சுருக்கம்
சிறுநீரில் இரத்தம் தோன்றுவது ஒரு எச்சரிக்கை அறிகுறியாகும். சிறுநீரில் இரத்தத்தைக் கொண்டிருப்பது, அவ்வப்போது சிறுநீர் கழிக்கும் பொழுது வலி, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற மற்ற அறிகுறிகளோடு சேர்ந்து காணப்படலாம். சிறுநீரில் இரத்தத்தைக் கொண்டிருக்கும் ஒரு நபர், அதன் மறைமுக காரணத்தை அறிய ஒரு முழுமையான மருத்துவ பரிசோதனையைக்கு உட்பட வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கும் மேலாக, சரியான காரணத்தைக் கண்டறிய, குறிப்பிட்ட இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. வயிறு மற்றும் இடுப்புப் பகுதியின் எக்ஸ்ரே அல்லது அல்ட்ராசோனோகிராஃபியும் நோய் கண்டறிதலுக்கு அவசியமாகிறது. சிறுநீரில் இரத்தத்துக்கான காரணங்கள், ஒரு சிறிய மிதமான சிறுநீர் பாதை தொற்று (யு.டி.ஐ.) முதல் சிறுநீரக கற்கள், புற்றுநோய் போன்ற சிக்கலான நோய்கள் வரை பரவலாக இருக்கின்றன. சிறுநீரில் இரத்தத்துக்கான சிகிச்சை, ஒவ்வொரு நிலையின் காரணத்தைப் பொறுத்து இருக்கும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை தேவைப்படும் பொழுது, சிலருக்கு சிறிய அளவிலான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை எடுப்பதன் மூலம் குணமாகக் கூடும். சிக்கல்கள் உருவாகும் வாய்ப்புகள் அரிதாகவே இருப்பதோடு, வழக்கமாக பலன் நன்றாக இருக்கின்றது.