சுருக்கம்
அக்கி என்பது, அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸால் ஏற்படக்கூடிய ஒரு வைரஸ் நோய்த்தொற்று ஆகும். இரண்டு வகையான அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸ்கள் உள்ளன- அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸ் 1 (எச்.எஸ்.வி 1) மற்றும் அக்கி சிம்ப்ளெக்ஸ் வைரஸ் 2 (எச்.எஸ்.வி 2). எச்.எஸ்.வி -2 முதன்மையாக பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக இருக்கிற வேளையில், எச்.எஸ்.வி -1 வாய் மற்றும் பிறப்புறுப்பு நோய்த்தொற்றுகளுக்கு காரணமாக இருக்கின்றது. இந்த வைரஸ். வாய், ஆசன வாய் மற்றும் பிறப்புறுப்பு பகுதிகள் போன்ற பகுதிகளின் தசை மேற்பரப்பிலும், உடலின் மற்ற பாகங்களில் உள்ள தோலிலும் பாதிக்கிறது. அக்கி குணப்படுத்த முடியாத ஒரு நீண்ட கால மருத்துவ நிலையாகும். அக்கியுள்ள நிறையப் பேர்களுக்கு, அவர்களுக்கு நோய்த்தொற்று இருந்தாலும் எந்தவித அறிகுறிகளும் காட்டாது. மற்றவர்களுக்கு, கொப்புளங்கள், புண்கள் மற்றும் குளிர் புண்கள் போன்ற அறிகுறிகள் காட்டலாம், மற்றும் சிறுநீர் கழித்தலின் போது வலியை உணரக் கூடும் அல்லது அவர்களுக்கு பிறப்புறுப்பு எச்.எஸ்.வி இருந்தால் பிறப்புறுப்பில் வெள்ளையாக வடிதலை அனுபவிக்கலாம். அக்கியைக் குணப்படுத்த முடியாது என்றாலும், அறிகுறிகளிலிருந்து விடுபட மருத்துவங்கள் உதவுகின்றன. பொதுவாக, அக்கி பிரச்சினையில் சிகிச்சைக்கு மிக நல்ல விளைவு ஏற்படுகிறது மற்றும் எந்த ஒரு சிக்கல்களுக்கும் காரணமாவதில்லை. அக்கியின் சிக்கல்கள், குழந்தைகளுக்கு அல்லது மோசமான நோய் எதிர்ப்பு அமைப்பைக் கொண்டவர்களுக்கு ஏற்படக் கூடும்.