ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்றால் என்ன?
டார்லிங்ஸ் நோய் என அழைக்கப்படும் ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் என்பது ஹிஸ்டோபிளாஸ்மா காப்சுலாட்டம் பூஞ்சையினால் ஏற்படும் ஒரு பூஞ்சை நோய்த்தொற்று ஆகும். இந்நோய் மிஸிஸிபி மற்றும் ஒஹையோ ஆற்றின் பள்ளத்தாக்குகள் மற்றும் அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் பரவலாக காணப்படுகிறது. மேலும் இது மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவின் சில பகுதிகளிலும், ஆப்பிரிக்க, ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் உள்ளது.
நோயின் முக்கிய தாக்கங்கள் மற்றும் அறிகுறிகள் யாவை?
பொதுவாக, மக்கள் இந்நோயால் குறைந்தபட்ச அறிகுறிகள் அல்லது அறிகுறிகள் இல்லாமல் கூட அவதிப்பட்டு இருக்கலாம்.
ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் நோயின் தாக்கங்கள் மற்றும் அறிகுறிகளாவன:
- காய்ச்சல்.
- குளிர்.
- சளியுடன் கூடிய இருமல்.
- தலைவலி.
- பசியின்மை.
- வடிநீர்க்கோள நோய்.
- கல்லீரல் அல்லது மண்ணீரல் விரிவடைதல்.
- தோலடித்திசு நொதில்கள்.
- சீழ்வைப்புத் தூண்டும் மூட்டழற்சி.
- மார்பில் புள்ளிகள் அல்லது வடுக்கள் தோன்றுதல்.
நோய் தாக்குதலுக்கான முக்கிய காரணங்கள் என்ன?
ஹிஸ்டோபிளாஸ்மா காப்சுலாட்டம் பூஞ்சை தொற்று காரணமாக ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் ஏற்படுகிறது. பொதுவாக ஹிஸ்டோபிளாஸ்மா பூஞ்சையின் காற்றில் பரவும் வித்துக்களை நாம் சுவாசிப்பதாலும் இந்நோய் ஏற்படுகிறது.
சுத்தம் செய்யும் போது பறவையின் எச்சத்திலிருக்கும் வித்துக்கள் காற்றோட்டத்தின் வாயிலாக நோய்த் தொற்று அடிக்கடி பரவுகிறது.
நோய்க்கான காரணங்கள்:
- மரம் வெட்டுதல் மற்றும் இடிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அல்லது தொழிலாளர்கள் நோயைப் பெறுவதற்கான அதிக ஆபத்தில் உள்ளனர், ஏனெனில் வித்துக்கள் பொதுவாக மண்ணில் காணப்படுகின்றன.
- மிஸிஸிபி மற்றும் ஒஹையோ ஆற்றின் பள்ளத்தாக்குகள் மற்றும் அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்கள் பொதுவாகவே ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் நோயால் பாதிக்கப்படுகிறார்கள் ஏனென்றால், இப்பகுதியில் உள்ள மண்ணில் பூஞ்சைகள் பரவலாக காணப்படுகிறது.
- குறைந்த நோயெதிர்ப்பற்றால் கொண்ட குழந்தைகளும், மக்களும் இந்நோயால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
இது எப்படி கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகின்றது?
ஹிஸ்டோபிளாஸ்மோசிஸ் நோயை கண்டறிய உங்களின் மருத்துவ மற்றும் பயணங்கள் சார்ந்த வரலாறு, மருத்துவ பரிசோதனை மற்றும் ஆய்வக பரிசோதனைகளுடன் சேர்த்து அறிகுறிகளை மதிப்பீடு செய்தல் போன்றவை தேவைப்படுகிறது.
இதன் பரிசோதனைகளாவன:
- ஹிஸ்டோபிளாஸ்மா பிறபொருளெதிரிகளைக் கண்டறிய இரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனை.
- மார்பில் எடுக்கப்படும் எக்ஸ்-கதிர்கள் (எக்ஸ் - ரே) சோதனை மற்றும் சிடி ஸ்கேன்.
- சளியை பண்படுத்தி ஆய்வு செய்தல்.
- நுரையீரல் திசுப்பரிசோதனை.
ஹிஸ்டோபிளாஸ்மோசிஸின் சிகிச்சை மற்றும் அதன் காலநேரம், நோயின் தீவிர தன்மையை பொறுத்தே இருக்கும்.
பொதுவாக இந்நோய் இலேசாக ஆரம்பிக்கும் போதே எந்த சிகிச்சைகளும் இன்றி தானாகவே மறைந்து விடும்.
மிதமானத்திலிருந்து கடுமையான நிகழ்வுகளில், உங்கள் மருத்துவர் பூஞ்சை எதிர்ப்பு மருந்துகளை வாய்வழியாக உட்கொள்ளவோ அல்லது நரம்புகள் மூலமாக உட்செலுத்த பரிந்துரைப்பார்.