் பூனை அல்லது கால்நடைகள் (மாடு, மற்றும் ஆடு) போன்ற மற்ற உயிரினங்களில் வாழக்கூடிய நுண்ணுயிர்கள் ஆகும். இது உயிரினங்களின் குடலில் வாழ்வதோடு அதனை சுற்றி சிஸ்ட் என அழைக்கப்படும் உரையை உருவாக்குகிறது. மலம் கழிக்கும்போது, சிஸ்ட்டும் அதனுடன் சேர்ந்து வெளியேறுவதோடு இந்த ஒட்டுண்ணிகள் மற்றொரு உயிரினத்தை கண்டுபிடிக்கும்வரை உடலின்றி வெளிபுறத்திலே வாழும்.
Giardiasis ஜியார்டியாஸிஸ் இந்தியாவில் உள்ள மக்களிடத்தில் அதிகமாக காணப்படுகிறது. வட இந்தியாவில் இதன் பாதிப்பு விகிதம் 5.5 லிருந்து -70% வரையும், தென்னிந்தியாவில் இதன் விகிதம் 8 லிருந்து -37.1% வரையும் இருக்கின்றது. பெரும்பாலும் பெரியவர்களை விட குழந்தைகளே இந்நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
இதன் முக்கிய அடையாளங்களும் அறிகுறிகளும் யாவை?
பாதிக்கப்பட்ட 7லிருந்து -25 நாட்களுக்குள் இதன் அறிகுறிகள் தோன்ற ஆரம்பிக்கும். சில நபர்களுக்கு எந்த அறிகுறிகளும் தோன்றாது. இருப்பினும், இந்நோயில் காணப்படும் பொதுவான அறிகுறிகள் பின்வருமாறு
- வயிற்றுப்போக்கு.
- வயிறு உப்பசம் அல்லது வாய்வு.
- தசை பிடிப்புகள்.
- குமட்டல்.
- நீர்ச்சத்துக் குறைவு.
- பலவீனம்.
- எடை இழப்பு.
காய்ச்சலும் ஏற்படலாம், ஆனால் மிக அரிதாக.
ஜியார்டியாஸிஸ் நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஜியார்டியாஸிஸ் என்பது ஜியார்டியா இன்டெஸ்ட்டினாலிஸ் அல்லது ஜியார்டியா லேம்பிலியா என்ற ஒட்டுண்ணி காரணமாக சிறுகுடலில் ஏற்படும் நோய்த்தொற்று ஆகும். இது முக்கியமாக இந்த ஒட்டுண்ணிகளின் கூடிய சிஸ்டினால் மாசுற்ற உணவு மற்றும் தண்ணீரை உட்கொள்வதால் பரவுகிறது. தொற்றுநோய் பரவக்கூடிய மற்ற வழிகள் பின்வருமாறு
- சுத்தம் செய்யப்படாத தண்ணீரை குடிப்பது அதாவது ஏரி, ஆறுகள், அல்லது கால்வாயகள் போன்றவைகளிலிருந்து தண்ணீர் அருந்துதல், குறிப்பாக நடைபயணம் செல்பவர்களில் இந்நிலை அதிகமாக காணப்படுகிறது.
- ஜியார்டியாஸிஸ் ஒட்டுண்ணி இருக்கும் நீச்சல் குளத்தில் குளிப்பது.
- இந்நோய் பாதிக்கப்பட்டவருடன் ஆசன வாய் உடலுறவு கொள்வதால் நோய்த்தொற்று ஏற்படக்கூடும், ஏனெனில் இவ்வாறு செய்வதனால் கழிவுசார் பொருட்களுடன் நேரடித் தொடர்பு ஏற்படுகின்றது.
- சமைக்கப்படாத இறைச்சியை உட்கொள்தல்.
- கழிவறையை உபயோகப்படுத்திய பிறகு கைகளை சுத்தபடுத்தாமல் இருத்தல்.
பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக தொடர்பு வைத்திருந்தால் மட்டுமே இந்த தொற்று பரிமாற்றமாகிறது எனவே இது இரத்தத்தினால் பரவக்கூடியதல்ல.
இதன் கண்டறியும் முறை மற்றும் சிகைச்சையளிக்கும் முறை யாவை?
உங்கள் அறிகுறிகளை பொறுத்து, உங்கள் மருத்துவர் நுண்ணுயிரிகளை அடையாளம் காண மல பரிசோதனைக்கான அறிக்கையை கேட்கலாம். சில நேரங்களில், உங்களிடம் மலத்தின் சாம்பிள்களை பலமுறை கேட்கக்கூடும்.
ஜியார்டியாஸிஸை சிகிச்சை செய்ய ஆண்டிமைக்ரோபியல்கள் சிகிச்சை முறையே சரியான தேர்வு ஆகும். இந்த சிகிச்சை பொதுவாக 3லிருந்து -7 நாட்கள் வரை நீடிக்கும். மருந்துடன் இணைந்து, வயிற்றுப்போக்கால் ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை தடுக்க முறையாக தண்ணீர் அருந்துவது மிக அவசியம்.
உங்களால் நோய் தொற்றை கீழ்கண்டவாறு தடுக்க முடியும்:
- குளம், ஆறு மற்றும் ஏரி ஆகியவற்றிலிருந்து தண்ணீர் குடிப்பதை தவிர்த்தல்.
- கொதிக்கவைத்த தண்ணீரை மட்டுமே பருகுதல்.
- குழந்தைகளுக்கு டயப்பர் மாற்றிய பிறகோ அல்லது கழிவறையை உபயோகப்படுத்திய பிறகோ கைகளை கழுவுதல்.
நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் அல்லது மற்றவர்களையும் இந்த தொற்றிலிருந்து கீழ்கண்டவாறு பாதுகாக்க முடியும்:
- வயிற்றுப்போக்கு குறைந்த 24 மணி நேரத்திற்கு, நோயினால் பாதிக்கப்பட்ட உங்கள் குழந்தைகளை பள்ளிக்கோ அல்லது டேக்கேர்க்கோ அனுப்புதலை தவிர்த்தல்.
- உங்களுக்கு இதற்கான அறிகுறிகள் இருந்தால் உணவு சமைப்பதை தவிர்த்தல்.
- அறிகுறிகள் மறையும் வரை வீட்டு பொருட்களை பகிர்ந்துகொள்ளாமல் இருப்பது நல்லது.