ஹெர்னியா (குடலிறக்கம்) - Hernia in Tamil

Dr. Rajalakshmi VK (AIIMS)MBBS

June 14, 2018

March 06, 2020

ஹெர்னியா
ஹெர்னியா

சுருக்கம்

ஒரு உறுப்பு அல்லது உடலின் ஒரு பகுதி ஒரு பலவீனமான இடத்தின் வழியாக தள்ளப்படுவது அல்லது சூழப்பட்டிருக்கும் தசை அல்லது மென்மையான திசுக்களில் ஏற்படும் அசாதரணமான திறப்பு ஏற்படும் ஒரு நிலை ஹெர்னியா (குடலிறக்கம்) ஆகும்.  உள் இடுப்புப் பகுதியோடு (நேரடியாக அல்லது மறைமுகமாக) தொடர்புடைய அடிவயிற்றுப்பகுதி குடலிறக்கம், பிளவு அல்லது கீழிறங்குதல், (ஒரு பிளவு அல்லது அறுவைசிகிச்சைக்குப் பின் அடிவயிற்றில் ஏற்படும் தழும்பு காரணமாக), தொடை தொடர்பானது (மேல்புற தொடை/ வெளிப்பகுதி இடுப்பு) தொப்புள் சார்ந்தது (தொப்புள்) மற்றும் ஹ்யாட்டல் (மேல் வயிறு/ உதரவிதானம்) ஆகியன ஹெர்னியாவின் (குடலிறக்கம்) மிகவும் பொதுவான வகைகள் ஆகும். சம்பந்தப்பட்ட பகுதியில் வீக்கம், கட்டி அல்லது வலி ஆகியன அறிகுறிகள் ஆகும். சிலருக்கு அறிகுறிகள் எதுவும் இருக்காது. பாதிக்கப்பட்ட திசுக்களை திரும்ப இயல்பான இடத்தில் வைக்கவும், திறப்பை மூடுவதையும் உறுதி செய்யும் அறுவை சிகிச்சை மேற்கொள்வதே ஹெர்னியாவுக்கு (குடலிறக்கம்) மருத்துவம். சிக்கல்கள், கட்டி, வலி மற்றும் அறுவை சிகிச்சை செய்த இடத்திலிருந்து திரவ வெளியேற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியவை. அறுவை சிக்கிச்சைக்குப் பின் பலன்கள் நன்றாக இருக்கின்றன, பெரும்பாலானவர்களுக்கு திரும்ப வருவதில்லை, ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்காவிட்டால், அரிதாக இறப்புக்கு வழிவகுக்கிறது.

ஹெர்னியா (குடலிறக்கம்) என்ன - What is Hernia in Tamil

ஹெர்னியா (குடலிறக்கம்என்பது, ஒரு உறுப்பில் ஏற்படும் புடைப்பு அல்லது கொழுப்பு திசுக்கள் உறுப்பை சுற்றி உள்ள திசுக்கள் அல்லது தசைகளின் ஒரு பலவீனமான பகுதி வழியாகப் புடைத்தல் ஆகும். இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், அதே போன்று குழந்தைகளுக்கும் வரக் கூடும். இது பருமனான நபர்களிடம் மிகவும் வழக்கமானது. ஹெர்னியா (குடலிறக்கம்) வழக்கமாக, குடலின் ஒரு பகுதி அல்லது வயிற்றின் உள்ளுறுப்புகளை சுற்றி இருக்கும் சவ்வு (பெரிட்டோனுயம்), வயிற்று சுவரின் ஒரு இடைவெளி வழியே பிதுங்குவதால் ஏற்படுகிறது. பிதுங்கிக் கொண்டிருக்கும் பகுதி ஹெர்னியா (குடலிறக்கம்) பை என அறியப்படுகிறது, மேலும் குடலின் பகுதி, பெரிட்டோனுயம் அல்லது வயிற்றின் வெளிப்புற சுவர், வயிறு மற்றும்/ அல்லது வயிற்றுக் கொழுப்பையும் கொண்டிருக்கலாம்.

ஹெர்னியா (குடலிறக்கம்) அறிகுறிகள் என்ன - Symptoms of Hernia in Tamil

குறிகளும் அறிகுறிகளும் பரவலாக வேறுபடக் கூடும், இவை போன்று:

  • இது, ஒரு வலியில்லாத கட்டியாகத் தோன்றுவதிலிருந்து, அடிவயிறு அல்லது இடுப்பு போன்ற ஒரு உடலுறுப்பின் கடுமையான வலிமிகுந்த, வீங்கிய,மென்மையான, வயிற்றின் உள்ளே தள்ள முடிந்த அல்லது முடியாத புடைப்பு போன்று வரை தோன்றலாம். அடிவயிறு அல்லது இடுப்புப் பகுதியில் வலி ஏற்படுவது அடிக்கடி தோன்றக்கூடிய, ஹெர்னியாவின்(குடலிறக்கம்) ஒரு அறிகுறி ஆகும்.
  • அனைத்து ஹெர்னியாக்களும் (குடலிறக்கம்) பிரச்சினைகளுக்கு காரணமாவதில்லை. எப்போதாவது, வலி, ஒரு எரிச்சல் உணர்வு, அழுத்தம், ஒரு இழுக்கும் உணர்வு, குறிப்பாக விறுவிறுப்பான உடல் நடவடிக்கைகளின் போது ஏற்படலாம். வலியின் காரணம் இறுக்கமான வயிற்றுத் தசைகள் ஆகும்.
  • ஹயாட்டல் ஹெர்னியாவில், மேற்புற வயிற்றில் ஒரு கடுகடுப்பான வலி, முக்கியமாக வெறும் வயிற்றில், இருக்கக் கூடும். ஹெர்னியா வளரும் போது, சிகிச்சையளிக்காமல் விடும் பொழுது கூடவே வாந்தியும் ஏற்படலாம். (மேலும் படிக்க - வயிற்று வலியின் காரணங்கள் மற்றும் சிகிச்சைகள்)
  • அடிவயிற்றுப்பகுதி ஹெர்னியாவில் (குடலிறக்கம்), இடுப்புப் பகுதியில் ஒரு வீக்கம் உருவாகலாம். அடிவயிற்று நரம்பில் கட்டி இருந்தால், கூர்மையான வலி, எரிச்சல் உணர்வு அல்லது இரண்டையும் உணர முடியும். ஒருவேளை இறந்த குடலில் திணறல் ஏற்பட்டு ஹெர்னியா (குடலிறக்கம் முற்றினால் கூடவே குமட்டல், வாந்தி மற்றும் காய்ச்சலும் ஏற்படக் கூடும்.
  • குழந்தைகளுக்கு ஏற்படும் தொப்புள் சார்ந்த ஹெர்னியாவில் (குடலிறக்கம்), அழுகையின் போது தொப்புள் பகுதியில் ஒரு வீக்கம் ஏற்படும். வயது வந்தவர்களுக்கு, இது தொப்புள் பகுதியில் ஒரு வீக்கம் போன்று ஏற்பட்டு, இருமல் அல்லது சளி ஒழுகுதலோடு அதிகரிக்கும். கூடவே எப்போதாவது இழுத்துப் பிடிப்பது போன்ற வலி ஏற்படலாம்.
  • பிளவு ஹெர்னியாக்கள் (குடலிறக்கம்), கிட்டத்தட்ட அறுவை சிகிச்சைக்கு நான்கு நாட்களுக்குப் பின்னர், காயத்தின் தையலின் மீது ஒரு திரவத்தை வெளிப்படுத்துவதன் மூலம், பிளவு ஹெர்னியாவின் (குடலிறக்கம்) ஆரம்ப கட்ட அறிகுறியாக வெளிப்படுகிறது. கூடவே, அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட நோய்த்தொற்று பற்றிய சரித்திரமும் ஒரு அறிகுறி. தழும்புக்குத் தொடர்பாக ஒரு வீக்கம் அல்லது புடைப்பு காணப்படுகிறது.

ஹெர்னியா (குடலிறக்கம்) சிகிச்சை - Treatment of Hernia in Tamil

அறுவைசிகிச்சை

அறுவைசிகிச்சையே ஹெர்னியாக்களுக்கு (குடலிறக்கம்) சிகிச்சை தேர்வாக இருக்கிறது. அது, ஹெர்னியாவின் (குடலிறக்கம்) உட்கூறுகளை வயிற்றுக்குள் திரும்பத் தள்ளுவது அல்லது அவற்றை மொத்தமாக நீக்கி விட்டு இடைவெளியை தையல்கள் மூலம் மூடிவிடுவதோடு தொடர்புடையது. ஒரு வலை (செயற்கை இழை அல்லது விலங்குகளிடம் எடுக்கப்படுவது) உட்கூறுகளை வெளியே புடைத்துக் கொண்டிருக்க விட்டிருக்கும் பலவீனமான திசுக்களையும் தசைகளையும் தாங்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது.

இரண்டு வழிகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ள இயலும்: திறந்த அல்லது வழக்கமான அறுவை சிகிச்சை மற்றும் குறைவாக ஊடுருவும் அல்லது லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை. ஒரு திறந்த அறுவை சிகிச்சையில், ஹெர்னியா (குடலிறக்கம்) இருக்கும் இடத்தில் ஒரு நீளமான, பெரிய வெட்டு உருவாக்கப்பட்டு, பலவீனமான தசைகள் சரிசெய்யப்படுகின்றன. லேப்ராஸ்கோபிக் அல்லது நுண்துளை அறுவை சிகிச்சையில், பல சிறிய துளைகளும் வெட்டுக்களும் உருவாக்கப்பட்டு, நேர்த்தியான குழாய் போன்ற உபகரணங்களால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது. அறுவை சிகிச்சை அளிப்பவர் ஒரு திரையில் விரிவாக பார்த்து தேவையான நடைமுறையை மேற்கொள்வதற்கு  அதில் ஒரு கேமரா பொருத்தப்பட்டு இருக்கும்.

அடிவயிற்றுப் பகுதி ஹெர்னியாக்களில் (குடலிறக்கம்), ஹெரினோட்டமி, ஹெரினோர்ரஃபி, ஹெரினோபிளாஸ்டி ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய நடைமுறைகளாகும். தேவைப்படும் பழுது நீக்குதலின் வகையைப் பொறுத்து குண்ட்ஸ் அறுவை சிகிச்சை, ஆண்ரூவின் அடுக்குதல்கள் அல்லது மெக்வே அல்லது நைஹஸ் பழுதுநீக்கல் போன்ற மற்ற வகை அடிவயிற்றுப் பகுதி ஹெர்னியாக்களுக்கான (குடலிறக்கம்) அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளலாம், அது மருத்துவரால் தீர்மானிக்கப்படும். வேறுபட்ட ஹெர்னியாக்களுக்கு (குடலிறக்கம்) பல்வேறு வகை அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன.

எல்லா நேரத்திலும் அறுவை சிகிச்சை ஒன்றே ஹெர்னியாக்களுக்கு (குடலிறக்கம்) சிகிச்சை அல்ல மற்றும் உங்கள் ஹெர்னியா (குடலிறக்கம்) எந்த வகையாக இருந்தாலும், பெரிய உடல்நலப் பிரச்சினைகளை உருவாக்கா விட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படாமல் இருக்கலாம். அது மட்டுமின்றி, முதியவர்களுக்கும், கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களுக்கும் அறுவை சிகிச்சை தவிர்க்கப்பட வேண்டியது.

மருந்துகள்

எப்போதாவது, ஹியாட்டல் ஹெர்னியாவில் (குடலிறக்கம்), வயிற்று அமிலத்தை குறைக்க உதவும் மருந்துக் கடைகளின் மருந்துகள் அல்லது வேறு மருந்துகள் பரிந்துரைக்கப்படலாம், ஏனென்றால் அவை உங்களுக்கு ஏற்படும் அசௌகரியம் மற்றும் மற்ற அறிகுறிகளைக் குறைக்க உதவும். இந்த மருந்துகளில் சில வலி நிவாரணிகள், ஹிஸ்டாமைனை எதிர்த்து செயல்படும் எச்-2 வாங்கி தடுப்பான்கள், அமில முறிவு மருந்துகள், புரோட்டான் அழுத்த தடுப்பான்கள் (வயிற்று அமில உற்பத்தியைக் குறைக்கும் மருந்து) ஆகியனவாகும்.

நிர்வாகம்

உணவுப் பழக்கத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது,  ஹியாட்டல் ஹெர்னியாவின் (குடலிறக்கம்) அறிகுறிகளுக்கு அவ்வப்போது சிகிச்சையாகலாம், ஆனால் அதை முழுமையாக குணப்படுத்த இயலாது. தரம் மற்றும் அளவிலும் மிக அதிக அளவு உணவு எடுத்துக் கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். உணவுக்குப் பிறகு ஒரு நபர் படுத்துக் கொள்வதோ அல்லது விறுவிறுப்பான உடல்ரீதியான நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது. ஹியாட்டல் ஹெர்னியா (குடலிறக்கம்) நோயாளிகள், அமிலம் பின்னோக்கி வருவதைத் தூண்டும் காரமான அல்லது புளிப்பான உணவுகளைத் தவிர்ப்பதன் மூலம் , அமிலம் பின்னோக்கி வருவதைக் குறைக்க முடியும். மேலும், அறிகுறிகள் குறையும் வரை, புகைப்பிடித்தலைத் தவிர்க்க வேண்டும். அந்த நபரின் உயரத்திற்கு ஏற்ற இயல்பான அளவில் வைத்திருக்க, உடல் எடை பரிசோதிக்கப்பட்டு, எடை அளவுகள் குறிக்கப்பட வேண்டும்.

சில அறிகுறிகளைக் குறைக்கக் கூடிய,ஹெர்னியா (குடலிறக்கம்) பகுதியின் தசைகளை வலுவாக்குவதற்கு சில உடற்பயிற்சிகள் உதவலாம். ஆயினும், அதிக அளவில் செய்யும் உடற்பயிற்சி அல்லது ஒரு தகுதிபெற்ற பயிற்சியாளரின் வழிகாட்டுதல்கள் இல்லாமல் செய்வது அறிகுறிகளை அதிகரித்து, உடல்நிலையை இன்னும் மோசமடையக் கூட வைக்கலாம். அதனால், ஒரு ஃபிசியோதெரபிஸ்டை ஆலோசித்து, மேற்பார்வையின் கீழ் உடற்பயிற்சி செய்வது நல்லது.

தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுத்த பிறகும், ஒருவேளை அறிகுறிகள் நீங்கவில்லை என்றால் ஹெர்னியாவை சரி செய்ய அறுவை சிகிச்சை செய்யப்படலாம்.

myUpchar doctors after many years of research have created myUpchar Ayurveda Urjas Energy & Power Capsule by using 100% original and pure herbs of Ayurveda. This Ayurvedic medicine has been recommended by our doctors to lakhs of people for problems like physical and sexual weakness and fatigue, with good results.
Power Capsule For Men
₹495  ₹799  38% OFF
BUY NOW


மேற்கோள்கள்

  1. InformedHealth.org. Hernias: Overview. Cologne, Germany: Institute for Quality and Efficiency in Health Care (IQWiG); 2006-. Hernias: Overview. 2016 Oct 6.
  2. United Consumer Financial Services.[internet]. University of California San Francisco, UCSF Medical Center, UCSF Department of Surgery, UCSF School of Medicine. Overview of Hernias.
  3. MedlinePlus Medical Encyclopedia: US National Library of Medicine; Hernia
  4. US Food and Drug Administration (FDA) [internet]; Hernia Surgical Mesh Implants: Information for Patients
  5. Better health channel. Department of Health and Human Services [internet]. State government of Victoria; Hernias

ஹெர்னியா (குடலிறக்கம்) க்கான மருந்துகள்

Medicines listed below are available for ஹெர்னியா (குடலிறக்கம்). Please note that you should not take any medicines without doctor consultation. Taking any medicine without doctor's consultation can cause serious problems.