இதய மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
இதய செயலிழப்பு (ஹெச்.எஃப்) உலகளவில் மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கிறது. இதய மாற்று அறுவை சிகிச்சை என்பது நார்மன் ஷம்வே என்ற மருத்துவரால் பிரபலமாக்கப்பட்ட ஒரு அறுவை சிகிச்சை நுட்பமே ஆகும். இதய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க இதுவே சிறந்த வழிமுறையாகும். பழமைவாய்ந்த வழிமுறைகள் செயலற்று போகும் போது, இந்த முறையே இறுதி கட்ட சிகிச்சையாக விளங்குகிறது. தருபவர்-பெறுபவர் நேரத்தை குறைத்தல், சிகிச்சைக்குப் பின் ஏற்படும் சிக்கல்கள் மற்றும் சிகிச்சையின் வெற்றியை தக்கவைத்தல் முதலியனவே ஒரு வெற்றிகரமான சிகிச்சையின் நோக்கமாகும். அந்த வகையில், இதய மாற்று அறுவை சிகிச்சையானது இதனை பல வருடங்களாக வெற்றிகரமாக அடைந்துள்ளது.
இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான அறிகுறிகள் நிறுவனங்களுக்கு இடையே மாறுபடுகின்றன. புதிய இதயம் தேவைப்படுபவரே பெறுபவர் ஆவார். இவர்களில் பெரும்பாலானவர்கள், நீண்டகால இதய செயலிழப்பு உள்ளவர்களாக இருக்கின்றனர், சமீபத்தில் இதய செயலிழப்பு ஏற்பட்ட சிலருக்கு வாழ்நாளை நீட்டிப்பதற்கான ஒரே வழிமுறையாக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படலாம். இதயத்தை கொடுப்பவரே தருபவர் ஆவார்.
இதய மாற்று அறுவை சிகிச்சை யாருக்குத் தேவைப்படுகிறது?
பொதுவாக, இதய செயலிழப்பிற்கு உகந்த ஏனைய சிகிச்சைகள் பலனளிக்காத பொழுது, அல்லது இதயச் செயலிழப்பின் கடைசி நிலையில் உள்ள ஒருவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இது இதய உயிர்ப்பு சிகிச்சை நோயின் அறிகுறிகளை மேம்படுத்த அல்லது நிறுத்த இயலாத பட்சத்திலும் செய்யப்படலாம். இருப்பினும், ஏதேனும் மீளக்கூடிய அல்லது அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யக்கூடிய இதயக் கோளாறுகள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு முன் முறையாக கவனிக்கப்பட வேண்டும். பின்கூறப்பட்டது இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கான உறுதியை அளிக்கிறது. மேலும், தேவைப்படும் நோயாளிகளுக்கு உறுப்புகளை வைக்கச் செய்கிறது. இறுதி கட்டத்தில் உள்ள நோயாளிகளுக்கு, உகந்த முறையில் பல உறுப்பு செயலிழத்தலை கையாள, மேம்பட்ட ஹெச்.எஃப் குழுக்கள் மதிப்பீடு செய்வது அவசியமாகும். கடுமையான ஹெச்.எஃப் உடையவர்கள், மேம்பட்ட மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தாலும், 50% நெருங்கும், 1-2 வருடம் இறப்பு விகிதத்தை கொண்டிருப்பர். பெரியவர்களிடத்தில் இதய மாற்று அறுவை சிகிச்சைக்கான முதன்மை அறிகுறிகள் குருதியோட்டக்குறையற்ற இதயத் தசைநோய் (53%) மற்றும் குருதியோட்டக்குறை இதயத் தசைநோய் (38%) ஆகும். இதய அடைப்பிதழ் நோய் (3%), மீண்டும் மாற்று அறுவை சிகிச்சை செய்தல் (3%), மற்றும் பிற இதய நோய்கள் (<1%) போன்றவை ஏனைய அறிகுறிகள் ஆகும்.
இது எவ்வாறு செய்யப்படுகிறது?
மார்பெலும்பு வழியாக கீறல் செய்தல், சிகிச்சையின் போது நோயாளியின் இதயம் மற்றும் நுரையீரலாக செயல்படும் இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான இயந்திரம் (செயற்கை இதயம், நுரையீரல் இயந்திரம்) பயன்படுத்துதள் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தேவைப்படுகிறது. இதயத்தின் போதுமான செயல்பாட்டை உறுதி செய்ய முழுமையான மதிப்பீட்டிற்கு பிறகு, அறுவைசிகிச்சை குழுவால் இதயம் தருபவரின் இதயம் அகற்றப்படுகிறது அல்லது மீட்கப்படுகிறது. இதற்கிடையில், பெறுபவரின் இதயமும் அகற்றப்படுகிறது. அறுவை சிகிச்சை நிபுணர், தருபவரின் இதயத்தை பெறுபவரின் முக்கிய நாளங்கள் வழியாக இணைப்பார். அனைத்தும் சரியாக மீண்டும் இணைக்கப்பட்டு, இதயம் சரியாக செயல்படத் தொடங்கிய பின்னர்,செயற்கை இதயம், நுரையீரல் இயந்திர இணைப்பிலிருந்து நோயாளிகள் விடுவிக்கப்படுகின்றனர். இவ்வாறு அறுவை சிகிச்சை மூலம் மாற்றப்பட்ட இதயம் அனைத்து செயல்பாட்டையும் எடுத்துக்கொள்கிறது.