சுருக்கம்
ஹெபடைடிஸ் பி (மஞ்சள் காமாலை) என்பது ஹெபடைடிஸ் பி என்ற வைரஸ் (HBV) கிருமியின் காரணமாக கல்லீரலில் ஏற்படும் ஒரு தொற்றுநோய் ஆகும். இது இரண்டு வகைகளானது - கடுமையான நோய்த்தொற்று (இது திடீரென தோன்றி விரைவாக மோசமடையலாம், ஆனால் சரியாக சிகிச்சை அளிக்கப்பட்டால் சிறிது காலத்தில் சரியாகிவிடும்) மற்றும் நாள்பட்ட தொற்று (இது நீண்ட நாட்களாக இருக்கக் கூடியது). இந்த நோய்தொற்றுக்குப் பிறகு, ஹெபடைடிஸ் பி வைரஸ் உடல் திரவங்களிலும் சுரப்புகளிலும் காணப்படும். வளர்ந்த நாடுகளில், HBV முக்கியமாக, பாதுகாப்பற்ற பாலின சேர்க்கை மற்றும் நரம்பு மூலம் மருந்துகள் எடுத்துக் கொள்ளப்படுவதன் மூலமும் பரவுகிறது. கடுமையான தொற்றுநோய் தலைவலி, வயிற்று அசௌகரியம், உடல் வலி, மூட்டு வலி, குமட்டல் மற்றும் இறுதியாக தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. மஞ்சள் காமாலை அதிகமாகும் போது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு தொடரும்.
நாள்பட்ட ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்று கல்லீரலை சேதப்படுத்துவதோடு கல்லீரல் புற்றுநோயையும் ஏற்படுத்தலாம். கடுமையான ஹெபடைடிஸ் பி நோய்த்தொற்றுக்கு, வழக்கமாக ஒரு சிகிச்சை முறையாக போதுமான ஓய்வு, அதிகப்படியான திரவ உணவுகளை உட்கொள்ளல் மற்றும் ஒரு ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். நாள்பட்ட ஹெபடைடிஸ் பி உள்ளவர்களுக்கு, கல்லீரல் நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வாய்வழி வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை சாப்பிடத் தொடங்கப்படலாம். எனினும், வைரஸ்கான சிகிச்சையை தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் அந்த சிகிச்சை மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்க்கு சிகிச்சை அளிக்கப்படாமலே இருந்தால், நாள்பட்ட HBV நோய்த்தொற்று கல்லீரலில் பாதிப்பு(வடு) அல்லது கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கும்.